இன்றைய தினப்பலன்கள் (08.07.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

 இன்றைய தினப்பலன்கள் (08.07.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம்

வியாபாரத்தில் எதிர்பாராத இலாபம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். சூழ்நிலைக்கு ஏற்றார் போல் அனைவரையும் அனுசரித்து செல்லவும். மனதில் இனம்புரியாத பயம், கவலை வந்து போகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அஸ்வினி : இலாபம் கிடைக்கும்.
பரணி : அனுபவம் உண்டாகும்.
கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.

ரிஷபம்

உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதில் இருக்கும் ஆசைகள் நிறைவேறும். நட்பு வட்டாரம் விரிவடையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
கிருத்திகை : பாராட்டப்படுவீர்கள்.
ரோகிணி : அன்யோன்யம் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : ஆசைகள் நிறைவேறும்.

மிதுனம்

வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் இலாபம் உண்டாகும். புதிய பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். கோபத்தை குறைத்து நிதானத்துடன் செயல்படவும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மயில்நீலம்
மிருகசீரிஷம் : இலாபம் உண்டாகும்.
திருவாதிரை : உற்சாகம் பிறக்கும்.
புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

கடகம்

தாயாரின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். தொழில் தொடர்பான மனக்குழப்பங்கள் குறையும். பணிகளை சிறிது அலைச்சலுக்கு பின் செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
புனர்பூசம் : கவனம் வேண்டும்.
பூசம் : மாற்றம் உண்டாகும்.
ஆயில்யம் : குழப்பங்கள் குறையும்.

சிம்மம்

வெளிவட்டார நபர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைக்கேற்ப உயர்வு உண்டாகும். மனைவிவழி உறவினர்களின் மூலம் எதிர்பார்த்த ஒத்துழைப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மகம் : அனுகூலமான நாள்.
பூரம் : உயர்வு உண்டாகும்.
உத்திரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

கன்னி

எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உங்களின் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
உத்திரம் : அறிவு வெளிப்படும்.
அஸ்தம் : வெற்றி கிடைக்கும்.
சித்திரை : ஆதரவான நாள்.

துலாம்

குடும்பத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் உயரும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : மரியாதை உயரும்.
சுவாதி : சுபகாரியங்கள் கைகூடும்.
விசாகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

விருச்சிகம்

உத்தியோகத்தில் எதிர்பாராத பொறுப்புகள் உயரும். மாமன் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் குறையும். மனதிற்கு பிடித்த புதிய பொருட்களை வாங்குவீர்கள். மனதில் எதையும் சமாளிக்கும் திறமையும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
விசாகம் : பொறுப்புகள் உயரும்.
அனுஷம் : மனக்கசப்புகள் குறையும்.
கேட்டை : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

தனுசு

வியாபாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான சூழல் ஏற்படும். குழந்தைகளின் வழியில் ஏற்பட்ட பிரச்சனைகள் தீரும். சிலருக்கு வீடு மாற்றம் அல்லது உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். பழைய நினைவுகளால் செயல்பாடுகளில் காலதாமதம் நேரிடலாம்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மூலம் : அபிவிருத்தி உண்டாகும்.
பூராடம் : பிரச்சனைகள் தீரும்.
உத்திராடம் : சிந்தனைகள் மேலோங்கும்.

மகரம்

இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான சூழல் உண்டாகலாம். குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும். உத்தியோகத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
உத்திராடம் : காரியசித்தி உண்டாகும்.
திருவோணம் : கலகலப்பான நாள்.
அவிட்டம் : நம்பிக்கை அதிகரிக்கும்.

கும்பம்

பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற எண்ணங்கள் மேம்படும். அரசு தொடர்பான பணிகளால் அனுகூலம் உண்டாகும். மறைமுகப் போட்டிகள் விலகும். பாகப்பிரிவினைகள் சாதகமாக முடியும். தொலைபேசி வழியாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
அவிட்டம் : எண்ணங்கள் மேம்படும்.
சதயம் : அனுகூலம் உண்டாகும்.
பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.

மீனம்

கொடுக்கல்-வாங்கல்களில் இருந்த குழப்பங்கள் மறையும். பெரிய மனிதர்களின் சந்திப்பால் ஆசைகள் நிறைவேறும். எதிர்பாராத செய்திகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும். பெற்றோர்களின் ஆதரவு மனமகிழ்ச்சியை அளிக்கும். பிரிந்து சென்றவர்கள் நெருங்கி வருவார்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
பூரட்டாதி : குழப்பங்கள் மறையும்.
உத்திரட்டாதி : ஆசைகள் நிறைவேறும்.
ரேவதி : மனமகிழ்ச்சி உண்டாகும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...