7.புத்தன்? வெகுநேரம் யாரும் எதுவும் பேசவில்லை. கௌதம் கான்ஸ்டபிள்களிடமிருந்து திமிறிக் கொண்டு அம்மாவின் அருகில் சென்றவன், அவள் உயிர் பறந்துவிட்டது என்பதை உணர்ந்ததும் அவள் காலடியில் அமர்ந்து கண்ணீர் பெருக்கினானே தவிர, ஒரு வார்த்தை சொல்லவில்லை. போஸ் தன்னைத் தாக்கிய அதிர்ச்சிக் கட்டிலிருந்து மெதுவாக வெளிவந்தான். கான்ஸ்டபிள்களை அனுப்பி சாந்தியின் உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸை அழைக்க உத்தரவிட்டான். போலீஸ் யந்திரத்தையும் போன் மூலம் முடுக்கிவிட்டான். கான்ஸ்டபிள்கள் வெளியேறிவிட்டதால் கௌதமின் அருகில் வந்து நின்றுகொண்டவன் சாந்தியின் உடலைப் […]Read More
Tags :கண்ணே கொல்லாதே
5. பேசுகிறான்! “எதிராஜு! இனி நீ தப்ப முடியாது. உனக்கு யார் இரண்டு லட்ச ரூபாய்ப் பணம் கொடுத்தது, சொல்லிடு” என்று மிரட்டினான் போஸ். “வந்து… மாசிலாமணி ஐயாதான் கொடுத்தாங்க பொண்ணு கல்யாணத்துக்காக…” “எப்படி… கல்யாணத்துக்காக, கல்யாணம் முடிஞ்ச அப்புறம் கொடுத்தாரா?” என்று கேட்டான் போஸ் லட்டியைச் சுழற்றியவாறே. “இல்லை, முன்னாடியே கொடுத்துட்டாரு” என்ற எதிராஜு, லட்டி சுரீரென்று முதுகில் பட்டதும் துடித்துப் போனான். “மாசிலாமணி அப்படியெல்லாம் தர்மம் பண்றவரே இல்லை. உன்னால் அவருக்கு ஏதேனும் வேலை […]Read More
4. எதிராஜு… வாயில்மணி அடிக்கவே, அவசர அவசரமாகத்தான் அருந்திக் கொண்டிருந்தவற்றை உள்ளே மறைவாக வைத்துவிட்டு, வீட்டை ஒழுங்கு செய்துவிட்டுக் கதவைத் திறந்தான் எதிராஜு. “யாரு, தெரிலீங்களே” என்றான். “கௌதமோட ஃப்ரெண்ட் நான்” என்றவாறே உள்ளே நுழைந்தான் தர்மா. “நான் உங்களை இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லீங்களே?” என்றான் எதிராஜு சந்தேகமாக. “இதுவரை பார்க்காட்டா என்ன எதிராஜு? இப்போ பாரேன்” என்றவாறே ஸ்வாதீனமாக உள்ளே வந்து அமர்ந்துகொண்டான் தர்மா. சுற்றிலும் பார்த்தான், வீட்டில் விசேஷமாக எதுவுமில்லை. வீடு சுத்தமாகவும் […]Read More
3. வீட்டில்… சிறப்பு உத்தரவின்பேரில் கௌதம் பலத்த காவலோடு மாசிலாமணி வீட்டிற்கே அழைத்து வரப்பட்டான். அவனைப் பார்த்து அவன் அம்மா குமுறி அழுதது பரிதாபமாக இருந்தது. “ஏதாவது ஹோப்ஸ் இருக்கா சார்?” என்று போஸிடம் வந்து கேட்டான் ஒரு இளைஞன். அவன்தான் மாசிலாமணியின் இரண்டாவது மகனாய் இருக்கவேண்டும். போஸ் மௌனமாகத் தன்யாவின் பக்கம் கைகாட்டிவிட்டு ஒதுங்கினான். “மகாவீர், உங்க குடும்பத்தைப் பற்றி ஒரு பிக்சர் கொடுக்க முடியுமா?” என்றாள் தன்யா. “கௌதமைப் பற்றி இதுக்குள்ள உங்களுக்கு எல்லாம் […]Read More
லாக்கப்பில்… “கங்க்ராஜுலேஷன்ஸ், போஸ்! இந்தக் கேஸில் உனக்கு டிஎஸ்பி ப்ரமோஷன் கட்டாயம் கிடைக்கும் பார்” என்றாள் தன்யா. முதல்நாள் கமிஷனரிடம் பேசியபோது இருந்த உற்சாகம் இல்லை போஸுக்கு. அலுப்பாகத் தெரிந்தான். “கேஸ் அவ்வளவு ஸ்ட்ராங்க் இல்லைன்னு கமிஷனர், ப்ராசிக்யூட்டர் எல்லோரும் நினைக்கறாங்க. ஆனா இவன் பேரில் பப்ளிக் கோபமா இருக்கறதால, எந்த லாயரும் கௌதமுக்காக வாதாடத் தயாரா இல்லை” என்றான். அதோடு அந்தக் கேஸை விட்டுவிட்டு வேறு விஷயங்கள் பேச ஆரம்பித்தான். பத்து நிமிடங்கள் கழிந்திருந்தபோது மந்திரம் […]Read More
1. அரெஸ்ட்! “மிஸ்டர் கௌதம், யூ ஆர் அண்டர் அரெஸ்ட்” என்றான் போஸ். கௌதம் விழித்தான். பிறகு மௌனமாக அவனைப் பின்தொடர்ந்தான். “கங்க்ராஜுலேஷன்ஸ், போஸ். இரண்டே நாளில் அக்யூஸ்டைக் கண்டுபிடிச்சுட்டீங்களே! அதோட, இந்தக் கௌதமைக் கம்பிக்குப் பின்னால் வெச்சுப் பார்க்கணும்னு குறைஞ்சது அரை டஜன் இன்ஸ்பெக்டர்கள் விரும்பறாங்க. வெல்டன்” என்றார் கமிஷனர். “தாங்க் யூ சார்” என்றான் போஸ். மனதில் பெருமை நிரம்பியிருந்தது. ஒரு தேர்ந்த குற்றவாளியைப் பிடித்திருக்கிறான்! அதுவும் கொலைக் குற்றத்திற்கு! “உட்காருங்க. கேஸைச் சுருக்கமா […]Read More