நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழில் வெளியாகும் படங்கள் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகும்போது அங்கேயும் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது. அவருக்கென அங்கே தனியாக ரசிகர் வட்டமே உருவாகியுள்ளது. இந்த நிலையில் முதன்முறையாக ‘சார்’ என்கிற படம் மூலம் நேரடியாக தெலுங்கில் அடியெடுத்து வைத்துள்ளார் தனுஷ். தமிழில் ‘வாத்தி’ என்ற பெயரில் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி வெளியானது. இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் சம்யுக்தா கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, பாரதிராஜா, சாய்குமார், தணிகலபரணி, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். தற்போது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலுமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்று பல இடங்களில் தற்போதும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது வாத்தி. இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றிக்குப் பக்கபலமாக இருந்த பத்திரிகையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இயக்குனர் உள்ளிட்ட வாத்தி படக்குழுவினர் சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி, உதவி திரைக்கதை ஆசிரியர் சதீஷ், ஒளிப்பதிவாளர் யுவராஜ், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நகைச்சுவை நடிகர் சாரா மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் நடிகர் சாரா பேசும்போது, “இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் இணைந்து நிறைய படங்கள் பண்ண வேண்டும். அதனால் என்னைக் கழட்டி விட்டுடாதீங்க என இயக்குனரை கேட்டுக்கொள்கிறேன். வீட்டில் என் பையனை நான் படிக்கச் சொன்னால் படிக்க மாட்டான். ஆனால் வாத்தி படத்தில் தனுஷ் மாணவர்களைப் படிக்கச் சொல்லி உற்சாகப்படுத்துவதைப் பார்த்துவிட்டு தனுஷ் அங்கிள் சொல்வதால் படிக்கிறேன் என்று கூறுகிறான். அந்த அளவிற்கு வாத்தி படம் அனைவரையும் சென்று சேர்ந்துள்ளது” என்று கூறினார். ஒளிப்பதிவாளர் யுவராஜ் பேசும்போது, வாத்தி படம் வெளியானதில் இருந்து எந்த ஊருக்குச் சென்றாலும் திருவிழா மாதிரி இருக்கிறது. இப்போதும் பல தியேட்டர்களில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த நேரத்தில் என்னுடைய குருநாதர் ஒளிப்பதிவாளர் ரத்னவேலுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார். இயக்குனர் வெங்கி அட்லூரி பேசும்போது, “இந்தப் படத்தின் கதையை நம்பி படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் வம்சி மற்றும் எனக்கு மிகப்பெரிய ஆதரவு தந்த தனுஷ் இருவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது வரை 8 நாட்களில் 75 கோடி நிகர தொகையாக வாத்தி வசூலித்துள்ளது. பத்திரிகை விமர்சனங்கள் மற்றும் படம் பார்த்தவர்களின் வாய்மொழி பாராட்டுகள் என பாசிட்டிவான விளம்பரம் கிடைத்துள்ளது.…
Author: admin
மலர்வனம் இதழ் வழங்கிய ‘சாதனை மகளிர்’ விருதுகள்
