சொடக்கு தக்காளியின் பயன்கள்

 சொடக்கு தக்காளியின் பயன்கள்

குப்பையென ஒதுக்கும் இந்த சொடக்கு தக்காளியின் பயன்கள்

இதுவரை நீங்கள் இதை சாப்பிடாமல் இருந்திருக்கலாம் ஒருவேளை இனிமேல் உங்கள் கண்களில் இனிமேல் இது பட்டால் உடனடியாகசாப்பிட முயற்சி செய்யுங்கள். தென் அமெரிக்கா, இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் அதிகம் காணப்படும் இந்த தக்காளி பல ஊட்டச்சத்துக்களை கொண்டது, மேலும் இது உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்கக்கடும். நீங்கள் குப்பையென நினைக்கும் இந்த அற்புத மூலிகையின் பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

கண் ஆரோக்கியம்

இந்த சொடக்கு தக்காளியில் ஏராளமான வைட்டமின் ஏ மற்றும் கரோட்டினாய்டுகள் உள்ளது. கண்களின் ஆரோக்கியத்தை சீராக பராமரிக்க கரோட்டினாய்டுகள் அவசியம். கேரட்டை போலவே இதுவும் கண் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிந்துரைக்கப்படும் முக்கியமான பொருளாகும். குறிப்பாக அதிக நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இந்த சொடக்கு தக்காளி அவர்களின் கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்.

மரபணு பழுதுகள்

இந்த சொடக்கு தக்காளியில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மிக அதிக அளவில் உள்ளதென அறிவியாளர்கள் கண்டறிந்துள்ளனர். வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உங்கள் உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. இதன் அற்புதமான பயன்களில் ஒன்று உங்கள் டி.என்.ஏ வில் உள்ள பாதிக்கப்பட்ட செல்களை குணப்படுத்துவதாகும். ஆரோக்கியமான உடலை பெறுவதற்கு இன்றே சொடக்கு தக்காளியை சாப்பிட தொடங்குங்கள்.

சர்க்கரை நோய்

அறிவியல் ஆய்வுகளின் படி இந்த தக்காளியில் சோடியம் மற்றும் கொழுப்புகள் இல்லை. மேலும் இதில் குறைந்தளவே க்ளெசமிக் குறியீடுகள் உள்ளது. எனவே இது சர்க்கரை நோய் உள்ளவர்களும், சர்க்கரை நோய் ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்களும் இதனை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. உங்கள் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க விரும்பினால் தொடர்ச்சியாக சொடக்கு தக்காளியை எடுத்துக்கொள்ளுங்கள்.

நோயெதிர்ப்பு மண்டலம்

வைட்டமின் சி உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும் என்று விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். தொடர்ந்து மாறும் வானிலை உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய எதிரி ஆகும். மாறும் வானிலையால்தான் உங்களுக்கு சளி, காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. ஆனால் இதில் உள்ள வைட்டமின் சி உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துவதால் உங்களுக்கு இந்த நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

நரம்பு மண்டல பிரச்சினைகள்

நமது நரம்பு மண்டலத்தை சொடக்கு தக்காளி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் இதில் உள்ள அதிகளவு வைட்டமின் பி தான்.நமது ஆரோக்கியத்திற்கு சீராக செயல்படும் நரம்பு மண்டலம் அவசியமானதாகும். ஏனெனில் நரம்பு மண்டலம் மூளையின் செயல்பாட்டோடு தொடர்புடையது, இதுதான் நமது உடலை இயக்கும் இயந்திரம் ஆகும். நரம்பு மண்டலத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டால் துஆ பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தி மரணம் வரை கூட ஏற்படுத்தலாம்.

புற்றுநோய் செல்களை குறைக்கிறது

இந்த தக்காளியில் மிகவும் அரிதான விதனலைட்ஸ் என்னும் வேதிப்பொருள் உள்ளது. இந்த வேதிப்பொருள் மிகவும் அரிதானது மற்றும் உபயோகமானது. விதனலைட்ஸ் என்னும் இந்த பொருளில் உள்ள ஆக்சிஜனேற்ற பண்புகள் புற்றுநோய் செல்களுக்கு எதிராக செயல்படக்கூடியது. மேலும் இது உடலில் புற்றுநோய் செல்கள் உடல் முழுவதும் பரவுவதை தடுக்கிறது. எனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து இந்த பழத்தை சாப்பிடுவது அவர்கள் உடலில் புற்றுநோயின் தீவிரம் அதிகரிப்பதை தடுக்கிறது.

எடை குறைப்பு

சொடக்கு தக்காளி சாப்பிடும்போது உங்கள் வயிறு விரைவில் திருப்தியான உணர்வை பெறும். இதனால் நீங்கள் மேற்கொண்டு எதையும் சாப்பிட தோன்றாது. எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இது மிகச்சிறந்த பொருளாகும். ஒருவேளை நீங்கள் அதிக எடையுடன் இருந்தாலோ அல்லது பருமனாக இருந்தாலோ இந்த சொடக்கு தக்காளியை சாப்பிட தொடங்குங்கள் முன்பு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு உங்கள் எடை வேகமாக குறைவதை உணரலாம்.

உயர் இரத்த அழுத்தம்

இதில் உள்ள பைட்டோ கெமிக்கல்களான பாலிபீனால் மற்றும் கரோட்டினாய்டு உங்கள் உடலில் உள்ள உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.இந்த வேதிப்பொருட்கள் கரையக்கூடிய பெக்டின் நார்ச்சத்துடன் இணைந்து உங்கள் உடலில் உள்ள கேட்ட கொழுப்புகளை வெளியேற்றுவதோடு உங்கள் ஆரோக்கியத்தை சீராக வைத்திருக்க உதவும்.

எலும்புகளின் ஆரோக்கியம்

இந்த தக்காளியில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உங்கள் எலும்புகளை வலிமையாக்க உதவும். மேலும் இதில் தேவையான அளவு உள்ள பெக்டின் உங்கள் எலும்புகளை கால்சியம் மற்றும் பாஸ்பரஸை அதிகளவில் உறிஞ்சும்படி செய்கிறது. இதனால் ஹெமாட்டிசம் மற்றும் டெர்மாட்டிஸ் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

செரிமானம்

நமது செரிமான மண்டலம் சீராக இருக்க நார்ச்சத்துக்கள் அவசியமானவை. நார்ச்சத்து அதிகமுள்ள இந்த தக்காளியை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளும்போது அதில் உள்ள பெக்டின் நார்ச்சத்து உங்கள் செரிமான மண்டலம் மற்றும் குடல் இயக்கங்களை சீராக வைத்திருக்க உதவுகிறது. இதனால் மலசிக்கல் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...