வரலாற்றில் இன்று – 07.07.2020 மகேந்திரசிங் தோனி
இந்திய கிரிக்கெட் வீரரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான தோனி 1981ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி பீஹார், ராஞ்சியில் (தற்போது ஜார்கண்டில் உள்ளது) பிறந்தார்.
இவரது தலைமையின்கீழ் இந்தியா 2007ஆம் ஆண்டு ஐசிசி டி20 உலகக்கோப்பை, சிபி தொடர் (CB Series) மற்றும் 2008ல் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய பார்டர்-கவாஸ்கர் டிராபி ஆகியவற்றை வென்றது.
2008 மற்றும் 2009ஆம் ஆண்டு ஐசிசி-யின் சர்வதேச ஒருநாள் விளையாட்டு வீரர் விருது (ICC ODI Player of the Year), ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது மற்றும் 2009ல் பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
தோனி தலைமையிலான இந்திய அணி 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் உலகக்கோப்பையை வென்றது.
ருடால்ஃப் உல்ஃப்
வானியல் ஆராய்ச்சியாளரும் கணித வல்லுநருமான ருடால்ஃப் உல்ஃப் (Rudolf Wolf) 1816ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி சுவிட்சர்லாந்தில் பிறந்தார்.
சூரியப் புள்ளி சுழற்சிக்கும், பூமியின் காந்தசக்தி செயல்பாட்டுக்கும் உள்ள தொடர்பை கண்டறிந்தவர்களில் ஒருவராவார். இவர் சூரியப் புள்ளி சுழற்சிக் காலம் என்பது 11.1 ஆண்டுகள் என்றும் துல்லியமாக கணித்தார்.
சூரியனின் செயல்பாடுகளை அளவிடும் முறையான உல்ஃப்ஸ் சன்ஸ்பாட் நம்பர்ஸ் இவரால் கண்டறியப்பட்டது. அறிவியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய ருடால்ஃப் உல்ஃப் 1893ஆம் ஆண்டு மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1978ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி சொலமன் தீவுகள் ஐக்கிய இராஜ்ஜியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
2007ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி புதிய ஏழு உலக அதிசயங்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.