இன்றைய தினப்பலன்கள் (11.05.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

 இன்றைய தினப்பலன்கள் (11.05.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

ஆன்மிக பணிகளை மேற்கொள்வதால் கீர்த்தி உண்டாகும். திடீர் யோகத்தில் எதிர்பாராத வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். தாய்மாமன் உறவுகள் மேம்படும். நிர்வாகத்தில் மாற்றம் உண்டாகும். வாக்குவன்மையால் இலாபம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அசுவினி : கீர்த்தி உண்டாகும்.
பரணி : உறவுகள் மேம்படும்.
கிருத்திகை : இலாபம் உண்டாகும்.

ரிஷபம் :

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் அமைதியுடன் நடந்து கொள்ளவும். பொருட்களை கையாளுவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும். சந்தேக எண்ணங்களால் நெருக்கமானவர்களிடம் கருத்து மோதல்கள் தோன்றலாம்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
கிருத்திகை : அமைதி வேண்டும்.
ரோகிணி : சிந்தித்து செயல்படவும்.
மிருகசீரிடம் : மோதல்கள் தோன்றலாம்.

மிதுனம் :

சர்வதேச வணிகம் சார்ந்த முதலீடுகளில் கவனம் வேண்டும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மிருகசீரிடம் : மகிழ்ச்சியான நாள்.
திருவாதிரை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.

கடகம் :

தாய்வழி உறவுகளிடம் சற்று கவனமாக இருக்கவும். பொருள் வரவால் சேமிப்பு உயரும். பணியில் மேன்மைக்கான செயல்களை செய்வீர்கள். உடன்பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
புனர்பூசம் : சேமிப்பு உயரும்.
பூசம் : மேன்மை உண்டாகும்.
ஆயில்யம் : பொருட்சேர்க்கை ஏற்படும்.

சிம்மம் :

சொந்த ஊர் பயணங்களால் ஆதரவு உண்டாகும். அறிவுக் கூர்மையால் பாராட்டப்படுவீர்கள். தாய் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். இளைய சகோதரர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பண விஷயங்களில் சாதுர்யமாக பேசி சமாளிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மகம் : ஆதரவு உண்டாகும்.
பூரம் : சிந்தனைகள் மேலோங்கும்.
உத்திரம் : திறமைகள் வெளிப்படும்.

கன்னி :

வெளிவட்டாரங்களில் உங்களின் மதிப்பு கூடும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : மதிப்பு கூடும்.
அஸ்தம் : கலகலப்பான நாள்.
சித்திரை : பழுதுகள் நீங்கும்.

துலாம் :

திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய முயற்சிகள் எதிர்பார்த்த பலனை தரும். உடல்நலத்தில் கவனம் வேண்டும். செய்யும் பணியில் மற்றவர்களின் விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடலாம்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
சித்திரை : வாய்ப்புகள் உண்டாகும்.
சுவாதி : முயற்சிகள் ஈடேறும்.
விசாகம் : விமர்சனங்கள் ஏற்படலாம்.

விருச்சிகம் :

வர்த்தக பணிகள் சம்பந்தமான புதிய சிந்தனைகள் தோன்றும். எதிர்பாராத பரிசுகளால் மனமகிழ்ச்சி உண்டாகும். நீண்ட நாள் நண்பர்களுடன் கூடிப்பேசி மகிழ்வீர்கள். எண்ணிய எண்ணங்களால் அலைச்சலும், சோர்வும் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
விசாகம் : சிந்தனைகள் தோன்றும்.
அனுஷம் : மகிழ்ச்சியான நாள்.
கேட்டை : சோர்வு உண்டாகும்.

தனுசு :

மனதில் இருந்த நீண்ட நாள் கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். மனதில் தோன்றும் புதுவிதமான எண்ணங்களால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். உடைமைகளில் கவனம் வேண்டும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : புத்துணர்ச்சி உண்டாகும்.
புராடம் : கவனம் வேண்டும்.
உத்திராடம் : ஆரோக்கியம் மேம்படும்.

மகரம் :

உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட பணிகள் காலதாமதமாக முடியும். பிள்ளைகளிடம் கனிவுடன் பழகவும். வாழ்க்கைப் பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : பாராட்டப்படுவீர்கள்.
திருவோணம் : கனிவுடன் பழகவும்.
அவிட்டம் : புரிதல் ஏற்படும்.

கும்பம் :

விவசாயம் தொடர்பான புதுவிதமான ஆலோசனைகளும், ஆதரவுகளும் கிடைக்கும். மனதில் இருந்துவந்த ஐயம் நீங்கும். திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அவிட்டம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
சதயம் : ஐயம் நீங்கும்.
பூரட்டாதி : முன்னேற்றம் உண்டாகும்.

மீனம் :

மறைமுக எதிரிகளால் சாதகமான பலன்கள் உண்டாகும். சகோதரர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த சண்டை, சச்சரவுகள் குறைந்து சுமூக நிலை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
பூரட்டாதி : சாதகமான நாள்.
உத்திரட்டாதி : மனக்கசப்புகள் நீங்கும்.
ரேவதி : சுமூகமான நாள்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...