மந்திரப்பாய் பூதக்காட்டைக் கடந்து வேகமாக முன்னேறிக் கொண்டு இருந்தது. ”சூர்ப்பனகா..! நாம் இவ்வளவு வேகமாக வந்து விட்டோம்..! குதிரையில் வந்து கொண்டிருந்த நம் வீரர்களின் நிலை என்னவென்று உன் மந்திரசக்தியால் உணர்ந்து சொல்..!” என்று வித்யாதரன் கேட்டான். மந்திரக் கோலை புருவ மத்தியில் நிறுத்தி கண்களை மூடி மந்திரங்களை உச்சாடனம் செய்து தியானித்த சூர்ப்பனகா மெல்ல கண் திறந்தாள். ”வித்யாதரா..! நம் வீரர்கள் ஆபத்தில் இருக்கிறார்கள். காட்டுக்குள்ளே ஓர் அரக்கனால் நாகபாசத்தால் கட்டுண்டு இருக்கிறார்கள்..!” என்றாள். ”அவர்களை […]Read More
வேலு நாச்சியாரின் கூரான கத்தி அவ்விளம் பெண்ணின் ஹிருதயத்தை ஆழமாகப் பதம் பார்த்தது. “வீல்…” என்ற அலறலுடன் அவள் தரையில் வீழ்ந்து மடிந்தாள். க்ஷணநேரத் தாக்குதலைக் கண்டு அங்கு கூடியிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். சிலர் “ஹோ…” என்று தன்னையறியாமல் அலறியும் விட்டனர். அவளுடன் வந்தவர்கள் இத்தகைய நிகழ்வைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கையில் பயத்தில் மேடையை விட்டு மெதுவாக வெளியேறினர். “வேலு, நீ என்ன காரியம் செய்தாய்? நம்மால் காரியசித்தி பெற வந்தவர்களை நீ […]Read More
16. திருநல்லூர்ப் பெருமணம் ஸ்ரீசிவலோகத் தியாகேசர் இப்பிறப்பினில் இணை மலர் கொய்து நான் இயல்பொடு அஞ்சு எழுத்து ஓதித் தப்பு இலாது பொன் கழல்களுக்கு இடாது நான் தட முலையார் தங்கள் மைப்பு உலாம் கண்ணால் ஏறுண்டு கிடப்பேனை மலரடி இணை காட்டி அப்பன் என்னை வந்து ஆண்டு கொண்டு அருளிய அற்புதம் அறியேனே.” திருவாசகம். காதல் என்பது என்ன? மனிதர்களுக்குள் தகுதி பார்த்து, அழகு பார்த்து எதோ ஒரு எதிர்பார்ப்புடன் வருவது அல்ல காதல். உண்மையான […]Read More
‘உன் உடல் வேண்டுமானால் என் காதில் இருந்து வெளியே வா..! என்ற பூதகியின் அச்சுறுத்தலுக்கு என்ன பதில் சொல்வது? அப்படி வெளியே வந்தால் மட்டும் அவள் உடலை நசுக்க மாட்டாள் என்பது என்ன நிச்சயம்?’ என்னசெய்வது என்று ஒரு நிமிடம் சிந்தித்தான் வித்யாதரன். ”என்ன வித்யாதரா? என்ன யோசிக்கிறாய்..? நீ என் காதை விட்டு வெளியே வருவதொன்றுதான் உனக்கான ஒரே வழி..! சீக்கிரம் வெளியே வா..!” வித்யாதரன் இப்போது மவுனித்து, ஏதோ தியானித்தான். உடனே சூர்ப்பனகா, “வித்யாதரா, […]Read More
ப்ரான்மலையை வந்தடைந்த பல்லக்குகளில் சக்ரவர்த்தி செல்லமுத்துவின் பட்டமகிஷியானவளும், வேலு நாச்சியாரின் தாயாருமான ராணிமுத்தாத்தாளை, ராணி அகிலாண்டேஸ்வரியும், இளவரசி வேலுநாச்சியாரும் எதிர்கொண்டு வரவேற்றனர். ராணி முத்தாத்தாளுடன் வந்திருந்த செல்லமுத்துவின் தங்கை முத்து திருவாயி நாச்சியார், அகிலாண்டேஸ்வரியைக் கண்டவுடன் அவரின் பாதங்களில் விழுந்து வணங்கினாள். அகிலாண்டேஸ்வரி, இருவரையும் வரவேற்று, கட்டித் தழுவி தனது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். “அனைவரும் நலம்தானே..? தங்கள் ஈசனின் திருத்தொண்டு எவ்வாறு இருக்கிறது..?” என்றார் அகிலாண்டேஸ்வரி. “அந்த ஈசனின் அருளால் அனைத்தும் மிக அற்புதமாகவே நடக்கிறது […]Read More
