வரலாற்றில் இன்று – 26.05.2020 – மனோரமா

 வரலாற்றில் இன்று – 26.05.2020 – மனோரமா

ஆச்சி என்று அன்போடு அழைக்கப்படும் மனோரமா அவர்கள் 1937ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி மன்னார்குடியில் பிறந்தார். இவரது இயற்பெயர் கோபிசாந்தா.

தமிழ் திரையுலக முதல்வர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநில முதல்வர் என்.டி.ஆர் ஆகியோருடன் நடித்த பெருமைக்குரியவர்.

1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். இவர் கலைத் துறைக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக பத்மஸ்ரீ, கலைமாமணி, தேசிய விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, எனப் பல விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளார்.

இந்தியத் திரைப்படத்துறையில் மாபெரும் சாதனைப் படைத்த மனோரமா 2015ஆம் ஆண்டு மறைந்தார்.

சாலி ரைட்

அமெரிக்க இயற்பியலாளர் மற்றும் விண்வெளி வீரரான சாலி ரைட் 1951ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் பிறந்தார்.

இவர் 1978ஆம் ஆண்டு நாசாவில் சேர்ந்தார். மேலும், 1983ஆம் ஆண்டு விண்வெளியில் கால்பதித்த முதல் அமெரிக்க பெண் என்ற வரலாற்றை படைத்தார். இவர் மொத்தம் 343 மணி நேரம் விண்வெளியில் இருந்துள்ளார்.

ஆர்பிட்டர் சேலஞ்சரில் இரண்டு முறை பறந்து சென்ற பிறகு, இவர் 1987ஆம் ஆண்டு நாசாவை விட்டுச் சென்றார். பிறகு, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் சர்வதேச பாதுகாப்பு மற்றும் ஆயுத கட்டுப்பாட்டு மையத்தில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார்.

தேசிய வீராங்கனையாக மதிக்கப்படும் இவர் 2012ஆம் ஆண்டு மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

1969ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி, அப்பல்லோ 10 விண்கலம் மனிதனை சந்திரனுக்கு அனுப்பும் தனது அடுத்த திட்டத்திற்கு தேவையான சோதனைகளை வெற்றிகரமாக முடித்து விட்டு பூமி திரும்பியது. 1989ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி பன்மொழிப்புலவர் தமிழறிஞர் கா.அப்பாத்துரை மறைந்தார்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...