1 min read

படப்பொட்டி – 7வது ரீல் – பாலகணேஷ்

படப்பொட்டி – 7 வது ரீல் – பாலகணேஷ் அலெக்ஸாண்டர் டூமாஸ் என்கிற நாவலாசிரியர் எழுதிய கதையை அடிப்படையாக வைத்து 1939ம் ஆண்டில் ‘தி மேன் இன் தி அயர்ன் மாஸ்க்’ என்ற பெயரில் ஒரு திரைப்படம் வெளியானது. அந்தத் திரைப்படக் கதையைத் தமிழுக்கேற்றவாறு மாற்றி, 1940ல் மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம் தயாரித்து இயக்கினார்.  பி.யு.சின்னப்பா இரட்டைச் சகோதரர்களாக நடித்தார். தமிழ் சினிமாவில் இரட்டை வேடம் ஏற்று நடித்த முதல் நடிகர் பி.யு.சின்னப்பாதான். அது மட்டுமில்லை, மூட்டை […]

1 min read

கலைவாணர் எனும் மா கலைஞன் – 4 – சோழ. நாகராஜன்

கலைவாணர் எனும் மா கலைஞன் 4) இன்று நாஞ்சில்நாட்டின் பெருமை நாளை தமிழகத்தின் பெருமை… ‘கோவலன்’. டிகேஎஸ். குழுவினர் 1925 மார்ச் 31 அன்று அரங்கேற்றிய முதல் நாடகம்தான் அது. கலைவாணர் ஏற்ற முதல் வேடம் பாண்டியன் நெடுஞ்செழியன். பிறகு சாவித்திரி நாடகத்தில் துயுமத்சேனன் பாத்திரம். மனோஹராவில் பௌத்தாயணன் வேடம். அப்புறம் அரங்கேறிய அபிமன்யூ சுந்தரி நாடகத்தில் கிருஷ்ணனுக்கு தொந்திச் செட்டி வேடம். இப்படி தானொரு தவிர்க்க இயலாத கலைஞராக வளர்ந்துவந்தார் கிருஷ்ணன். தொடர்ந்து அவருக்கு வயதான […]

1 min read

நானும், ரஜினியும் – கமல்ஹாசன்.

நானும், ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம். ரஜினி சொன்ன அதிசயம் உண்மைதான். நானும், ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம்; தமிழகத்தின் மேம்பாட்டிற்காக சேர்ந்து பயணிக்க வேண்டும் என்றால் பயணிப்போம். நல்ல தலைவராக இருக்கும்பட்சத்தில் கோத்தபய ராஜபக்ச நியாயமான ஆட்சியை தர வேண்டியது அவரது கடமை- கமல்ஹாசன்.

1 min read

மறக்க முடியா நடிகர் அசோகன்

மறக்க முடியாத நடிகர் அசோகன் – அவருடைய நினைவு தினம் இன்று எஸ். ஏ. அசோகன், தமிழ் திரைப்பட உலகில் அசைக்க முடியாத இடத்தை பிடித்த நடிகராவார். சிறந்த வில்லன் நடிகரான இவர் ஒரு சிறந்த குணசித்திர நடிகரும் ஆவார். திருச்சியில் பிறந்து வளர்ந்த இவரது இயற்பெயர் ஆண்டனி, திருச்சியிலுள்ள புனித சூசையப்பர் கல்லூரியில் தனது இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தவர். திருச்சியில் புனித ஜோசப் கல்லூரியில் முதுகலை படித்தார். துணைவியாரின் பெயர், துணைமேரி ஞானம் (இயற்பெயர் சரஸ்வதி) அமல்ராஜ் […]

1 min read

எம்ஜிஆர் வேண்டுகோளுக்கு இணங்கவே சிவாஜி கட்சித் தொடங்கினார்! நடிகர் பிரபு விளக்கம்

எம்ஜிஆர் வேண்டுகோளுக்கு இணங்கவே சிவாஜி கட்சித் தொடங்கினார்! நடிகர் பிரபு விளக்கம்:        சிவாஜி கட்சித்தொடங்கி என்ன ஆனார் என்று தமிழக முதல்வர், ரஜினியின் அரசியல் வெற்றிடம் குறித்த பேச்சுக்கு விளக்கம் அளித்த நிலையில்,  எம்ஜிஆர் வேண்டுகோளுக்கு இணங்கவே தனது தந்தை சிவாஜி கட்சித் தொடங்கினார் என்று  நடிகர் பிரபு விளக்கம் அளித்துள்ளார். ரசியலில் பெரிய பதவிகளுக்கான ஆசை என் தந்தைக்கு என்றுமே இருந்ததில்லை  என்றும் தெரிவித்துள்ளார்.           […]

