இன்றைய தினப்பலன்கள் (13.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

 இன்றைய தினப்பலன்கள் (13.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் அலைச்சல்களுக்கு பின்பு சாதகமாக அமையும். கண்பார்வை தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். குணநலன்களில் சில மாற்றங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : உதவிகள் கிடைக்கும்.
பரணி : கவனம் வேண்டும்.
கிருத்திகை : மாற்றங்கள் உண்டாகும்.

ரிஷபம் :

சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். தொழில் நிறுவனங்களை விரிவுப்படுத்த முயல்வீர்கள். திடீர் பணவரவுகள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர்களின் தொடர்புகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
கிருத்திகை : முயற்சிகள் அதிகரிக்கும்.
ரோகிணி : பணவரவுகள் உண்டாகும்.
மிருகசீரிஷம் : மனம் மகிழ்வீர்கள்.

மிதுனம் :

உடனிருப்பவர்களை பற்றிய புரிதலும், வாழ்க்கை பற்றிய கண்ணோட்டமும் மாறுபடும். கலை நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். அரசியல் தொடர்பான செயல்பாடுகளில் இருப்பவர்களுக்கு சக உறுப்பினர்களின் ஆதரவு மகிழ்ச்சியை உண்டாக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
மிருகசீரிஷம் : கண்ணோட்டம் மாறுபடும்.
திருவாதிரை : ஆர்வம் அதிகரிக்கும்.
புனர்பூசம் : புத்துணர்ச்சியான நாள்.

கடகம் :

உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் அமையும். கால்நடைகள் வளர்ப்பு தொழிலில் இருப்பவர்களுக்கு இலாபம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்விற்கான சுபச்செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.
பூசம் : இலாபம் அதிகரிக்கும்.
ஆயில்யம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.

சிம்மம் :

புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் மீது ஈடுபாடு அதிகரிக்கும். மனதில் தோன்றும் எண்ணங்களை செயல்வடிவமாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மனை விற்பனையாளர்களுக்கு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மகம் : ஈடுபாடு அதிகரிக்கும்.
பூரம் : முயற்சிகள் மேம்படும்.
உத்திரம் : வாய்ப்புகள் உண்டாகும்.

கன்னி :

இளைய சகோதரர்களின் மூலம் புதிய பயணமும், அனுபவ வாய்ப்புகளும் ஏற்படும். வாடிக்கையாளர்களுக்கு உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். தம்பதியர்களுக்கிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திரம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
அஸ்தம் : விழிப்புணர்வு வேண்டும்.
சித்திரை : கருத்து வேறுபாடுகள் மறையும்.

துலாம் :

மற்றவர்கள் கூறும் கருத்துக்களை நிதானத்துடன் கேட்பது உங்களின் மீதான நற்பெயர்களை மேம்படுத்தும். எதிலும் விரைவாக செயல்படுவதன் மூலம் பொருளாதார மேன்மை உண்டாகும். மனதில் தோன்றும் தேவையற்ற சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
சித்திரை : நிதானத்துடன் செயல்படவும்.
சுவாதி : மேன்மை உண்டாகும்.
விசாகம் : காலதாமதம் ஏற்படும்.

விருச்சிகம் :

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்துவந்த பணவரவுகள் கிடைக்கும். ஆரோக்கியமான விவாதங்கள் நெருக்கமானவர்களிடம் ஏற்பட்டு மறையும். வாகனப் பயணங்களில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். பொழுதுபோக்கு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வமும், அதில் அதிக நேரத்தையும் செலவு செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : பணவரவுகள் கிடைக்கும்.
அனுஷம் : விவாதங்கள் மறையும்.
கேட்டை : கவனம் வேண்டும்.

தனுசு :

உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்களால் ஆதாயம் ஏற்படும். ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் மனம் ஈடுபடும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆடம்பர பொருட்களின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகளும், செலவுகளும் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மூலம் : முன்னேற்றம் உண்டாகும்.
பூராடம் : ஆதரவு கிடைக்கும்.
உத்திராடம் : நெருக்கடியான நாள்.

மகரம் :

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய அதிகாரிகளுக்கு உங்களின் மீதான மதிப்புகள் உயரும். சிலருக்கு ஆபரணச்சேர்க்கை உண்டாகும். திருமணத்திற்கு வரன் தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
உத்திராடம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
திருவோணம் : உதவிகள் கிடைக்கும்.
அவிட்டம் : வாய்ப்புகள் உண்டாகும்.

கும்பம் :

கௌரவ பதவிகளால் மதிப்புகள் உயரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். சவாலான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். பொருளாதார நிலை உயரும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
அவிட்டம் : மதிப்புகள் உயரும்.
சதயம் : ஒத்துழைப்பு மேம்படும்.
பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.

மீனம் :

செய்யும் பணியில் மற்றவர்களின் விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடலாம். நண்பர்களிடம் உரையாடும்போது பேச்சுக்களில் கவனம் வேண்டும். நிர்வாகம் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்படுவது ஆதரவை மேம்படுத்தும். எதிர்பாராத சில செயல்களின் மூலம் விரயங்களும், மனவருத்தங்களும் நேரிடலாம்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
பூரட்டாதி : கவனம் தேவை.
உத்திரட்டாதி : பொறுமை வேண்டும்.
ரேவதி : மனவருத்தங்கள் நேரிடலாம்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...