THE FORGOTTEN ARMY AMAZON மிஸ் பண்ணிடாதீங்க…

 THE FORGOTTEN ARMY AMAZON மிஸ் பண்ணிடாதீங்க…

ஐந்து எபிசோட்ஸ் பார்க்கும் வாய்ப்பிருந்தால் மிஸ் பண்ணிடாதீங்க. நமது வரலாறுகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும், அதுதான் நம் பெருமைகளை தெரிந்து கொள்ள உதவும். சோல்ஜரின் உடையில் வட்ட வடிமான தொப்பியோடு சன்னி கெளஷல் அவர்களின் புகைப்படம் ஏதோ சொல்ல வருகிறது என்று தோன்றியதும் அதேநேரம் ஆடியோவும் தமிழில் தெளிவான வகையில். இரண்டாம் உலகப்போரில் சிங்கப்பூரில் ப்ரிட்டிஷ் படைகளின் தோல்விக்கப் பின்னர் அதிலிருந்த இந்திய வீரர்களை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்திய தேசியபடை வீரர்களின் கதை. அதில் சுரீந்தர்சோதியாக சன்னி கெளஷல், மாயாவாக ஷவேரி,வயதான கதாபாத்திரத்தில் வரும் ரெய்னா, கதாநாயகனின் தோழன் அர்ஷத், காட்டுத் தீயான ராசம்மா. இப்படி வலுமையான கதாபாத்திரங்கள்.

கதை சுதந்திரப் போராட்டத்திற்கு முன்பு ஆரம்பிக்கிறது. கர்னல் சுரேந்தர் சோடி சிங்கப்பூரில் தன் சகோதரியின் வீட்டுக்கு வருகிறார் அங்கே அவருக்கு பழைய நினைவுகள் எல்லாம் அலைமோதுகிறது. அதிலும் சாலையோர ஆர்ச்சில் மனித தலைகள் தொங்குவதைப் போல

பழைய நினைவுகள் 1942ல் ப்ரிட்டிஷ் வீரர்கள் சரணடைந்த போது இந்திய வீரர்களின் நிலை ஜப்பானிய வீரர்களின் கையில் இருந்தது. சரணடைந்த வீரர்கள் சாலையில் அழைத்து வரும்போது புகைப்படம் எடுக்கும் மாயாவைச் சந்திக்கிறார்கள். அந்த பளீர் புன்னகையிலேயே நம் மனதிலும் காதலை விதைத்து விடுகிறார் மாயா.

தாய்நாட்டின் சுதந்திரம் ஒன்றையே கருத்தில் கொண்டாலும், ஆங்கேங்கே கைமாற்றிவிடும் பொருட்கள் போன்ற அந்த வீரர்கள் கருதப்பட்டார்கள். ஒரு காட்சியில் அவர்கள் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கும் போது, பிரிட்டிஷ் அதிகாரி ஒருவன் இத்தனை நாள் உனக்கு சோறு போட்டிருக்கும் எங்களையே நீ எதிர்கிறாயே என்ற கேள்விக்கு 200 வருடமாக நீங்கள்தான் எங்கள் ரத்தத்தை உறிஞ்சிக் கொண்டு இருக்கிறாய். என்ற கதாநாயகனின் வசன உச்சரிப்பும் கோபமுமே அடிமைத்தனத்தின் வேதனையை அணுஅணுவாய் தெரிவித்து விடுகிறது.


இழையோடும் மெல்லிய மூன்று காதல்கள் ஒன்று நிறைவேறாமல் போகும் மாயாவின் முறைப்பையன் உடையது உடையது. அவளுக்காகவே திருமணம் என்ற எண்ணத்தை மறந்து இந்திய சிப்பாய்கள் படையில் சேரும் அவன். ஆனால் மாயாவின் மனம் கர்னலை சோடியின் பின்னால் போவதை உணர்ந்து மனதிற்குள்ளேயே தவிப்பதும், இந்திய வீரர்கள் அனைவரும் தில்லிக்குப் பயணமாகும் போது ரெயில்வே நிலையத்தில் பழைய புகைப்படம் ஒன்று மாயாவிற்கு சோடியிடம் இருந்து கிடைக்க அதைக் கண்டதும் தன் மனதைப் போலவே சோடியும் தன்னிடம் காதல் வயப்பட்டு இருக்கிறார் என்று உறுதி செய்யும் தருணத்தில் அந்த காதல் முடிவடைகிறது. மாயாவுக்கும், சோடியுக்குமே அப்போதுதான் அவர்கள் மனதில் ஏதோ உள்ளது என்பது புரிகிறது.

