வரலாற்றில் இன்று – 18.09.2020 உலக மூங்கில் தினம்

 வரலாற்றில் இன்று – 18.09.2020 உலக மூங்கில் தினம்

உலக மூங்கில் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 18ஆம் தேதி உலகளவில் கொண்டாடப்படுகிறது.

மூங்கில் பச்சைத் தங்கம் என்றும், ஏழைகளின் மரம் என்றும், வனவாசிகளின் வாழ்வாதாரம் என்றும் அழைக்கப்படுகின்றது.

மற்ற மரங்களைக் காட்டிலும் மூங்கில் மரம் அதிகளவு கரியமில வாயுவை (கார்பன் டை ஆக்சைட்) எடுத்துக்கொண்டும், அதிக அளவிலான பிராண வாயுவை (ஆக்சிஜன்) வெளியேற்றும் தன்மை கொண்டது. மூங்கில் அதிகமாக வளர்ந்த இடம் குளிர்ச்சியாக இருக்கும்.

இயற்கை, இந்தியாவிற்கு கொடுத்த கொடை ‘மூங்கில்’. இதை மத்திய அரசாங்கம் ‘தேசிய மூங்கில் இயக்கம்’ (National Bamboo Mission) என்ற இயக்கத்தின் மூலம் பிரபலப்படுத்துகிறது.

உலக தண்ணீர் கண்காணிப்பு தினம்

உலக தண்ணீர் கண்காணிப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 18ஆம் தேதி உலகளவில் கொண்டாடப்படுகிறது.

உலகம் முழுவதும் தண்ணீர் வளங்களைப் பாதுகாப்பதில் பொது விழிப்புணர்வு மற்றும் ஈடுபாட்டை உருவாக்க வேண்டும். உள்ள10ர் நீர்நிலைகளின் அமிலத்தன்மை, காரத்தன்மை ஆகியவற்றை பரிசோதித்து பார்த்து, நீரின் தரம் குறையாமல் பாதுகாத்திட வேண்டும். மேலும், தண்ணீரை கண்காணிக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்காவின் Clean Water Foundation இத்தினத்தை 2003ஆம் ஆண்டு அறிவித்தது.

சாமுவேல் ஜான்சன்

ஆங்கில அகராதியை முதன்முதலில் உருவாக்கிய சாமுவேல் ஜான்சன் 1709ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார்.
ஆங்கிலேய இலக்கியத்திற்கு பெரும் பங்காற்றிய ஆங்கிலேயக் கவிஞரும், எழுத்தாளரும், கட்டுரையாளரும், இலக்கியத் திறனாய்வாளரும், வாழ்க்கை வரலாற்றாளரும், இதழாசிரியரும், அகராதியியலாளரும் ஆவார். இவரது அகராதி 1755ஆம் ஆண்டில் வெளியானது.

ஆக்சுபோர்டு ஆங்கில அகராதி வெளிவரும் வரை, ஜான்சனின் அகராதியே பிரித்தானியாவில் முதன்மை அகராதியாக விளங்கி வந்தது. இவர் 1784ஆம் ஆண்டு மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

1783ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி புகழ்பெற்ற கணிதவியலாளர் லியோனார்டு யூலர் மறைந்தார்.

1809ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி லண்டனில் ராயல் ஒப்பேரா மாளிகை திறக்கப்பட்டது.

1851ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி நியூயார்க் டைம்ஸ் இதழ் முதன்முதலில் வெளியிடப்பட்டது.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...