சாத்தான்குளப் படுகொலைகளை நினைவுபடுத்துகிறார்களா? கமல் கேள்வி

 சாத்தான்குளப் படுகொலைகளை நினைவுபடுத்துகிறார்களா? கமல் கேள்வி

கோவையில் உணவகத்தில் வாடிக்கையாளர்கள், உரிமையாளரை காவலர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி முன்னதாக உணவகங்கள் 9 வரை செயல்படலாம் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தாலும் பின்னர் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட 11 மணி வரை நேரம் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் கோவை காந்திபுரம் பகுதியில் இரவு 10.30 மணியளவில் பயணிகள் சிலர் உணவகம் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் முத்து என்பவர் உணவகத்தை மூட சொல்லியதுடன், உணவருந்தி கொண்டிருந்தவர்களையும் லத்தியால் தாக்கியுள்ளார். இதுகுறித்து சிசிடிவி காட்சிகள் வைரலானதுடன், உணவக உரிமையாளரும் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதை தொடர்ந்து எஸ்.ஐ முத்து மேல் நடவடிக்கை எடுத்துள்ள காவல்துறை அவரை கட்டுப்பாட்டு அறைக்கு பணி மாற்றம் செய்து நடவடிக்கை எடுத்தது.

இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், இரவு 11 மணியைத் தாண்டி உணவகங்கள் செயல்படக்கூடாது என்பதே அரசின் ஆணை. கோவை காந்திபுரத்தில், பத்தரை மணிக்கு முன்னதாகவே போலீஸ் ஓர் உணவகத்துக்குள் புகுந்து அங்கிருந்தோரைத் தாக்குகிறது. சாத்தான்குளப் படுகொலைகளை நினைவுபடுத்துகிறார்களா? பதிலளிக்க வேண்டியது அரசு நிர்வாகத்தின் கடமை எனத் தெரிவித்துள்ளார்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...