வரலாற்றில் இன்று – 28.04.2021 வேலையின்போது பாதுகாப்புக்கும் நலத்துக்குமான உலக தினம்

வேலைத் தொடர்பான விபத்துக்கள், நோய்கள் ஆகியவற்றின் விளைவுகள் மற்றும் தொழில் சார்ந்த பாதுகாப்பு, நலம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஐ.நா.சபை ஏப்ரல் 28ஆம் தேதி இத்தினத்தை அறிவித்தது.

அனைத்து நாடுகளிலும் தொழில் சார்ந்த பாதுகாப்பு, நலம் போன்றவற்றை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகளுக்கு உதவுவதற்காக இத்தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜான் ஹென்ரிக் ஊர்ட்

சர்வதேச வானியல் அறிஞரும், பால்வெளி குறித்த புரிதலுக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியவருமான ஜான் ஹென்ரிக் ஊர்ட் (Jan Hendrik Oort) 1900ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி நெதர்லாந்தின் ஃபிநேகர் என்ற கிராமத்தில் பிறந்தார்.

உயர்-திசை வேகம் (high-velocity) கொண்ட நட்சத்திரங்களின் பண்புகளைக் குறித்த ஆய்வுக் கட்டுரையை எழுதி 1926ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார். பால்வெளி ஒரு அசுரச் சக்கரம் போல சுழல்கிறது.

அண்டவெளியில் நட்சத்திரக்கூட்டங்கள் தனித்தனியாக பயணிக்கின்றன. அண்டவெளி மையத்திற்கு நெருக்கமாக உள்ளவை, தொலைவில் உள்ளவற்றைவிட வேகமாக சுழல்கின்றன என்பதையெல்லாம் கண்டறிந்தார்.

இந்தக் கண்டுபிடிப்புகள் மூலம் உலகம் முழுவதும் உள்ள வானியலாளர்களிடையே மிகவும் பிரபலமடைந்தார். இவரும் இவரது சகாக்களும் இணைந்து மிகப்பெரிய ரேடியோ டெலஸ்கோப் ஒன்றை உருவாக்கினார்கள்.

அதைக்கொண்டு நட்சத்திரங்கள் ஒரு குழுவாகப் பால்வெளியை முதன்மை வட்டத்தின் வெளியே சுற்றி வருகின்றன என்றார். சூரியக் குடும்பத்தின் வட்டத்திலிருந்து வால் நட்சத்திரங்கள் வருவதை 1950ஆம் ஆண்டு கண்டறிந்து கூறினார்.

ஊர்த் சிறுகோள், ஊர்த் முகில், பால்வெளிக் கட்டமைப்பின் ஊர்த் மாறிலிகள் என பல வானியல் கண்டுபிடிப்புகளுக்கும் இவரது பெயர் சூட்டப்பட்டது. வானியலில் புரட்சியை ஏற்படுத்திய ஜான் ஹென்ரிக் ஊர்ட் 1992ஆம் ஆண்டு மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

1942ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி தமிழறிஞர் உ.வே.சாமிநாதையர் மறைந்தார்.

1955ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி ஆட்டோமொபைல் துறையின் முன்னோடியான டி.வி.சுந்தரம் ஐயங்கார் மறைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!