வரலாற்றில் இன்று – 13.11.2020 உலக கருணை தினம்

உலக கருணை தினம் நவம்பர் 13ஆம் தேதி உலகம் முழுவதும் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. இத்தினம் 1998ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

லூயிஸ் பர்பிட்-டன்ஸ் மற்றும் டேவிட் ஜாமிலி என்ற இரண்டு மனிதநேய உறுப்பினர்கள் கருணை இயக்கத்தை ஆரம்பித்தனர்.

நாடு முழுவதும் நல்ல செயல்களை முன்னிலைப்படுத்தவும், மற்றவர்களுக்கு உதவும் எண்ணத்தோடு இருக்க வேண்டும் என்பதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

பி.சுசீலா

தென்னிந்திய திரையுலகின் புகழ்பெற்ற பின்னணி பாடகி பி.சுசீலா 1935ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி ஆந்திர மாநிலத்திலுள்ள விஜயநகரத்தில் பிறந்தார்.

பள்ளியில் படிக்கும்போது இசையில் ஏற்பட்ட ஆர்வத்தால், ஆந்திராவின் புகழ்பெற்ற இசைமேதை துவாரம் வெங்கடசாமி நாயுடுவிடம் முறையாக இசை பயின்றார். 1955ஆம் ஆண்டு இவர் பாடிய ‘எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும்..’,’உன்னைக் கண் தேடுதே..’ பாடல்களால் பிரபலமடைந்தார்.

திரைப்படத்துறையில் சுமார் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசைப் பணியாற்றி வரும் இவர், சுமார் 25,000த்திற்கும் மேல் திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார்.

இவர் ஐந்து முறை தேசிய விருதும் மற்றும் பத்து முறைக்கு மேல் மாநில விருதுகள் எனப் பல்வேறு விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளார். மேலும், இந்திய அரசின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான ‘பத்ம பூஷண்’ விருதை 2008ஆம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது.

இசைப் பணியாற்றி வருவதோடு மட்டுமல்லாமல் சுசீலா அவர்கள், தன் பெயரிலேயே அறக்கட்டளை ஒன்றை நிறுவி, தேசிய அளவில் இசைத்துறையில் சாதனைப் புரிபவர்களைப் பாராட்டி விருதுகள் வழங்கி, கௌரவித்து வருகிறார்.

முக்கிய நிகழ்வுகள்

1899ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி சீன வரலாற்றாளர், ஹீவாங் சியான் புயான் பிறந்தார்.

2010ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி அமெரிக்க வானியலாளர் ஆலன் சாந்தேகு மறைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!