இரண்டாம் உலக போரின்போது ஐரோப்பாவில் வாழ்ந்த யூத மக்களுக்கு எதிராக ஹோலோகாஸ்ட் எனப்படும் யூத இன ஒழிப்பு மற்றும் படுகொலையை நாஜிக்கள் செய்தனர். சுமார் 60 லட்சம் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 1945ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி அன்று நாஜி மரண முகாமில் மீதமிருந்த யூதர்களை சோவியத் படைகள் விடுவித்தது. இதுபோன்ற இனப்படுகொலைகள் மீண்டும் நடக்காமல் இருக்க ஐ.நா.அமைப்பு 2005ஆம் ஆண்டிலிருந்து இத்தினத்தை கடைப்பிடிக்கிறது. சாமுவேல் கோம்பர்ஸ் அமெரிக்காவின் முக்கிய தொழிற்சங்கத் தலைவரான சாமுவேல் கோம்பர்ஸ் […]Read More
இந்திய தேர்தல் ஆணையம் 1950ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி அன்று துவங்கப்பட்டது. அதை சிறப்பிக்கும் வகையில் ஜனவரி 25ஆம் தேதியை 2011ஆம் ஆண்டில் தேசிய வாக்காளர் தினமாக இந்திய அரசு அறிவித்தது. அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் ஆணையத்தை கௌரவிக்கும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது. தேர்தலில் ஓட்டுப்பதிவை அதிகரிக்கவும், அதன் முக்கியத்துவத்தையும், ஓட்டுரிமை என்பது ஒவ்வொருவரின் உரிமை என்பதை உணர்த்துவதற்காகவும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்திய சுற்றுலா தினம் இந்திய சுற்றுலா தினம் ஜனவரி 25ஆம் […]Read More
இந்திய சுதந்திரத்தை தன்னுடைய உயிர் மூச்சாகக் கொண்டு அயராது பாடுபட்ட புரட்சி வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1897ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி ஒரிஸா மாநிலம் கட்டாக்கில் பிறந்தார். ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு குருவைத் தேடி அலைந்து கொண்டிருந்தவர், குரு கிடைக்காததால் கல்லூரியில் சேர்ந்தார். அங்கே ஆசிரியருடன் சண்டை ஏற்பட்டு கல்லூரியை விட்டு நீக்கப்பட்டார். பின்பு சி.ஆர்.தாஸ் உதவியுடன் கல்லூரியில் சேர்ந்து ஐ.சி.எஸ். (Indian Civil Services) பட்டம் பெற்று, லண்டனில் வேலை பார்த்து கொண்டிருந்தார். […]Read More
இந்திய விஞ்ஞானி எம்.ஆர்.எஸ்.ராவ் 1948ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி மைசூரில் பிறந்தார். இவருடைய முழுப்பெயர் எம்.ரங்கசாமி சத்யநாராயண ராவ் ஆகும். இவர் நூற்றுக்கணக்கான சர்வதேச பத்திரிக்கை கட்டுரைகளை எழுதியுள்ளார். மேலும் இவர் குரோமட்டின் உயிரியல் மற்றும் புற்றுநோய் உயிரியல் பற்றிய ஆராய்ச்சிகளில் அதிக கவனம் செலுத்தினார். இவருடைய வெளியீடான பெருங்குடல் புற்றுநோய் பற்றிய விளக்கங்கள் செல் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இவருக்கு இந்திய அரசால் அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவில் (2010) பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. […]Read More
அமெரிக்க விண்வெளி வீரரும், விமானியுமான பஸ் ஆல்ட்ரின் 1930ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி நியூ ஜெர்சியிலுள்ள கிளென் ரிட்ச்சில் பிறந்தார். இவரின் இயற்பெயர் எட்வின் யூஜின் ஆல்ட்ரின் ஆகும். இவர் பஸ் (Buzz) என்ற பெயரிலேயே பிறப்பில் இருந்து அழைக்கப்பட்டு வந்தார். எனவே, இவர் தனது பெயரை ‘பஸ் ஆல்ட்ரின்’ என அதிகாரப்பூர்வமாக 1988ஆம் ஆண்டு மாற்றிக் கொண்டார். 1963ஆம் ஆண்டு நாசா விண்வெளிப் பயிற்சியில் இணைந்தார். ஜெமினி 12 விண்கலத்தில் செல்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். முதன்முதலாக […]Read More
கர்நாடக இசைப்பாடகரும், திரைப்பட பின்னணி பாடகருமான சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் 1933ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி நாகை மாவட்டத்திலுள்ள சீர்காழியில் பிறந்தார். பி.எஸ்.செட்டியார், அவர்களின் அறிவுரையின்படி சென்னை தமிழ் இசைக் கல்லூரியில் சேர்ந்து இசை பயின்றார். இவர் இசைமாமணி பட்டமும் (1949), சங்கீத வித்வான் பட்டமும் (1951) பெற்றார். 1951ஆம் ஆண்டு சென்னை மியூசிக் அகாடமியில் நடந்த போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்றார். 1953ஆம் ஆண்டு பொன்வயல் என்ற படத்தில் சுத்தானந்த பாரதியின் சிரிப்புத்தான் வருதையா […]Read More
தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக பாடுபட்ட தமிழ் அறிஞர் அ.குமாரசுவாமி புலவர் 1854ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி இலங்கையின் யாழ்ப்பாணம் அடுத்த சுண்ணாகம் என்ற ஊரில் பிறந்தார். இவர் தன்னுடைய 5 வயதில் குலகுரு வேதாரண்யம் நமசிவாய தேசிகரிடம் ஏட்டுக்கல்வி கற்றார். மேலும் இவர் நீதி நூல்கள், யாப்பருங்கலக்காரிகை, தொல்காப்பியம் போன்றவற்றை கற்றுத் தேர்ந்தார். கவிப் பாடுவது, கட்டுரை எழுதுவது, சொற்பொழிவு நிகழ்த்துவதிலும் திறமை பெற்றிருந்ததால்,’புலவர்’ என்று அழைக்கப்பட்டார். ஆறுமுக நாவலரின் வண்ணார்ப்பண்ணை சைவப் பிரகாச வித்யாலயத்தில் […]Read More
வாட்ஸ் அப்ல ஸ்டேட்டஸ் போட்டு பார்த்திருப்பீங்க.. வாட்ஸ்அப்பே ஸ்டேட்டஸ் போட்டு பார்த்திருக்கீங்களா?
மே 15ம் தேதி வரை புதிய கொள்கையை ஆராய்ந்து பயனாளர்கள் அதற்கு ஒப்புதல் வழங்கலாம் என, வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்த நிலையில், பேஸ்புக் நிறுவனத்துடன் எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ள மாட்டோம், உங்கள் தகவலை பாதுகாப்பது எங்கள் முக்கிய பணி, என வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் போட்டுள்ளது.வாட்ஸ்அப்பில் பயனாளர்களின் உரையாடல்கள் கண்காணிக்கப்பட்டு, வணிக நோக்கில் அந்த தகவல்கள் பிற நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் என அண்மையில் அறிவிக்கப்பட்டது.. இதற்கு ஒப்புதல் அளிக்காதவர்கள் பிப்ரவரி 8ம் தேதிக்கு பிறகு, வாட்ஸ்-அப் செயலியை […]Read More
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் 1917ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி இலங்கையில் பிறந்தார். இவருடைய முழுப்பெயர் மருதூர் கோபாலன் ராமச்சந்திரன். இவர் இந்தியாவின் தலைச்சிறந்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார். மேலும் இவர் 1977ஆம் ஆண்டு முதல் இறக்கும் வரை தொடர்ந்து மூன்று முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தார். சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலம் தமிழக திரைத்துறையில் அறிமுகமானார். பிறகு அறிஞர் அண்ணாவின் அரசியல் கருத்துகளில் ஈர்க்கப்பட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். 1960ஆம் ஆண்டு இவர் […]Read More
அமெரிக்க விலங்கியலாளர் டயேன் ஃபாசி 1932ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி கலிபோர்னியாவில் பிறந்தார். இவர் நீண்டகாலமாக ஆப்பிரிக்காவில் உள்ள ருவாண்டா நாட்டில் கொரில்லாக்களோடு வாழ்ந்து, கொரில்லாவை பற்றிய நுணுக்கமான குறிப்புகளைத் தொகுத்து வந்தார். புகழ்பெற்ற உயிரின ஆய்வாளராகிய லூயி லீக்கி என்பவரால் ஊக்குவிக்கப்பட்டு இவர் கொரில்லாவைப் பற்றிய ஆய்வுகளை செய்து வந்தார். இவருடைய ஆய்வுகள் ஜேன் குட்டால், சிம்ப்பன்சி பற்றி நடத்திய அரிய ஆய்வைப்போல முதன்மையானது. இவர் 1985ஆம் ஆண்டு மறைந்தார். ஆனந்தரங்கம் பிள்ளை இன்று […]Read More
- ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படப்பிடிப்பு நிறைவு..!
- ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் 2வது பாடல் வெளியானது..!
- விக்ராந்த் நடித்துள்ள ‘தீபாவளி போனஸ்’ திரைப்படம் நாளை ஓடிடியில் வெளியீடு..!
- டெல்டா மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்..!
- திருநர் திறமைத் திருவிழா 2024
- புயலாக உருமாறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடக்கம்..!
- இன்று தொடங்குகிறது நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர்..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (25.11.2024)
- வரலாற்றில் இன்று (25.11.2024 )