வரலாற்றில் இன்று – 13.01.2021 ராகேஷ் ஷர்மா

 வரலாற்றில் இன்று – 13.01.2021 ராகேஷ் ஷர்மா

விண்வெளியில் பயணம் செய்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற ராகேஷ் ஷர்மா 1949ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலா மாவட்டத்தில் பிறந்தார்.

இவர் 1970ஆம் ஆண்டு இந்திய விமானப் படையில் பயிற்சி பைலட்டாகப் பணியேற்றார். ஒரு விண்வெளி வீரராக அவருடைய பயணம் 1982ஆம் ஆண்டு செப்டம்பர் 20 அன்று தொடங்கியது.

இதன் விளைவாக ராகேஷ், 1984ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி சரித்திரத்தின் சாதனைப் பக்கத்தில் இடம் பிடித்தார். பிறகு சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பைலட்டாக இருந்த அனுபவத்தின் காரணமாக 1984ஆம் ஆண்டில் விமானப் படைப்பிரிவின் ஒரு குழுவுக்கு ராகேஷ் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இவரும், ரஷ்ய விண்வெளி வீரர்கள் இருவரும் சோயுஸ் டி 11 விண்கலத்தில் விண்வெளிக்குப் பயணம் சென்றார்கள். சல்யூட் 7 என்னும் விண்வெளி மையத்தில் இவர் எட்டு நாட்கள் தங்கியிருந்தார். ராகேஷ் சர்மா அவர்களின் பணிகளை பாராட்டி அசோகச் சக்ரா விருது கிடைத்தது.

ஆர்.பாலச்சந்திரன்

கவிஞர் பாலா என அழைக்கப்படும் ஆர்.பாலச்சந்திரன் 1946ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி சிவகங்கையில் பிறந்தார்.

இவர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறைத் தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மேலும் இவர் சாகித்ய அகாடமியின் நிர்வாக்குழு உறுப்பினராக இருந்தார்.

சர்ரியலிசம், பாரதியும் கீட்சும் ஆகிய புத்தகங்கள் தமிழ் இலக்கியத்திற்கு இவரின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் ஆகும்.

கல்வியாளர், கவிஞர், எழுத்தாளர், பேராசிரியர் என பன்முகத்திறமை கொண்ட இவர் 2009ஆம் ஆண்டு மறைந்தார்.

வில்லெம் வீன்

வில்லெம் வீன் என்றழைக்கப்படும் வில்ஹெல்ம் கார்ல் வெர்னர் ஓட்டோ ஃப்ரிட்ஸ் பிரான்ஸ் வீன் 1864ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி பிரஷ்யாவில் பிறந்தார்.

இவர் வெப்பவியல், மின்காந்தவியல் துறைகளில் முக்கியக் கோட்பாடுகளை உருவாக்கியவர். 1911ஆம் ஆண்டு வெப்பக் கதிர் வீச்சு பற்றிய

ஆய்வுகளுக்காக இயற்பியல் துறையில் நோபல் பரிசு பெற்றார். இவர் 1928ஆம் ஆண்டு மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

1610ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி கலீலியோ கலிலி வியாழனின் 4வது துணைக்கோளைக் கண்டுபிடித்தார்.
1930ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி மிக்கி மவுஸ் கார்ட்டூன் துணுக்குகளாக முதன்முதலாக வெளிவரத் தொடங்கியது.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...