திருவண்ணாமலையைச் சேர்ந்த மாணவி வினிஷா உமாசங்கர் எஸ்கேபி இண்டர்நேஷனல் பள்ளியில் 9ம் வகுப்பு படித்துவருகிறார். இவர் காற்று மாசினை குறைக்க கரித்துண்டுக்கு பதில் சூரிய மின்சக்தியில் இயங்கும் இஸ்திரி பெட்டியை கண்டுபிடித்துள்ளார். இப்படைப்பு ஸ்வீடனில் நடந்த Children’s Climate Prize போட்டியில் முதல் பரிசை வென்றுள்ளது. ஸ்வீடனின் துணைப் பிரதமா் இசபெல்லா கலந்து கொள்ளும் இணையவழி நிகழ்வில், வினிஷாவுக்கு விருது வழங்கப்படுகிறது. முன்னதாக வினிஷா, தானாகவே இயங்கும் மின்விசிறியைக் கண்டடுபிடித்தார். இதற்காக இவருக்கு டாக்டா் ஏபிஜே அப்துல் […]Read More
சர்வதேச ஆண்கள் தினம் ஆண்டுதோறும் நவம்பர் 19ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது 1999ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் உள்ள டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டில் தொடங்கப்பட்டது. இத்தினம் அகில இந்திய ஆண்கள் முன்னேற்ற இயக்கம் (AIMWA) சார்பில் இன்று நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. உலகில் ஆண்களை கௌரவப்படுத்தவும், ஆண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருதியும் இத்தினம் கொண்டாடப்படுகிறது. மகத்தான தியாகங்கள் பல புரிந்து வரும் ஆண்குலத்தின் பெருமையை சமுதாயம் அங்கீகரிக்க இந்நாள் நினைவுப்படுத்தும் நாளாகவும் அமைகிறது. […]Read More
அமெரிக்கத் தேர்தல் 2020: கமலா ஹாரிஸின் வெற்றியும், அமெரிக்க-இந்தியர்களின் அதிகரிக்கும் அரசியல் செல்வாக்கும். 2020 அமெரிக்க தேர்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோசப் பைடன் அதிபராகவும், கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த வெற்றியின் மூலம், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் வரலாறு படைத்துள்ளார். துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் பெண்மணி என்பதோடு, அந்தப் பதவிக்கு கருப்பினத்தில் இருந்தோ, இந்திய வம்சாவளியில் இருந்தோ வரும் முதல் நபரும் அவரே. கலிஃபோர்னியாவின் ஆக்லாண்டில் பிறந்த […]Read More
சர்வதேச சகிப்புத்தன்மை தினம் நவம்பர் 16ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை வளர்க்க, ஐ.நா.வின் ஓர் அங்கமான யுனெஸ்கோ (UNESCO) நிறுவனம் 1995ஆம் ஆண்டு இத்தினத்தை உருவாக்கியது. இன்றைய மக்களிடையே சகிப்புத்தன்மை இல்லாததால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அகிம்சை, சகிப்புத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஜோஸ் டிசோஸா சரமாகூ இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற போர்ச்சுக்கீசிய எழுத்தாளர் ஜோஸ் டிசோஸா சரமாகூ 1922ஆம் ஆண்டு நவம்பர் […]Read More
உலக கருணை தினம் நவம்பர் 13ஆம் தேதி உலகம் முழுவதும் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. இத்தினம் 1998ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. லூயிஸ் பர்பிட்-டன்ஸ் மற்றும் டேவிட் ஜாமிலி என்ற இரண்டு மனிதநேய உறுப்பினர்கள் கருணை இயக்கத்தை ஆரம்பித்தனர். நாடு முழுவதும் நல்ல செயல்களை முன்னிலைப்படுத்தவும், மற்றவர்களுக்கு உதவும் எண்ணத்தோடு இருக்க வேண்டும் என்பதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும். பி.சுசீலா தென்னிந்திய திரையுலகின் புகழ்பெற்ற பின்னணி பாடகி பி.சுசீலா 1935ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி ஆந்திர மாநிலத்திலுள்ள […]Read More
உலக நிமோனியா (நுரையீரல் அழற்சி) தினம் ஆண்டுதோறும் நவம்பர் 12ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. சிறுவர்களின் நலனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கத்தோடு நூற்றுக்கும் அதிகமான உலகளாவிய அமைப்புகள் இணைந்து 2009ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி முதலாவது உலக நிமோனியா தினத்தை கடைபிடித்தனர். பின்பு இத்தினம் 2010ஆம் ஆண்டுமுதல் நவம்பர் 12ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. வல்லிக்கண்ணன் புகழ்பெற்ற எழுத்தாளர் வல்லிக்கண்ணன் 1920ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராஜவல்லிபுரத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் ரா.சு.கிருஷ்ணசாமி. இவர், […]Read More
இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல்கலாம் ஆசாத் 1888ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி சவுதி அரேபியாவில் பிறந்தார். ஆசாத் (விடுதலை) என்பது இவர் வைத்துக்கொண்ட புனைப்பெயராகும். இவர் 1947ஆம் ஆண்டு முதல் 1958ஆம் ஆண்டு வரை கல்வி அமைச்சராக இருந்தார். கல்வித் தேவைகளை சரியான முறையில் நிறைவு செய்ய உறுதி பூண்ட இவர் அதற்கான அடித்தளத்தை அமைத்தார். இந்திய தொழில்நுட்ப கழகத்தை (IIT) 1951ஆம் ஆண்டு உருவாக்கினார். பல்கலைக்கழக மானியக்குழு (UGC) என்ற அமைப்பை […]Read More
ஏகே47 துப்பாக்கியை வடிவமைத்த மிக்கைல் கலாஸ்னிக்கோவ் 1919ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி ரஷ்யாவில் பிறந்தார். இவரை கலாஸ்னிக்கோவ் என்று சுருக்கமாக அழைப்பார்கள். இவர் 1942ஆம் ஆண்டு முதல் செஞ்சேனைப் படைப்பிரிவின் தலைமையகத்துக்காக துப்பாக்கிகளை வடிவமைக்கும் பிரிவில் உதவி புரிந்துக் கொண்டிருந்தார். 1944ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்டு வந்த துப்பாக்கியின் முன் மாதிரியை வைத்து, வாயுவினால் செயல்படக்கூடிய சிறிய துப்பாக்கியை உருவாக்க ஆரம்பித்தார். அதன் பிறகு 1946ஆம் ஆண்டு தாக்குதல் துப்பாக்கிகளை வடிவமைக்கும் நிலைக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டார். […]Read More
உலக நகர திட்டமிடல் தினம் நவம்பர் 8ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ஒரு நகரத்தை உருவாக்கும்போது, எதிர்காலத்திற்கு ஏற்ப திட்டமிட வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது. இத்தினத்திற்கான அமைப்பு 1949ஆம் ஆண்டு பேராசிரியர் Carlos Maria della Paolera என்பவரால் நிறுவப்பட்டது. சர்வதேச கதிரியக்கவியல் தினம் இன்றைய நவீன மருத்துவத் துறையில் மருத்துவப் படிமவியலின் சிறப்பினை பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்ல ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 8ஆம் தேதி சர்வதேச கதிரியக்கவியல் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மேலும் வில்ஹெம் ராண்ட்ஜன் என்பவர் […]Read More
உலகம் போற்றும் இந்திய அறிவியல் மேதை சர் சந்திரசேகர வெங்கடராமன் 1888ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி திருச்சி மாவட்டத்திலுள்ள திருவானைக்காவல் என்னும் ஊரில் பிறந்தார். அந்த காலக்கட்டத்தில் இந்தியாவில் அறிவியல் துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் இல்லாததால், கொல்கத்தாவில் நிதித்துறை துணை தலைமை கணக்கராக பணியில் சேர்ந்தார். மகேந்திரலால் சர்க்கார் நிறுவிய இந்திய அறிவியல் வளர்ச்சி கழகத்தில் பகுதி நேரமாக வேலை செய்தார். இசைக்கருவிகளின் அதிர்வுகள், ஒளிச்சிதறல் பற்றி ஆய்வுகளை செய்தார். ஒளி ஒரு பொருளில் ஊடுருவிச் […]Read More
- ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படப்பிடிப்பு நிறைவு..!
- ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் 2வது பாடல் வெளியானது..!
- விக்ராந்த் நடித்துள்ள ‘தீபாவளி போனஸ்’ திரைப்படம் நாளை ஓடிடியில் வெளியீடு..!
- டெல்டா மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்..!
- திருநர் திறமைத் திருவிழா 2024
- புயலாக உருமாறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடக்கம்..!
- இன்று தொடங்குகிறது நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர்..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (25.11.2024)
- வரலாற்றில் இன்று (25.11.2024 )