18. தனியொருவன் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்குப் புறப்பட்ட ஆதர்ஷின் பார்வை தற்செயலாக, தனது காரின் வைப்பரில் சொருகப்பட்டு இருந்த அந்தத் துண்டுக் காகிதத்தின் மீது படர்ந்தது. வியப்புடன் அதனை எடுத்துப் பிரித்ததுமே, ஜிவ்வென்று அவனது முகத்தில் இரத்தம் ஏறியது. ”மூன்றாவது விக்கெட்டும் காலி..! இனி நீ மட்டும்தான் பாக்கி..! -வெள்ளை தேவதைகள்..!” ஆத்திரத்துடன் திரும்பிப் பார்க்க, சரியாக, கங்கணா தனது ஸ்கூட்டியை கிளப்பிக்கொண்டு விர்ரென்று அவனைக் கடந்து போக, ‘நிச்சயம் இது கங்கணாவின் வேலைதான்’ என்று தீர்மானித்தான்..! […]Read More
கோமேதகக் கோட்டையினுள் சிறை வைக்கப்பட்டிருந்த இளவரசி சுமார் நான்கு நாழிகை காலம் செலவழித்து வித்யாதரனின் உருவத்தை வரைந்து முடித்தாள். “ ஆஹா! என்ன கம்பீரம்! என்ன அழகு! இவன் முகத்தில் இருக்கும் தேஜஸிற்கு இவன் அரச குமாரனாகப் பிறந்து இருக்க வேண்டியவன்! என்று அவள் மனது சொன்னது. வரைந்து முடித்த படத்தையே பார்த்துக் கொண்டிருக்கும் இளவரசியை நோக்கி வேகமாக வந்த ராட்சதன் அவள் கையிலிருந்த அந்த திரைச்சீலையை வாங்கிப் பார்த்தான். அவன் முகத்தில் ஓர் ஏளனம் தோன்றியது. […]Read More
15. மயிலாடுதுறை ஸ்ரீ மயூரநாதர் மாடும் சுற்றமும் மற்றுள போகமும் மங்கையர் தம்மொடுங் கூடி அங்குள குணங்களால் வேறுண்டு குலாவியே திரிவேனை வீடு தந்தென்றன் வெந்தொழில் வீட்டிட மென்மலர்க் கழல்காட்டி ஆடுவித்தென தகம் புகுந்து ஆண்டது ஒரு அற்புதம் அறியேனே! திருவாசகம். சௌபாக்கியம் என்பது என்ன? மாடு, மனை, மங்கையர் சுற்றம், உற்றார், உறவினர், நிலம், வயல் என்பவையா..? அழியக் கூடிய ஒன்றைச் சௌபாக்கியம் என்று எப்படிக் கூற முடியும்..? நம் கருமங்கள் அனைத்தும் நிலவுலக இச்சையை […]Read More
17. ஒரு கரிய உருவம் ! ”அஞ்சு..!” –ஆதர்ஷின் அலறலைக் கேட்டு அட்டெண்டர் பஞ்சு ஓடிவந்தான். ”சார் கூப்பிட்டிங்களா..?” –பதற்றத்துடன் வர, அவனைக் கோபத்துடன் பார்த்தான், ஆதர்ஷ். ”உன்னை யாருய்யா கூப்ட்டது..? அதோ போறாளே… அடங்காப்பிடாரி அஞ்சு..! அவளைக் கூப்பிடுய்யா..?” ”சார்..! அடங்காப்பிடாரி அஞ்சுன்னு கூப்பிடணுமா… இல்ல, வெறும அஞ்சுன்னு கூப்பிடணுமா..?” –பஞ்சு பவ்யமாகக் கேட்க, அதற்குள் அஞ்சுவே உள்ளே எட்டிப்பார்த்தாள்..! ”யு கால்டு மீ, மிஸ்டர் ஆதர்ஷ் வித்யாலயா..? சாரி.. மிஸ்டர் ஆதர்ஷ்..?” –என்றவுடன் அவளை […]Read More
“வித்யாதரன் எப்படி இருப்பான் என்று எனக்குத் தெரியும்” என்று வில்லவபுர இளவரசி சொன்னதும் அந்த ராட்சதன் ‘இடி இடி’ எனச் சிரித்தான். “இதோ இங்கேயே இருக்கிறது நமது துருப்புச் சீட்டு! இவளுக்கு வித்யாதரன் எப்படி இருப்பான் என்று தெரியுமாம்! இனி நமக்கு என்ன கவலை? இவளிடம் வித்யாதரனின் உருவத்தை வரைந்து கொடுக்கச் சொல்வோம்! அதை எடுத்துக் கொண்டு வில்லவபுரம் செல்வோம்! அங்கே வித்யாதரனைப் பிடிப்போம்! எப்படி என் யோசனை?” என்று கேட்டான். “பிரபோ! வித்யாதரன் வில்லவபுரத்தில்தான் இருப்பான் […]Read More
- test
- இன்று நடைபெறும் நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம்!
- வலுப்பெற்றது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (24.11.2024)
- உரத்த சிந்தனையின் 10வது ஆண்டின் முதல் “பாரதி உலா” நிகழ்வு..!
- வரலாற்றில் இன்று (24.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
- சுரதா பிறந்த தினம் இன்று: