இன்றைய தினப்பலன்கள் (27.05.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

 இன்றைய தினப்பலன்கள் (27.05.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

செய்யும் வேலைகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். கொடுக்கல்-வாங்கலில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் சாதகமான பலன் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : இலாபம் உண்டாகும்.
பரணி : சுபச்செய்திகள் கிடைக்கும்.
கிருத்திகை : சாதகமான நாள்.

ரிஷபம் :

எதிர்காலம் தொடர்பான புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். மனதில் உள்ள சில பழைய நினைவுகளால் சிறு குழப்பங்கள் தோன்றி மறையும். பொருளாதார முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகத்தில் முயற்சிக்கேற்ற பலன்கள் காலதாமதமாக கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
கிருத்திகை : குழப்பமான நாள்.
ரோகிணி : முன்னேற்றம் உண்டாகும்.
மிருகசீரிஷம் : காலதாமதம் ஏற்படும்.

மிதுனம் :

உடனிருப்பவர்களால் சாதகமான பலன்கள் உண்டாக்கும். தம்பதியினருக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். பொருளாதார சிக்கல்கள் குறைவதற்கான வாய்ப்புகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மிருகசீரிஷம் : சாதகமான நாள்.
திருவாதிரை : ஒற்றுமை அதிகரிக்கும்.
புனர்பூசம் : சிக்கல்கள் குறையும்.

கடகம் :

எதிர்பாலின மக்களிடம் நிதானமாக செயல்படவும். பலவிதமான எண்ணங்களிலிருந்து தெளிவு கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் வாதங்களை தவிர்க்கவும். பூர்வீகம் தொடர்பான சுபச்செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள். பணிபுரியும் இடத்தில் புதிய வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
புனர்பூசம் : நிதானம் வேண்டும்.
பூசம் : தெளிவு கிடைக்கும்.
ஆயில்யம் : வாய்ப்புகள் உண்டாகும்.

சிம்மம் :

கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் நல்ல முன்னேற்றத்தை அளிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் சாதகமான சூழல் அமையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் காலதாமதமாக கிடைக்கும். நினைவாற்றல் மந்தப்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மகம் : முன்னேற்றமான நாள்.
பூரம் : சிந்தித்து செயல்படவும்.
உத்திரம் : இலாபம் காலதாமதமாகும்.

கன்னி :

எதிர்பாராத உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் அமையும். திருமண முயற்சிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். திட்டமிட்ட காரியங்களை முழு ஈடுபாட்டுடன் செயல்படுத்துவீர்கள். புதிய எண்ணங்கள் மனதில் உண்டாகும். கடன்களை குறைப்பதற்கான முயற்சிகள் கைகூடும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.
அஸ்தம் : முடிவுகள் கிடைக்கும்.
சித்திரை : முயற்சிகள் கைகூடும்.

துலாம் :

புதிய தொழில் சம்பந்தமான முயற்சிகள் மற்றும் எண்ணங்கள் மேலோங்கும். உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சம்பந்தமான குறைபாடுகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். கால்நடைகளின் மூலம் இலாபம் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : முயற்சிகள் மேலோங்கும்.
சுவாதி : ஆதாயம் உண்டாகும்.
விசாகம் : புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

விருச்சிகம் :

சிறு தூர பயணங்களின் மூலம் இலாபம் மற்றும் தொழில் வாய்ப்புகள் உண்டாகும். கௌரவ பதவிகளால் உங்களின் மதிப்பு உயரும். தந்தைவழி உறவுகளால் உதவிகள் கிடைக்கும். எழுத்துத்துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
விசாகம் : இலாபம் மேம்படும்.
அனுஷம் : மதிப்பு உயரும்.
கேட்டை : முன்னேற்றம் உண்டாகும்.

தனுசு :

செய்யும் வேலைகளில் மந்தத்தன்மையால் காலதாமதம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். குணநலன்களில் மாற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மூலம் : காலதாமதம் உண்டாகும்.
பூராடம் : அனுசரித்து செல்லவும்.
உத்திராடம் : நெருக்கடியான நாள்.

மகரம் :

சுபநிகழ்ச்சிகளால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். மனதில் நினைத்த எண்ணங்கள் ஈடேறும். தொழிலில் கூட்டாளிகளிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். பழைய நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் சாதகமான பலன்கள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
திருவோணம் : எண்ணங்கள் ஈடேறும்.
அவிட்டம் : வாதங்களை தவிர்க்கவும்.

கும்பம் :

உடன்பிறப்புகளிடம் கனிவுடன் நடந்து கொள்ளவும். உத்தியோகத்தில் திறமைக்கேற்ற முன்னேற்றம் உண்டாகும். உறவினர்களால் சுபச்செலவுகள் ஏற்படும். மக்கள் தொடர்பு பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். மற்றவர்களுக்கான வேலைகளையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
அவிட்டம் : கனிவு வேண்டும்.
சதயம் : முன்னேற்றம் உண்டாகும்.
பூரட்டாதி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

மீனம் :

குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் மற்றும் வியூகங்கள் அமைத்து அதை செயல்படுத்துவீர்கள். சபை தொடர்பான பணிகளில் ஆதரவான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : விருப்பங்கள் நிறைவேறும்.
உத்திரட்டாதி : திட்டங்கள் ஈடேறும்.
ரேவதி : ஆதரவான நாள்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...