இன்று தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது..!

 இன்று தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது..!

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு சட்டசபை கூடியது. தமிழ்நாடு சட்டப்பேரவை காலை 9.30 மணியளவில் தொடங்கியது. எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் வருகை தந்துள்ளனர். முதலாவதாக, முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாசார்யா, முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி எஸ்.பத்மநாபன், மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய சமூக நீதி இயக்கத் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம், டாடா நிறுவனத் தலைவர் ரத்தன் டாடா, முன்னாள் தலைமைச் செயலர் பி.சங்கர், முரசொலி செல்வம் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்யவும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக் கூடாது எனவும் மத்திய அரசை வலியுறுத்தி அரசினர் தனி தீர்மானத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முன் மொழிய உள்ளார்.

தொடர்ந்து நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு 2024 – 25 ஆம் ஆண்டு கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகளை அளிப்பார். தடுப்பணை பாலம் சீரமைப்பு, புதிய சிறை, கால்நடை மருந்தகம், போக்குவரத்து பணிமனை அமைப்பது குறித்து பல்வேறு தொகுதி சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளிக்க உள்ளனர்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...