செட்டிநாடு மட்டன் சுக்கா – வெங்கடேஷ் ஆறுமுகம்

 செட்டிநாடு மட்டன் சுக்கா – வெங்கடேஷ் ஆறுமுகம்

தேவையானவை :
எலும்பில்லாத மட்டன் – 1/2 கிலோ,
சின்ன வெங்காயம் (நறுக்கியது) -20,
நறுக்கிய தக்காளி – 1,
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்,
நறுக்கிய பூண்டுப்பற்கள் – 5,
தனியாத்தூள் – 3 டீஸ்பூன்,
வரமிளகாய்த்தூள் -3 டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் : 150மிலி,
உப்பு: தேவைக்கேற்ப..

(இது அரைக்கிலோவிற்கு… கால்கிலோ எனில் அனைத்தையும் பாதியாக குறைத்துக் கொள்ளவும்)

அரைப்பதற்கு :
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,
கசகசா & சோம்பு – தலா 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு :
பிரியாணி இலை – 2,
சோம்பு – 1 டீஸ்பூன்,
கிராம்பு – 2,
பட்டை – சிறு துண்டு,
கறிவேப்பிலை – ஒரு சிறு கொத்து.

செய்முறை :
நறுக்கிய வெங்காயம், பூண்டுப்பல்,மட்டன் ஆகியவற்றை குக்கரில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு சேர்த்து வதக்கவும்.. தனியாத்தூள் 1 டீஸ்பூன், வரமிளகாய்த்தூள், சிறிது உப்பு சேர்த்து வதக்கி தேவையான நீர் சேர்த்து வேகவைக்கவும்.

வெந்ததும்.. வெந்த கறி & வேக வைத்த தண்ணீர் தனித்தனியாக வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து இஞ்சி & பூண்டு பேஸ்ட், தக்காளி, வெங்காயம் இதர தூள்களோடு உப்பு சேர்த்து வதக்கவும்.

பின்பு அரைத்த தேங்காய் பேஸ்ட் கறி வேகவைத்த தண்ணீர் சேர்த்து சிறியதாக நெருப்பில் வைத்து கொதிக்கவிடவும்.அடிக்கடி கிளறி விடவும் இல்லாவிட்டால் அடி பிடிக்கும். கிரேவி திக்கானதும் வேகவைத்த மட்டனை சேர்த்து நன்கு சுருளாக பிரட்டி கிளறி இறக்கவும். கமகம செட்டி நாடு சுக்கா வருவல் ரெடி, சாதம், சப்பாத்தி, ரொட்டி எல்லாவற்றிற்கும் இது செம காம்போ!

இதிலேயே மட்டனை கிளறும் போது தேங்காய் பத்தைகள் நறுக்கி சேர்த்தால் பள்ளிப்பாளையம் ஸ்டைல் சுக்கா ரெடி.!

தம்பதிகள் தினமாமே அதனால் குடும்பத்தோட புகைப்படம் போட்டாச்சு…

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...