இரண்டாவது காதல்

ஒரு திருடனாய் அறிமுகமாகும் அவன் போலிசுக்கு பயந்து சோல்ஜராய் மாறுவது அங்கே ராசம்மா என்னும் பெண்ணிடம் கொள்ளும் ஈர்ப்பு அவளை பூஜிப்பது. அவர்களுக்குள் ஒரிரு வார்த்தை பரிமாறல்கள்தான் ஆனால், இறுதிக் காட்சிக்கு முன், அண்ணா உங்ககிட்டே இந்த புல்லாங்குழலை கொடுக்கச் சொன்னார்கள் அவர்களை நல்லவராக மாற்றியதற்கு என்று ஒரு சோல்ஜர் நீட்ட அந்த புல்லாங்குழலை ஸ்பரிசிக்கும் போது அவர் இறக்கும் போது இதை என்னிடம் தந்தார் என்பார். அங்கே இறந்தாலும் வாழும் காதல்…


மூன்றாவது தான் மாயாவுக்கும் கர்னல் சோடிக்கும் உள்ள காதல் அநேகம் பார்வைப் பரிமாற்றங்களில் தவிக்கும் நம்மையும் தவிக்க வைக்கும். ஜெமினியைப் பார்த்து சாவித்திரி பாடினாரே கண்களின் வார்த்தைகள் புரியாதா ? என்று அம்மாதிரிதான் உதடுகள் விரியாத புன்னகையும் மயக்கும் பார்வைப் பரிமாற்றமும் ஒவ்வொரு காட்சியிலும் பிரமாதப் படுத்தியிருக்கிறார்கள் இருவரும். அநாவசிய இடைச்செருகல் என்று எந்தக் காட்சியும் இல்லை.

சோடி தன் இடத்தில் இருந்து சகாக்களோடு வரும் போது அவர்களைத் தேடிவரும் மாயாவின் கண்களில் அரையுயிராய் இருக்கும் சோடி கண்களில் பட மாயாவின் கண்கள் காதலை தெரிவிக்கிறது. டெல்லி நோக்கிச் செல்லும் டிரைனின் விபத்தில் யாரோ ஒரு இறந்த பெண்ணின் பக்கத்தில் மாயாவின் கேமிரா இருக்க, அவள்தான் இறந்து விட்டாளோ என்று ஒருகணம் சோடி பார்க்கும் நாமும் திகைக்கிறோம். ஆனால் மாயா வேறு யாரோ ஒருவரைக் காப்பாற்றி வருகிறாள்.

தங்கள் சுயநலம் மறந்து பொது நலத்தில் கலக்கும் காதல் ஒரு கட்டத்தில் தன்னையும் மீறி விம்மி வெடித்து ஒரு நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பின் உடலாலும் மனதாலும் கலக்கும் காதலர்கள் அவர்களின் சங்கமம் முடிந்ததும் மீண்டும் பிரிவு உன்னால் நான் மீண்டும் உயிரோடு திரும்பி வருவேன் என்ற சொல்லிச் சென்று பியணக் கைதியாய் மாறும் கதாநாயகன் அதை அறியாமல் இறந்த ஒவ்வொரு வீரனையும் திரும்பி முகம்பார்த்து தேடும் கதாநாயகி அவளின் தவிப்பு கலந்த காதல் விவரிக்க வார்த்தைகளே இல்லை.

அதன்பின் அந்தக் காதலர்கள் ஒருவரையொருவர் சந்தித்து கொள்ளவில்லை, மாயாவின் புகைப்படத்தையும் அவள் தன் கரங்களால் தாங்கள் சங்கமித்த இடத்தில் கிடைத்த கடிதங்களையும் மட்டுமே சோடி தன் வயோதிக வயதில் எடுக்கிறார். அப்போதும் சில உயிர்களைக் காப்பாற்றி தாங்கள் ஒன்று சேர்ந்து பயணித்த இடத்திலேயே இறக்கிறார். காதல் முற்றுபெற்றும் காற்றில் வாழ்கிறது.


ஒரு வெள்ளைக்காரனால் சிதைக்கப்பட்ட ராசம்மா அவளின் கட்டுக்கடங்காத கோபம், அவர்களை எதிர்த்து சண்டையிட வேண்டும் என்ற வேகம். பெண்களின் பயிற்சியைக் கிண்டல் செய்யும் ஒரு திருடன் போலிசுக்கு பயந்து பணியில் சேரும் அவனிடம் கோபம் கொள்ளும் எது எனது இயலாமை என்று நினைக்கிறாயோ அதுவே என் பலம் என்று அவள் பேசும் தருணம். மிகவும் இக்கட்டான தருணத்தில் சோல்ஜர்களுக்குத் தரப்படும் சலுகைளை திரும்பப்பெறும் ஜப்பான் அரசு. அது தவறான செய்கை என்று தெரிந்தும் செய்வதறியாது இந்திய வீரர்களிடம் மன்னிப்பு கேட்டு அவர் தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் குற்றவுணர்ச்சியின் வலி !

ஒரு பக்கம் வலுவான மழை மலேரியா, அட்டைப் பூச்சிகளின் அணைப்பு அதையும் தாண்டி யாருக்காக போராடுகிறமோ அவர்களே புறக்கணித்தல் என வழிநெடுகிலும் துரோகங்கள். தன்னுடன் இரத்தமும் சதையுமாய் பயணித்தவர்கள் நடைபாதையில் பிணமென சரிந்து விழுவதும் ஆற்றைக் கடக்கும் போது கட்டுமரம் போன்று வேர் அறுந்து தன் நண்பனின் உடலைக் காணம் போதும், பெண் சோல்ஜர்களை அனுப்பிவிடுங்கள் என்று சொன்னாலும் எந்த பெண்கள் பலவீனமானவர்கள் என்று மற்றவர்கள் நினைக்கிறார்களோ அந்த குழுவையே காப்பாற்ற அவர்கள் எடுக்கும் முயற்சி, பெண்கள் அப்போதும் மதிக்ப்பட்டு இருக்கிறாாக்ள் முக்கியமாய் சுய மரியாதையோடு !

அடுத்து நட்பின் பரிமாணமாய் அர்ஜித் தான் இறக்கும் போதும் ஒரு இராணுவ டாங்கியை அழித்து இறக்கும் வீரம். ஆனால் அந்த வீரம் எல்லாம் யாருக்காக என்ற பெரிய கேள்வி நம் மனதிலேயே எழுகிறது.

பிணய போர் கைதிகளுக்காக சுதந்திரத்திற்கு முன் போராடிய மக்கள் சுதந்திரத்திற்கு பின் அந்த வீரர்களை துரோகிகள் என்று சொன்னது, எத்தனையோ மனுக்கள் போட்டும் கூட கிடைக்காத பென்சனும் மரியாதையும். சொந்த நாட்டிலேயே அவர்கள் அகதியானதும் கர்னல் சோடியின் தலைமையின் கீழ் இந்த வெப் சீரிஸில் பார்த்தோம். அது வலி…. தன்னலமில்லா ஒரு தேசத்தியாகத்திற்கு கிடைத்த வலி….!இறுதி காட்சியாய் ?! போராட்ட களத்தில் இணைந்த இறந்த அத்தனை பேரும் புன்னகையுடன் நம்மை கடக்கும் போது நாம் திரையை அணைக்கக் கூட மறந்தபடி வெகு அருமையான சீரிஸ் மறக்காமல் பாருங்கள் ரசியுங்கள்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...