இன்றைய (21-05-2020) ராசி பலன்கள்பலன்கள் – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம்

கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு அவ்வப்போது பழைய நினைவுகளால் மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அஸ்வினி : இன்பமான நாள்.
பரணி : அன்பு அதிகரிக்கும்.
கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.

ரிஷபம்

வேலை தொடர்பான முக்கிய முடிவுகளில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த காரியங்கள் முடிவதில் தாமதம் நேரிடலாம் . சகோதரர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
கிருத்திகை : நிதானம் வேண்டும்.
ரோகிணி : தாமதம் நேரிடலாம்.
மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.

மிதுனம்

மனதில் புதுவிதமான உற்சாகம் அதிகரிக்கும். எதிலும் தைரியமாக முடிவெடுப்பீர்கள். உறவினர்களின் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சக ஊழியர்களால் ஏற்பட்ட மறைமுகத் தொல்லைகள் விலகும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
மிருகசீரிஷம் : உற்சாகம் அதிகரிக்கும்.
திருவாதிரை : கலகலப்பான நாள்.
புனர்பூசம் : கவலைகள் விலகும்.

கடகம்

மருத்துவம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். செல்வ சேர்க்கைக்கான சிந்தனைகள் மேம்படும். முக்கியப் பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்ப்புகளால் ஏற்பட்ட இன்னல்கள் நீங்கும். தந்தைவழி உறவுகளின் மூலம் சாதகமான சூழல் நிலவும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : வாய்ப்புகள் உண்டாகும்.
பூசம் : அறிமுகம் கிடைக்கும்.
ஆயில்யம் : சாதகமான நாள்.

சிம்மம்

மனஉறுதியுடன் செயல்படுவீர்கள். திட்டமிட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தினர் உங்களின் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும். சகோதரர்களால் சிறிய அளவில் ஆதாயம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மகம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
பூரம் : செல்வாக்கு மேம்படும்.
உத்திரம் : ஆதாயம் கிடைக்கும்.

கன்னி

தொழிலில் கூட்டாளிகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். உறவினர்களிடம் நிதானமான பேசுவது நன்மையை தரும். வியாபாரத்தில் பணியாளர்களிடம் பொறுமையை கடைபிடிக்கவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திரம் : செலவுகள் ஏற்படலாம்.
அஸ்தம் : கவனம் வேண்டும்.
சித்திரை : பொறுமையை கடைபிடிக்கவும்.

துலாம்

கனிவான பேச்சுக்கள் சாதகமான பலனை அளிக்கும். புதிய முயற்சிகளின் மூலம் பாராட்டப்படுவீர்கள். உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
சித்திரை : பேச்சுக்களால் இலாபம் உண்டாகும்.
சுவாதி : பாராட்டப்படுவீர்கள்.
விசாகம் : செயலில் கவனம் வேண்டும்.

விருச்சிகம்

செய்யும் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பயணங்களில் கவனம் வேண்டும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் மலரும். அதிக நேரம் கண் விழிப்பதை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
விசாகம் : அனுகூலம் உண்டாகும்.
அனுஷம் : அன்யோன்யம் அதிகரிக்கும்.
கேட்டை : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

தனுசு

மனதில் தைரியம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளால் ஆதரவான சூழல் அமையும். முக்கிய முடிவுகளில் குடும்ப பெரியோர்களின் ஆலோசனை அவசியம். செய்யும் பணிகளில் கவனமாக இருக்கவும். நெருக்கமானவர்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மூலம் : தைரியம் அதிகரிக்கும்.
பூராடம் : ஆதரவான நாள்.
உத்திராடம் : செலவுகள் ஏற்படும்.

மகரம்

திடீர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். தாய்வழி உறவுகளால் சாதகமான பலன்கள் அமையும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் செயல்பாடுகளில் தலையிடவேண்டாம் . வியாபாரத்தில் விற்பனையும், இலாபமும் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : ஆதாயம் உண்டாகும்.
திருவோணம் : சிந்தித்து செயல்படவும்.
அவிட்டம் : விற்பனை அதிகரிக்கும்.

கும்பம்

தந்தைவழியில் எதிர்பார்த்த சுபச்செயல்கள் கைகூடும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். விவசாயம் சார்ந்த பணிகளில் முயற்சிக்கேற்ப இலாபம் உண்டாகும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : சுபச்செயல்கள் கைகூடும்.
சதயம் : உற்சாகமான நாள்.
பூரட்டாதி : காரியசித்தி உண்டாகும்.

மீனம்

எதிர்பாராத தனவரவு சாதகமாகும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் மறையும். அக்கம் பக்கம் வீட்டார்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் இலாபகரமான சூழல் நிலவும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
பூரட்டாதி : இடையூறுகள் மறையும்.
உத்திரட்டாதி : வேறுபாடுகள் மறையும்.
ரேவதி : இலாபகரமான நாள்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...