“கறி இட்லி” – வெங்கடேஷ் ஆறுமுகம்

 “கறி இட்லி” – வெங்கடேஷ் ஆறுமுகம்

கறி செய்முறை

தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத மட்டன் (கழுத்துக்கறியாக வாங்கவும்) – 1/4கிலோ
சின்ன வெங்காயம் – 20
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – ஒன்றரை தேக்கரண்டி
மல்லித் தூள் – 1 தேக்கரண்டி
பூண்டு – 12 பற்கள்
சிறிய தக்காளி – 2
திக்கான தேங்காய்ப் பால் – 3 மேசைக் கரண்டி
உப்பு – தேவையான அளவு

தாளிக்க:
ஏலக்காய் -2
கிராம்பு – 3
பிரியாணி இலை – கொஞ்சம்
சோம்பு – 3/4தேக்கரண்டி
பட்டை – சிறு துண்டு
கறிவேப்பிலை – தேவைக்கு
எண்ணெய் – 2 தேக்கரண்டி

செய்முறை: இறைச்சியை சிறிய துண்டுகளாக வெட்டி (ஜெம்ஸ் மிட்டாயை விட கொஞ்சம் பெரிதாக) அதை சுத்தமாக அலசி தனியாக வைக்கவும்.ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் இக்கறித் துண்டுகளைப் போட்டு, மஞ்சள் தூள், சிறிது மிளகாய் தூள், உப்பு அனைத்தும் சேர்த்து கறியின் நிறம் மாறும் வரை நன்கு கிளறவும்.

பின் அதில் சிறிது நீர் ஊற்றி, மிதமான தீயில் வைத்து 6விசில் வந்ததும் இறக்கவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து தாளித்து, பின்பு பூண்டு & வெங்காயம், சேர்த்து பொன்னிறத்தில் வதக்கவும்.

பிறகு தக்காளியைச் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி, பின் மீதமுள்ள மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து கிளறி, வேக வைத்துள்ள கறியுடன் நீருடன் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

கறியில் உள்ள தண்ணீர் வற்றியதும், அதில் தேங்காய்ப்பால் சேர்த்து, தேங்காய்ப்பாலும் வற்றும்படி நன்கு கிளறவும் இறக்கினால் கமகமக்கும் மட்டன் சுக்கா தயார்.

கறி இட்லி : இட்லி மாவு தட்டில் ஊற்றும் போது அரை கரண்டி மாவு ஊற்றி இந்த மட்டனில் ஒரு ஸ்பூன் எடுத்து மாவில் பரவலாக போட்டு அதன் மேல் மீதி மாவை ஊற்றி அவித்து எடுத்தால் சுவையான பூப்போன்ற கறி இட்லி தயார்.! இட்லியை பிய்த்தால் உள்ளே கறி இருக்கும் தேங்காய் சட்னியே இதற்கு போதும். இருப்பினும் இதற்கு மட்டன் குழம்பே மிகச் சிறந்த சைட்டிஷ்!

கறி இட்லி எக் ஃப்ரை : முதலிலேயே வெறும் இட்லிகளை வேக வைத்து எடுத்து அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி (ஃப்ரை இட்லி போல) மேலே கூறிய கறி சமைக்கும் முறையில் தேங்காய்ப் பால் வற்றும் வேளையில் வெட்டி வைத்த இட்லியை சுக்காவில் கொட்டிக் கிளறவும் அதோடு இரண்டு முட்டைகளை அடித்து ஊற்றி பெப்பர் தூவி இறக்கினால் கறி இட்லி ஃப்ரை ரெடி! எந்த சைட் டிஷ்ஷும் இன்றி ஹார்லிக்ஸ் குழந்தை போல அப்படியே சாப்பிடலாம்!

வெங்கடேஷ் ஆறுமுகம் அவர்கள் தன் துணைவியாருடன்…

கமலகண்ணன்

1 Comment

  • nalla dish try pannalam easy ah

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...