ஸ்ரீ கம்பகரேஸ்வரர், திருபுவனம். விரவிய தீவினை மேலைப் பிறப்பு முந்நீர் கடக்கப் பரவிய வன்புரை என்புருக்கும் பரம் பாண்டியனார் புரவியின் மேல்வரப் புந்தி கொளப்பட்ட பூங்கொடியார் மரவியன் மேற்கொண்டு தம்மையும் தாமறியார் மறந்தே —திருவாசகம் பயம் எதனால் வருகிறது? பயம் என்பது பொதுவான விஷயம். அது ஏன், எப்படி வருகிறது என்பது தெரியாது. அதீத மன அழுத்தம், நினைத்தது நடக்காததன் தோல்வி உணர்வு எல்லாமே பயத்திற்குக் காரணம் ஆகிறது. அழியும் இந்த உடலுக்குள் அளவற்ற ஆசைகள். ஒன்று […]Read More
சைரன் ஒலித்தபடி போலீஸ் ஜீப் ‘மில்லேனியம் ஸ்டோன்’ காம்பவுண்டில் நுழைந்தது. ஏற்கனவே வந்திருந்த ஆம்புலன்ஸ் ஓரமாய் நின்றிருந்தது. அங்காங்கே ‘குசு குசு’வெனப் பேசியபடி ப்ளாட்டில் வசிப்பவர்கள் காரிடரில் நின்றுகொண்டிருக்க… சிலர் பால்கனி வழியாக மேலேயிருந்து பீதியுடன் எட்டிப் பார்த்து கொண்டிருந்தனர். ஜீப்பிலிருந்து குதித்து இறங்கினாள் அனாமிகா. இளவயதின் துடிப்பு அவரது முகத்தில் நடையில் தெரிந்தது. நடிகை அனுஷ்காவிற்கு யூனிபார்மை மாட்டியது போல் இருந்தாள் அனாமிகா. “யார் இங்க செகரெட்டரி..?” “நான் தாங்க..” என வந்து நின்றார் விக்னேஷ்வரன். […]Read More
லாக்கப்பில்… “கங்க்ராஜுலேஷன்ஸ், போஸ்! இந்தக் கேஸில் உனக்கு டிஎஸ்பி ப்ரமோஷன் கட்டாயம் கிடைக்கும் பார்” என்றாள் தன்யா. முதல்நாள் கமிஷனரிடம் பேசியபோது இருந்த உற்சாகம் இல்லை போஸுக்கு. அலுப்பாகத் தெரிந்தான். “கேஸ் அவ்வளவு ஸ்ட்ராங்க் இல்லைன்னு கமிஷனர், ப்ராசிக்யூட்டர் எல்லோரும் நினைக்கறாங்க. ஆனா இவன் பேரில் பப்ளிக் கோபமா இருக்கறதால, எந்த லாயரும் கௌதமுக்காக வாதாடத் தயாரா இல்லை” என்றான். அதோடு அந்தக் கேஸை விட்டுவிட்டு வேறு விஷயங்கள் பேச ஆரம்பித்தான். பத்து நிமிடங்கள் கழிந்திருந்தபோது மந்திரம் […]Read More
அன்னை தந்தை யாவாள் – காளி அவனி எங்கும் வாழ்வாள் முன்னை வினைகள் போக்கி – இன்பம் முகிழ்த்துத் தழைக்கச் செய்வாள் இன்னல் போக்கும் இனியாள் – காளி இல்லம் தோறும் இருப்பாள் அன்னை அவளை வணங்கு – இந்த ஆலம் பாடி வந்து! • • • முதல் நாள் நடந்ததெல்லாம் கனவு மாதிரித் தெரிந்தது அகல்யாவுக்கு. கிருஷ்ணை வந்தாள். அப்பாவைப் பார் என்றாள். சரியென்று விளையாட்டுத்தனமாய்த் தானே தொட்டோம். சட்டென்று மயங்கி சாய்ந்து விட்டாரே… […]Read More
ஜெயராமன் குழம்பினான். ‘தன்னைப் பார்த்து இப்படியோர் அழகி சிரிக்கக் காரணமேயிராதே.. ஒருவேளை…’ வலப்புறம் திரும்பி பார்த்தான். அங்கே யாரும் இல்லை. திடீரென ஒரு பெரும் சந்தேகம் அவனை ஆட்கொண்டது. தன்னைக் குனிந்து பார்த்துக் கொண்டான். இல்லை… எல்லாம் சரியாகத்தான் போட்டிருக்கிறோம். சிந்தனையிலிருந்தவனை இழுத்துப் பிடித்தது, “சார், ஜெயராமன் சார்…” என்ற அவளது இனிய குரல். அட..! என் பெயர் இவளுக்கெப்படித் தெரியும்..? ‘ழே’யென்று விழித்தான். “இன்னிக்காவது வந்தீங்களே இங்க. உங்களுக்காக ஒரு மாசமாக் காத்திருக்கேன் ஜெயராமன் சார்…” […]Read More