1 min read

ரஜினி ரசிகர்கள் கவலை

, இதுவும் ‘அது’ மாதிரி ஆகிவிடப் போகுது: ரஜினி ரசிகர்கள் கவலை.         இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் வெளியிட்டுள்ள ட்வீட்டை பார்த்து ரஜினி ரசிகர்களுக்கு கவலை ஏற்பட்டுள்ளது.        ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் தர்பார். ஷூட்டிங் முடிந்த நிலையில் இன்று டப்பிங் பணிகள் துவங்கியுள்ளது. தர்பார் குறித்து ஏதாவது அப்டேட் கிடைக்காதா என்று ரஜினி ரசிகர்கள் ஏங்குவதால் முருகதாஸ் டப்பிங் […]

1 min read

தனுஷின் அசுரன் படத்தை பாராட்டிய கமல்ஹாசன் !

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் அசுரன்.கலைபுலி எஸ்.தானு தயாரிப்பில் வெளியான இப்படத்தில் மஞ்சுவாரியர், டீ.ஜே.கருணாஸ் மகன் கென், பசுபதி, உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம் விமர்சன ரீதியாகவும், பொருளாதாரா ரீதியாகவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், நேற்று இரவு உலக நாயகன் கமலஹாசன் ’அசுரன்’ திரைப்படத்தை பார்த்தார்.அவருடன் அவருடைய மகள் சுருதிஹாசன் மற்றும் அசுரன் பட நாயகி மஞ்சுவாரியர் இந்த படத்தை பார்த்தனர். […]

1 min read

படப்பொட்டி – 6வது ரீல் – பாலகணேஷ்

படப்பொட்டி – 6 வது ரீல் – பாலகணேஷ் மாமாயாபஜார்!! உங்களில் இந்தப் படம் பார்க்காதவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கும். மூன்று மணி நேரம் ஓடக்கூடிய படம் என்றாலும் சற்றும் சலிப்படையச் செய்யாமல் விறுவிறுவென்று ரசிக்கும்படியாக அமைந்திருந்த படம். ஒரே கதை பதினொரு முறை படமாக்கப்படுவது என்கிற அதிசயத்தை நிகழ்த்திய ஒரே படம் இந்த மாயாபஜார். தெலுங்கில் இரு முறையும், தமிழில் இரு முறையும் மற்ற பிராந்திய மொழிகளில் பலமுறையுமாக வெளியான அதிசயப் படம் இது. […]

1 min read

கலைவாணர் எனும் மா கலைஞன் – 3) படிக்கவந்த அன்றே ஆசிரியரான மாணவன்

கலைவாணர் எனும் மா கலைஞன் 3) படிக்கவந்த அன்றே ஆசிரியரான மாணவன்… நாடகமே அந்நாளின் முதல்பெரும் பொழுதுபோக்கு சாதனமாக இருந்தது. அன்று சினிமா இருந்தாலும் அது பேசவில்லை. பேசாப்பட யுகத்தில் நாடக நடிகர்களுக்குமே அதன்பேரில் ஆர்வம் இருக்கவில்லை. புகைப்படம் சலனப்படம் ஆன நிலையில் அசையும் படத்தை மக்கள் ஆர்வமாகப் பார்த்தார்கள் என்றாலும் நாடகம் வழங்கிய கலை அனுபவத்தை சினிமாவால் வழங்கவே இயலவில்லை அப்போது. கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் தன் இளமைக் காலத்தில் நாடகத்தில் நடிக்கவே பெரும் ஆர்வம் […]

1 min read

தனுஷிற்கு நீதிமன்றம் உத்தரவு

தனுஷிற்கு நீதிமன்றம் உத்தரவு             மதுரை மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதிகள், நடிகர் தனுஷ் தங்கள் மகன். அவரை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது எங்கள் பாராமரிப்பு செலவை ஏற்க வேண்டும் என்று மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை எதிர்த்து தனுஷ் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட பல சான்றிதழ்களை தாக்கல் செய்தார். இதனை ஆராயந்த நீதிமன்றம் கதிரேசன் வழக்கை […]