மலர்வனத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க நிகழ்வாக “மலர்வனம் சாதனை மகளிர் விருது விழா” ஞாயிறு, பிப்ரவரி 19, 2023 சென்னை பாரதிய வித்யா பவன் அரங்கத்தில் நடைபெற்றது. காம்கேர் சி.இ.ஓ. கே. புவனேஸ்வரி மற்றும் கண் டாக்டர் கல்பனா சுரேஷ் சிறப்பு…
கனவுகள் கைவசப்படும்
சர்வதேச வாழ்வியல் ஆலோசகர், டாக்டர் ஃபஜிலா ஆசாத் எழுதிய தன்னம்பிக்கை கட்டுரை. உங்களுக்குப் பிடித்த ஒரு சுற்றுலா தலத்திற்கு விடுமுறைக்குச் செல்கிறீர்கள் என்றால் பயணம் தொடங்கியதிலிருந்து அந்த இடத்தை அடைவது வரை மகிழ்ச்சியாக அங்கு சென்று பார்த்து ரசித்து அனுபவிக்க மகிழ்ச்சியான எண்ணங்களுடன்…
வரம்புமீறிய காவல்துறை || மறுக்கப்பட்ட நீதி || வழியறியா வழக்கறிஞர்கள்
மறுக்கப்பட்ட நீதியை ‘நீதியைத் தேடி’ எனும் தலைப்பில் படங்களுடன் ஆய்வு நூலை மிகவும் எளிய நடையில் விறுவிறுப்பாக எழுதியிருக்கிறார் முனைவர் அரங்க.சம்பத்குமார். மக்களுக்கு நீதி வேண்டுமென்றால் வழக்கறிஞர்களிடம் முறையிடுவார்கள். ஆனால் வழக்கறிஞர்களுக்கே நீதி மறுக்கப்பட்டபோது யாரிடம் முறையிடுவார்கள்? மக்களிடம்தான். அப்படித்தான் இந்த…
ஆசையின் விலை ஆராதனா | 9 | தனுஜா ஜெயராமன்
“எனக்கு கொஞ்சம் ஒர்க் இருக்கு…நீங்க கொஞ்சம் வரமுடியுமா..?” என அனாமிகா கேட்டதையடுத்து.. “ஓ…ஷ்யூர்…இன்னும் அரைமணி நேரத்தில் அங்க இருப்பேன்”…என்றான் அம்ரீஷ் சொன்னமாதிரி சரியாக அரைமணி நேரத்தில் அம்ரீஷ் வந்து விட்டான்… ஷேவ் செய்யாத முகத்தில் ஒரு வார தாடி. அது அவனை…
கிருஷ்ணை வந்தாள் | 10 | மாலா மாதவன்
நெற்றித் திலகம் மின்ன – காளி நீயும் இங்கு வருவாய் பெற்றெ டுத்தத் தாயாய் – வந்து பேணி நலம் காப்பாய் உற்றுத் தெளிந்தோம் நாங்கள் – காளி உன்னை அறிந்து வந்தோம் பற்று பாசம் வைத்தோம் – எங்கள் பந்தம்…
நடிகர் பி.ஆர். துரை எழுதும் காலச்சக்கரம் சுழல்கிறது-7
நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் சினிமாவின் பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார். நாடக உலகில் அரை நூற்றாண்டு காண்பது என்பது மிகப் பெரிய…
பயராமனும் பாட்டில் பூதமும் | 10 | பாலகணேஷ்
ஜீனி திகைத்தது. ‘ழே’யென்று விழித்தது. அதற்குள் இங்கே விபரீதம் அரங்கேறத் தொடங்கியிருந்தது. “அப்பா… எனக்கு என்னாச்சு..? இந்தத் தடியன் உடம்புக்குள்ள நான் எப்டி வந்தேன்..?” என்று அலறியபடி சங்கரனிடம் ஓடினாள் குமார். “ராஸ்கல், தடியன் கிடியன்னு சொன்னே பிச்சுப்புடுவேன். மரியாதை கெட்டவளே..”…
கோடு ஓவியக் கூடல் ஓவியக் கண்காட்சி
சென்னை தியாகராயர் நகர் வெங்கட்நாராயணா சாலையில் அமைந்துள்ள தக்கர் பாபா வித்யாலயா அரங்கில் கோடு ஓவியக் கூடல் அமைப்பு ஓவியக் கண்காட்சியை எட்டு நாட்களுக்கு நடத்துகிறது. கண்காட்சியில் ஐம்பதிற்கும் மேற்பட்ட கலைஞர்களின் 150 ஓவியங்கள் மற்றும் சிறப்பங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் பார்வையாளர்கள்…
ஒற்றனின் காதலி | 12 | சுபா
பீஹாரில் நான் கொன்ற புத்திசுவாதீனமற்ற கணவன், தான் சாகப் போகிறோம் என்பதை உணராமலேயே, ஓர் உயர்ந்த கட்டிடத்தில் இருந்து, கடவுளிடம் சேர்வதற்காக நான் காட்டிய வழியான, குதித்தடைவது என்ற வழியைப் பின்பற்றிக் கீழே குதித்துச் செத்தான். சாவு என்பதையே உணராதவன். என்…
