வரலாற்றில் இன்று – 20.05.2020 – உலக அளவியல் தினம்

நாம் இவ்வுலகில் காணக்கூடிய மற்றும் பயன்படுத்தக்கூடிய அனைத்துமே நிறை, மீட்டர், அடி, கொள்ளளவு என்று சர்வதேச அளவியல் சார்ந்து உள்ளன. எனவே அளவியலின் முக்கியத்துவத்தினை உணர்த்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே 20ஆம் தேதி உலக அளவியல் (Metrology) தினம் கொண்டாடப்படுகிறது.

முதன் முதலாக 1875ஆம் ஆண்டு 17 நாடுகள் ஒன்று சேர்ந்து உலகில் உள்ள அனைத்து நாடுகளும் ஒரே அளவினை பயன்படுத்த சர்வதேச அளவியலை உருவாக்கினர். இதன் மூலமாக வெவ்வேறிடத்தில் உற்பத்தியாகும் பொருட்களை ஒன்றிணைக்க சர்வதேச அளவியல் பயன்படுகிறது.

பாலு மகேந்திரா

Balu Mahendra: A fascinating journey in filmdom - The Hindu

இந்தியத் திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான பாலு மகேந்திரா 1939ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி இலங்கையில் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் மகேந்திரா. இவருடைய பட்டயப்படிப்பு திரைப்படத்தைக் கண்டு, செம்மீன் படப்புகழ் ராமு காரியத் அவரது நெல்லு படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய அழைத்தார். அதைத் தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார்.

பிறகு 1977ஆம் ஆண்டு பாலு மகேந்திரா அவரது முதல் படமான கோகிலாவை கன்னட மொழியில் இயக்கினார்.

சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு என இம் மூன்று துறைகளிலும் விருதுபெற்ற ஒரே திரைப்பட நிபுணர் இவரே. சமகாலத் தமிழ் வாழ்க்கையை சித்தரிக்கும் பல படைப்புகளை உருவாக்கிய இவர் தனது 74வது வயதில் (2014) மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

1845ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளி அயோத்தி தாசர் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் பிறந்தார்.

1957ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி இந்திய சுதந்தர போராட்ட வீரரும், சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வரும் ஆன த.பிரகாசம் மறைந்தார்.

1570ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி உலகின் முதலாவது நவீன நிலவரையை (atlas) ஆபிரகாம் ஓர்ட்டேலியஸ் வரைந்தார்.

1998ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி புள10டூத் (Bluetooth) வெளியிடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!