கடந்த 10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பாலை இவர் தானம் செய்து சாதனை புரிந்துள்ளார் கோயம்புத்தூர் மாவட்டம், பி.என்.புதூரைச் சேர்ந்தவரான ஸ்ரீவித்யா 27. தனது 2வது குழந்தை பிறந்து 5 நாட்களே ஆன நாள் முதல் தாய் பால் வழங்குவதை தொண்டாகச் செய்து வருகிறார் ஸ்ரீவித்யா. ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இவரது சாதனைக்குத் தன் கணவரும் குடும்பத்தினரும் உறுதுணையாக உள்ளதாகவும் ஸ்ரீவித்யா பெருமிதத்துடன் கூறியுள்ளார். கோவை வடவள்ளி பி.என் புதூர் பகுதியை சேர்ந்தவர் பைரவ் – […]Read More
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பிராச்சி ராதோர் மற்றும் ருத் ஜான்பால் கொய்யலா ஆகிய இரு திருநங்கைகள், ஹைதராபாத் உஸ்மானியா மருத்துவமனையில் அரசு மருத்துவர்களாக கடந்த வாரம் பணி நியமனம் செய்யப்பட்டனர். நாட்டிலேயே முதன்முறையாக தெலுங்கானா மாநிலத்தில் இவர்கள், அரசு மருத்துவமனை டாக்டர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தெலுங்கானாவில், மாநிலத்தைச் சேர்ந்தவர் பிராச்சி ரத்தோட். இவர் அடிலாபாதில் உள்ள மருத்துவக் கல்லுாரியில் 2015ல் மருத்துவப் படிப்பை முடித்தார். கம்மம் பகுதியைச் சேர்ந்த ரூத் ஜான்பால், 2018-ல் […]Read More
தமிழகத்தில் இதுவரை யாரும் பயிரிடாத 1250 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து சாகுபடி செய்து சாதித்துள்ளார் பட்டதாரி பெண் சிவரஞ்சனி. நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா குரவப்புலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி பெண் சிவரஞ்சனி. தொலைந்து போன பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவில் தொலைந்த பாரம்பரிய நெல் ரகங்களைத் தனது கணவர் சரவணன் உதவியுடன் தேடிச்சென்று 1,250 நெல் ரகங்களைக் கண்டறிந்து தனது வயலில் பயிரிட்டுள்ளார். பழங்காலம் […]Read More
ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கடத்தலில் இருந்து மீட்டுள்ளார் அஜீத் சிங். அதேபோல் சிறுமிகளையும் பெண்களையும் விபச்சார கும்பல்களிடம் இருந்து காப்பாற்றிய மாமனிதர் அஜீத் சிங் குடியா. சிவப்பு விளக்கு பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள பெண் குழந்தைகளுக்குப் பாடம் கற்பித்தார். 1993இல் குடியா என்ற அமைப்பைத் தொடங்கி பெண் குழந்தைகள் விபச்சாரத்துக்குள் தள்ளப்படுவதைத் தடுக்கப் போராடினார். தன் வேலையில் உறுதியாக இருந்தவர், சட்டைப் பைகளிலும் பேனாக்களிலும் கைக்கடிகாரங்களிலும் கேமராக்களை ஒளித்து வைத்து வாடிக்கையாளர் போன்று வேடம் தரித்து பெண் […]Read More
கோத்தகிரி அருகே, தும்பிபெட்டு இருளர் பழங்குடியினப் பெண், விடா முயற்சியால் மருத்துவர் கனவை நனவாக்கி, பலரின் பாராட்டைப் பெற்றுள்ளார்.நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே தும்பிபெட்டு இருளர் கிராமத்தைச் சேர்ந்த பாலன், ராதா தம்பதியின் மகள் 21 வயதாகும் ஸ்ரீமதி, அங்குள்ள தனியார் பள்ளியில், 2019ம் ஆண்டில் பிளஸ் 2 முடித்தார்; மருத்துவப் படிப்புக்கான, ‘நீட்’ தேர்வு எழுதினார்.எதிர்பார்த்த ‘கட் -ஆப்’ இல்லாததால் இடம் கிடைக்கவில்லை. தொடர்ந்து, ‘நீட்’ தேர்வு பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டார். நான்காவது முறையாக நடப்பாண்டு, […]Read More
தமிழகத்தில் ஆதரவற்றவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அனாதையாக இறக்கும் தருவாயில் அவர்களுக்காக இரக்கப்படுகிற மனம் எல்லார்க்கும் இருக்கோ இல்லையோ இதோ நான் இருக்கேன் என ஒரு மாணவி ஓடோடி வருகிறார். திருச்சி புத்தூர் பகுதியைச் சேர்ந்த யோகா ஆசிரியர் பெ.விஜயகுமார். இவரது மனைவி வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார். இருவரும் இணைந்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை மூலமாகப் பல்வேறு தொண்டு செய்து வருகிறார்கள். இதில் கடந்த ஆறு வருடமாக ஆதரவற்ற நிலையில்தெருவோரங்களில் சுற்றித் திரிபவர்கள் மற்றும் ஆதரவற்றவர்கள் வாழும் […]Read More
