டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக சந்தானம்: வைரலாகும் பழைய வீடியோ

சந்தானம் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக தன் கெரியரை துவங்கியவர் சந்தானம். லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். சின்னத்திரையில் கலக்கி வந்த நேரத்தில் சிம்புவின் மன்மதன் படம் மூலம் பெரியதிரையில் அறிமுகமானார் சந்தானம். ஹீரோக்களுக்கு நண்பனாக நடித்து காமெடி செய்து மக்களை சிரிக்க வைத்தார்.

பல படங்களில் ஹீரோக்களுக்கு இணையான கதாபாத்திரங்களிலும் நடித்தார். வித்தியாசமாக காமெடி செய்வது தான் சந்தானத்தின் ஸ்பெஷல். சந்தானம் காமெடி செய்து வாங்கிய சம்பளத்தை பார்த்து கோலிவுட்டில் பல ஹீரோக்களே வயித்தெரிச்சல் அடைந்த சம்பவம் எல்லாம் நடந்திருக்கிறது.

அந்த அளவுக்கு வெற்றிகரமான நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டிருந்தார் சந்தானம். நகைச்சுவை நடிகர்கள் பெரிய ஆளாக வளர்ந்த பிறகு ஹீரோவாக நடிப்பது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் ஒரு சுபயோக சுபதினத்தில் சந்தானமும் ஹீரோவானார்.

சந்தானம் தயாரித்து நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஐ படத்தில் சந்தானம் நடித்தார். ஐ படத்திற்கு பிறகு நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடித்துக் கொண்டிருக்கிறார்.

ஹீரோவாக நடிப்பதுடன் படங்களை தயாரிக்கவும் செய்கிறார். தயாரிப்பாளர் மற்றும் ஹீரோ அவதாரம் எடுத்த பிறகு சந்தானம் பல சிக்கல்களில் சிக்கினார். என்ன கஷ்டம் வந்தாலும் மீண்டும் பிற ஹீரோக்களின் படங்களில் காமெடி செய்ய மாட்டவே மாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கிறார். சந்தானம் ஹீரோவான நேரத்தில் சூரி, யோகி பாபு காட்டில் தான் மழை. அவர்கள் இருவருக்கும் வாய்ப்புகள் வந்து குவிகிறது. ஆனாலும் சந்தானம் தங்கள் படங்களில் காமெடி செய்ய வேண்டும் என்று சில ஹீரோக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

சந்தானம் மட்டும் கொஞ்சம் இறங்கி வந்து பிற ஹீரோக்களின் படங்களிலும் நடித்தார் என்றால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். சந்தானம் ஹீரோவாகவும், காமெடியனாகவும் வலம் வந்தால் அவர் வாங்கும் சம்பளத்தை பார்த்து பிற ஹீரோக்கள் மீண்டும் வயித்தெரிச்சல் படக்கூடும். ஆனால் சந்தானம் தான் பிடிவாதமாக இருக்கிறார்.

https://twitter.com/Mugavarii/status/1283667838738128896?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1283667838738128896%7Ctwgr%5E&ref_url=https%3A%2F%2Ftamil.samayam.com%2Ftamil-cinema%2Fmovie-news%2Funseen-video-of-santhanam-as-vj-is-doing-rounds-on-social-media%2Farticleshow%2F77010865.cms

இந்நிலையில் சந்தானம் பல ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கியபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. நான் நல்லா இருக்கிறது புடிக்கலையா உங்களுக்கு, என்னை போய் ஹீரோவா போட்டு படம் எடுக்கிறேனு சொல்றீங்களே என சந்தானம் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சந்தானத்தின் வித்தியாசமான காமெடிகளை மிஸ் பண்ணுவதாக தெரிவித்துள்ளனர். சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து முன்னணி ஹீரோவாகலாம் என்று சிவகார்த்திகேயன் நிரூபித்துவிட்டார்.

அதே சமயம் சின்னத்திரையில் இருந்து வந்து முன்னணி நகைச்சுவை நடிகராகலாம், விரும்பினால் ஹீரோவும் ஆகலாம் என்பதை சந்தானம் நிரூபித்து காட்டியுள்ளார். தமிழ் திரையுலகிலும் வாரிசுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டாலும் திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் முன்னேறலாம் என்பதற்கு சந்தானமும் ஒரு எடுத்துக்காட்டு.

கெரியரை பொறுத்த வரை சந்தானம் கார்த்திக் யோகி இயக்கத்தில் டிக்கிலோனா படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் அவர் ஹீரோ, வில்லன், காமெடியன் என்று மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். படத்தின் மூன்று வித்தியாசமான போஸ்டர்கள் கடந்த மாதம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!