படப்பொட்டி – 5வது ரீல் – பாலகணேஷ்

 படப்பொட்டி – 5வது ரீல் – பாலகணேஷ்

எம்.கே.தியாகராஜ பாகவதர்! தமிழ்த் திரையுலகின் முதல் உச்ச நட்சத்திரம்!! திரையுலக வாழ்க்கையில் அதிகபட்ச ஏற்றம், அதே அளவு இறக்கம் அனைத்தையும் பார்த்தவர். அவருடைய திரையுலக வாழ்வின் உச்சமான ‘ஹரிதாஸ்’ அக்டோபர் 16, 1944 அன்று வெளியானது. அதற்குமுன் வந்த பாகவதர் படங்களின் வசூலையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு வெற்றி முரசு கொட்டியது.

வெற்றியை ஒரு மாதம்வரைதான் பாகவதரால் அனுபவிக்க முடிந்தது. 1944 டிசம்பரில் எம்.கே.டி.யும், கலைவாணரும் லட்சுமிகாந்தன் என்ற பத்திரிகையாளரைக் கொலை செய்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்கள். அந்த வழக்கில் தீர்ப்பு, மறுமுறையீடு, உச்சத் தீர்ப்பு என்று அவர்கள் இருவரும் இரண்டரை ஆண்டுகள் கழித்தே சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்கள்.

‘இதான் எனக்குத் தெரியுமே’ என்றொரு எண்ணம் தங்கவேலு காமெடி போல உங்கள் மனதில் ஓடுகிறது இல்லையா..? நான் சொல்ல வந்த விஷயம் பாகவதருடன் இரண்டு திலகங்களுக்கும் இருந்த சம்பந்தம் பற்றியது.

பாகவதரின் காலத்திற்குப் பிறகு உச்சநட்சத்திரமாகத் திகழ்ந்த எம்.ஜி.ராமச்சந்திரன் என்கிற எம்ஜிஆர் பாகவதரின் அபிமானத்திற்கு உரியவராகத் திகழ்ந்தார். 1936ல் ‘சதி லீலாவதி’ என்ற படத்தில் ஒரு கான்ஸ்டபிளாக சிறிய வேடத்தில் திரையுலகில் அறிமுகமான எம்ஜிஆர், அதன்பின் சிறுசிறு வேடங்களில் 6 படங்கள் நடித்தார்.

1941ம் ஆண்டு வெளியான பாகவதரின் ‘அசோக்குமார்’ படத்தில் எம்ஜிஆருக்கு முதல்முறையாக முக்கிய கதாபாத்திரம் கிடைத்தது. அசோகச் சக்ரவர்த்தியின் மகனான குணாளனை, அவரது சிற்றன்னை  திருஷ்யரக்ஷகா காதலிப்பதாக அமைந்த துணிச்சலான கதையில் குணாளனாக பாகவதர் நடிக்க, அவரது உயிர்த்தோழன் மகேந்திரனாக எம்ஜிஆர் நடித்திருந்தார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...