இந்த நாட்டில் பெண்கள்தான் எல்லாம். அவளைப் பாராட்டும் அதே சமுதாயம் அதே பெண்ணைச் சம்பிரதாயம் என்கிற போர்வைக்குள் தள்ளி செய்கிற கொடுமைகள் அதிகம். நல்ல விசேஷங்கள் என்றாலும் பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் அதிகம். அதே வீட்டில் யாராவது இறந்தால் பெண்களைப் படுத்துகிற பாடு சொல்லி மாளாது. அவரின் தாலி அறுத்து, குங்குமத்தை அழித்து, தலையில் அனைவர் முன்னிலையிலும் குடம் குடமாகத் தண்ணீரை ஊற்றி அலங்கோலப்படுத்திவிடுவர். அதையும் ஒரு பெண்ணையே வைத்து செய்துவைப்பவர். அதே மனைவி (பெண்) இறந்தால் அந்த […]Read More
கேரளாவின் கொச்சி மாநகராட்சியில், பெண்கள் மட்டுமே தங்கக்கூடிய, மலிவு விலையிலான பிரத்யேக தங்கும் விடுதி திறக்கப்பட்டுள்ளது. பெண் பயணிகளுக்கு, தங்குவதற்கு பாதுகாப்பான இடத்தைத் தேடுவதே முதல் முன்னுரிமை. இரவில் தங்கினாலும் அல்லது சில நாட்கள் இருந்தாலும், நாட்டின் எந்தப் பகுதியாக இருந்தாலும், தனியாகப் பயணிக்க அந்தப் பாதுகாப்பு உணர்வு தேவை. கடவுளின் சொந்த நாடு என்றும் அழைக்கப்படும் கேரளா ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகவும், உலகம் முழுவதிலுமிருந்து 365 நாட்களும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. உள்நாட்டு சுற்றுலாப் […]Read More
குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத், காந்திநகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பவநகர் ஆகிய பகுதிகளில் 36-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நாடு முழுவதிலுமிருந்து சுமார் 15,000 விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள். 36 விளையாட்டுத் துறைகளில் பங்கேற்றுள்ளனர். இது இதுவரை இல்லாத மிகப்பெரிய தேசிய விளையாட்டுப் போட்டியாகும். இந்தப் போட்டிகளில் சனிக்கிழமை (1-10-2022) காந்திநகர் மைதானத்தில் நடந்த பெண்களுக்கான போல்வால்ட் (கம்பு ஊன்றி உயரம் தாண்டுதல்) போட்டியில் தமிழக வீராங்கனை ரோஸி மீனா […]Read More
சமையல் செய்த பாத்திரத்திலுள்ள அழுக்குகளை கைகளால் நீக்காமல் வேறு வழிகளில் நீக்குவது எப்படி என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஜோசபின் கோக்ரான் என்கிற பெண்மணி பாத்திரங்கழுவி இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். அது எப்படி பாத்திரங்களைக் கழுவ உதவி செய்கிறது என்கிற விவரங்களை இங்கே பார்ப்போம். பாத்திரங்கழுவி (Dishwasher) என்பது ஸ்பூன்கள், கத்திகள் போன்ற சமையல் கருவிகள் மற்றும் சாதாரண பாத்திரங்களைத் தானாகச் சுத்தம் செய்யப் பயன்படும் ஓர் இயந்திரம். இதில் சமையல் செய்த அழுக்குப் பாத்திரங்களை வைத்தால் இயந்திரத்தில் […]Read More
- மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு..!
- இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்..!
- நவம்பர்-25 முதல் மருத்துவ படிப்பிற்கான சிறப்பு கலந்தாய்வு தொடக்கம்..!
- அதானி குழுமத்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது அமெரிக்கா..!
- ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பரிசுத்தொகை அறிவிப்பு..!
- 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு..!
- பிரதமர் நரேந்திர மோடி டொமினிகா நாட்டின் உயரிய விருதைப் பெற்றார்..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (21.11.2024)
- வரலாற்றில் இன்று (21.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 21 வியாழக்கிழமை 2024 )