பெண் அவள் பேதையல்ல – ஜெ.ஜீவா ஜாக்குலின்
பெண்ணே……………
நதி என்பர் உன்னை
நாணிக்கோணாதே
பூமி என்பர் உன்னை
பூரித்து போகாதே
மலை என்பர் உன்னை
மலைத்து போகாதே
கடல் என்பர் உன்னை
கசிந்து உருகாதே
பாவையல்ல நீ
பதுங்கி போக
உயிரோட்டம் நீ
உணர்வுகளை வெளிபடுத்து
பெண்ணீயம் பித்தளை
பேசவில்லை
உணர்வுகளையே …..
திருமணம் செய்ய
அழகான பெண் சீரோடு வேணும்
சிறப்பாக அவளை நடந்த
முடியாது
படித்த பெண் வேணும்
பண்பாக பார்க்க தெரியாது
பிறந்த வீட்டின்
பொக்கிஷம் அவள்
புகுந்து வீட்டில்
பேசாமடந்தையா……….
திடம் கொள்ளடி பெண்ணே
திருப்பி அடி
முள்ளை முள்ளால் எடு
அடிக்கு அடிதான் தீர்வு
மனதுக்குள் வைத்து மருகாதே
நெஞ்சில் புதைக்காதே
பொங்கி எழு பூகம்பமாகட்டும்
தென்றலின் மறுபெயர்
புயலென அறிக
கண்ணே காவியமே
தீதும் நன்றும் பிறர் தர வாரா ………..
புரிந்து கொள்
புறப்பட வீறு நடை போடு
பரந்த உலகம்
பரவசத்துடன் அணைக்க காத்திருக்கு…….
———————————————————————————–
ஜெ.ஜீவா ஜாக்குலின்
கடலூர்