இளவரசரும், இளவரசியும் தம்பதி சமேதராகப் பெரியவர்களிடம் ஆசி பெற்றுக் கொண்டிருந்த சமயம், “வெற்றிவேல், வீரவேல்” என்ற கோஷத்துடனும் வேல் மற்றும் வாள் பிடித்த விரர்களுடனும் சுமனும் குயிலியும் குதிரையில் வந்திறங்கினர். “இளவரசருக்கு வணக்கம்,” என்ற சுமனைப் பார்த்து, “நண்பா, வந்து விட்டாயா?” என்று அழைத்தவாறு இளவரசர் அவனை ஆரத்தழுக் கொண்டார். “தாமதமானாலும் சரியான சமயத்தில் தான் வந்து இருக்கிறோம்.” என்றவன், மரத்தினால் செய்யப்பட்டு வேலைப்பாடு நிறைந்த சிறு பேழை ஒன்றை இளவரசரிடம் தந்தான். “தமையன் இதைத் தங்களது […]Read More
போன வருடம் வரை யாக்கோபு என்றும், போன மாதம் வரை யோவான் என்றும், நேற்று வரை தாவீது என்றும் பெயர் வைத்துக் கொண்டிருந்தேன். இன்றைக்கு மாற்றி விட்டேன். காரணம் நான் போகப் போகிற ஏரியா அப்படி. இன்றையிலிருந்து என் பெயர் சிவரஞ்சன். பெயர் பரவாயில்லையா? ஓ.கே.வா? தாங்க்ஸ். நான் உங்கள் ஊருக்கு வந்தால், ஆயிரம் பேருக்கு நடுவில் என்னைத் தனியாக அடையாளம் காண முடியும். காரணம், என் முகத்து ஒளிர் தேஜஸ். அருட்ஜோதி. இந்த தேஜஸையும், அருட் […]Read More
திருக்கோழம்பியம் ஸ்ரீ கோகிலேஸ்வரர் முழுவதும் கண்டவனைப் படைத்தான் முடி சாய்த்து முன் நாள் செழும்மலர் கொண்டு எங்கும் தேட அப்பாலன் இப்பால்எம்பிரான் கழுதொடு காட்டிடை நாடகம் ஆடிக் கதி இலியாய் உழுவையின் தோல் உடுத்து உன்மத்தம் மேற்கொண்டு உழி தருமே -திருவாசகம் ஆனந்தம், நிம்மதி என்பது என்ன? அது பணத்திலோ பொருளிலோ இல்லை. மனத்தில் உள்ளது. எவரையும் சார்ந்து அது வருவதில்லை. உண்மையோடு இணைந்திருக்கும்போது அது தானாகவே வரும். உண்மை என்பது மாறாத நிலை. எதுவும் நிரந்தரமில்லை. […]Read More
கிரீன் பாவர்ச்சியில் பிரியாணி சாப்பிடுவதற்காகவே எத்தனைமுறை வேண்டுமானாலும் ஐதராபாத்திற்கு வரலாம். அருணும், அவனுடன் வேலை பார்க்கும் கோபியும் ஆபிஸ் வேலையாக ஐதராபாத் வந்து ஒரு வாரம் ஆகிறது. இந்த ஒரு வாரமும், ஒருநாள் விட்டு ஒருநாள் அங்கிருந்துதான் பிரியாணி வாங்கி வரச்சொல்லி சாப்பிட்டார்கள். ஐதராபாத்திற்கு வருகிறவர்கள் சார்மினாரை மிஸ் பண்ணினாலும் பண்ணலாமே தவிர, கிரீன் பாவர்ச்சியை மிஸ் பண்ணக்கூடாது. பண்ணினால் அது அவர்களுக்குதான் நஷ்டம். அந்த பிரியாணி ரைஸை வாயில் வைத்தால் ஐஸ் கிரீம் போல் கரையும். […]Read More
‘ஆலம் பாடி காளி – அம்மா அருளை நீயும் தருவாய் காலம் தோறும் நீயே – எங்கள் கைவி ளக்காய் வருவாய் ஞால மெங்கும் நிறைவாய் – காளி ஞான ஒளியை வழங்கு கால தேவி நீயே – காளி கவிதை வடிவும் நீயே!’ அகல்யா தன் நோட்டில் பிள்ளையார் சுழியிட்டுத் தன் மனதில் உதித்த பாடலை எழுதி வைத்தாள். அப்பா சுந்தரவதனன் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்ற பின் முழுநேரக் கோவில் வாசியாக […]Read More
- test
- இன்று நடைபெறும் நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம்!
- வலுப்பெற்றது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (24.11.2024)
- உரத்த சிந்தனையின் 10வது ஆண்டின் முதல் “பாரதி உலா” நிகழ்வு..!
- வரலாற்றில் இன்று (24.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
- சுரதா பிறந்த தினம் இன்று: