வாட்டர் மெலன் மின்ட் லெமனேட்
தேவையான பொருட்கள்
தர்பூசணி-20 துண்டுகள்
எலுமிச்சை -1 சிறியது
புதினா -5-10
சீனி- ருசிக்கேற்ப
குளிர்ந்த தண்ணீர்- 1/2 கப்
செய்முறை
எலுமிச்சையை சாறு பிளிர்ந்து வைத்துக் கொள்ளவும்.
பின்பு மிக்சி கப்பில் தர்பூசணி , சீனி, புதினா, தண்ணீர் சேர்த்து ஜூஸ் பதத்திற்கு அடிக்கவும். பின்பு வடிகட்டி அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து புதினா இலை சேர்த்து பரிமாறவும். விருப்பப்பட்டால் ஐஸ் கட்டியும் சேர்த்து கொள்ளவும்.
தர்பூசணியில் நீர் சத்து அதிகம் உள்ளதால் வெயில் காலங்களில் அதிகம் சேர்த்து கொள்ளலாம்.
இதில் விட்டமின், மினரல்ஸ், ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால் புற்று நோய் செல்களை வளர விடாமல் தடுக்கிறது.
மேலும் கண்ணுக்கு இது மிகவும் நல்லது.
முக்கியமான விசயம் என்னவென்றால் உடல் எடை குறைக்க விரும்புவோர் அதிகம் எடுத்து கொள்ளலாம் சீனியை தவிர்த்து மிளகு தூள் சேர்த்து கொள்ளலாம்.
மிகச் சுலபமான ஆரோக்கியமான ஜூஸ் இது. அனைவரும் பருகி பயன் பெருங்கள்.