கலிங்கத்துப்பரணி-பாடல்

பன்னிரண்டாம் நூற்றாண்டில் ​செயங்​கொண்டாரால் பாடப்பட்டது கலிங்கத்துப்பரணி. கலிங்க நாட்டு அரசன் அனந்தவன்மனை வெற்றி கொண்ட போர்தான் கலிங்கப்போர்.

இன்றைய ஓரிஸ்ஸாவின் கீழ்ப்பகுதிதான் கலிங்க நாடாக விளங்கியது.  பரணி என்றால் போரில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனைப் பாடும் பாடல் என்று பொருள்.கருணாகர தொண்டைமான் என்ற தளபதியைக் கொண்டு முதல் கு​லோத்துங்க​சோழன் அனந்தவன்மனை வென்ற கலிங்கப் போரைப் பற்றியதே கலிங்கத்துப்பரணி. இவன் தொண்டை நாட்டை ஆண்டு வந்த பல்லவஅரசன் ஆவான். சோழ மாமன்னனான குலோத்துங்கனுக்கு உட்பட்ட சிற்றரசர்களில் ஒருவனாய் நெருங்கிய நண்பனாகவும் இருந்திருக்கிறான். இந் நட்பு காரணமாகவே குலோத்துங்கன் காஞ்சியில் வந்து படைகளுடன் தங்கினான் என்பர். கருணாகரன் கலிங்கப் போருக்குப் படைத்தலைவனாய்ப் புறப்படும் போது, இவனுடைய தமையனும் குலோத்துங்க சோழனின் நன்பனுமாகிய பல்லவனும் உடன் சென்றான் எனக் குறிக்கப்படுகிறது.
“தொண்டையர்க் கரசு முன்வ ருஞ்சுரவிதுங்க வெள்விடை உயர்த்த கோன்வண்டையர்க்கரசு பல்லவர்க்கரசுமால் களிற்றின் மிசை கொள்ளவே” — (பாடல். 364)

என்ற பாடலால் இதை அறியலாம். தமையன் தொண்டை நாட்டை ஆள, குலோத்துங்கனுக்குப் படைத் தலைவனாய் அமைந்த கருணாகரன், வண்டைநகரின் கண் இருந்த பகுதியை ஆட்சி செய்தான் என அறியலாம். இவன் வண்டையர்க்கரசு என்றே பல இடங்களில் குறிப்பிடப்படுகிறான். வண்டை நகர் அக்காலத் தொண்டை நாட்டில் சிறந்திருந்த நகரங்களில் ஒன்று. இக்காலத்தில் சென்னைக்கு அருகில் உள்ள வண்டலூர் வண்டை நகராக இருக்கலாம் எனக் கூறுகின்றனர். அக்காலத்தில் வண்டைநகர், மல்லை, மாமல்லபுரம், காஞ்சி, மயிலை (மயிலாப்பூர்) என்பன சிறந்த பட்டினங்கள் எனவும் அவை அடங்கிய நாடே தொண்டை நாடு
அதன் சிறப்புத​னை கலிங்கத்துப் பரணி பாடலில் அறியலாம்

அலகில் செருமுதிர் பொழுது வண்டையர்அரச னரசர்கள் நாதன் மந்திரி

உலகு புகழ் கருணாகரன்றன தொருகையிருபணை வேழ முந்தவே!2

கடற்கலிங்க மெறிந்துசயத் தம்ப நாட்டிக்கடகரியுங் குவிதனமுங் கவர்ந்து தெய்வச்

சுடர்ப்படைவா ளபயனடி யருளி னோடுஞ்சூடினான் வண்டையர்கோன் தொண்டை மானே3

வண்டை வளம்பதி பாடிரேமல்லையுங் கச்சியும் பாடிரே

பண்டை மயிலையும் பாடிரேபல்லவர் தோன்றலைப் பாடிரே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!