5 மாநிலங்களில் தேர்தல் ஆணையர்கள் நேரில் ஆய்வு

புதுடெல்லி: சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெறவுள்ள மாநிலங்களில் தயார் நிலை குறித்து ஆய்வு செய்ய தலைமை தேர்​தல் ஆணை​யர் மற்​றும் தேர்​தல் ஆணை​யர்​கள் ஆகியோர் பயணத்தை தொடங்​கி​யுள்​ளனர்.

தமிழகம், கேரளா, மேற்கு வங்​கம், அசாம் ஆகிய 4 மாநிலங்​கள் மற்​றும் புதுச்​சேரி யூனியன் பிரதேசம் ஆகிய​வற்​றில் வரும் ஏப்​ரல் அல்​லது மே மாதத்​தில் சட்​டப்​பேரவை தேர்​தல்​கள் நடைபெறவுள்ளன. இதற்​கான அறி​விப்பை தலைமை தேர்தல் ஆணையம் அடுத்த மாதம் 2-வது வாரத்தில் வெளியிடும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இந்​நிலை​யில இந்த 5 மாநிலங்களிலும் சட்டப் பேரவைத் தேர்​தல் தயார் நிலை குறித்து ஆய்வு செய்​யும் பணியை தேர்​தல் ஆணையம் தொடங்​கி​யுள்​ளது. அசாம் மாநிலத்​தில் தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார், தேர்​தல் ஆணை​யர்​கள் சாந்து மற்​றும் விவேக் ஜோஷி தலை​மையி​லான குழு இன்று முதல் பிப்.18ம் தேதி வரை பயணம் செய்​கிறது.

இவர்​கள் மாநில தேர்​தல் ஆணை​யர், தேர்​தல் அதி​காரி​கள், தலைமைச் செய​லா​ளர், டிஜிபி, மாவட்ட ஆட்​சி​யர்​கள், காவல் துறை அதி​காரி​கள், அரசி​யல் கட்​சி​யினர் ஆகியோரை சந்​தித்து ஆலோ​சனை நடத்​து​வர். இவர்​கள் தமிழகம் மற்​றும் புதுச்​சேரிக்கு இந்த மாதம் இறு​தி​யில் வரு​வர் எனத் தெரி​கிறது. மேற்​கு ​வங்​கம் மற்​றும் கேரளா​வில் இவர்​களது பயணம் இன்​னும் முடிவு செய்யப்பட​வில்​லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!