CUET நுழைவுத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு

சென்னை: முது​நிலை படிப்​பு​களில் சேரு​வதற்​கான க்யூட் நுழைவுத் தேர்வு மார்ச் 6 முதல் 27-ம் தேதி வரை நடை​பெறுகிறது. இதற்​கான தேர்​வுக் கால அட்​ட​வணையை என்​டிஏ வெளி​யிட்​டுள்​ளது.

நாடு முழு​வதும் உள்ள மத்​திய பல்​கலைக்​கழகங்​கள் மற்​றும் அவற்​றின்​கீழ் இயங்​கும் கல்​லூரி​களில் இளநிலை, முது​நிலை பட்​டப் படிப்​பு​களில் சேர பல்​கலைக்​கழக பொது நுழைவுத் தேர்​வில் (க்​யூட்) தேர்ச்சி பெறவேண்​டும்.

இந்த தேர்வை தேசிய தேர்​வு​கள் முகமை (என்​டிஏ) ஆண்​டு​தோறும் நடத்​திவரு​கிறது. அதன்​படி, வரும் (2026-27) கல்வி ஆண்​டில் முது​நிலை படிப்​பு​களுக்​கான க்யூட் தேர்வு கணினி வழி​யில் மார்ச் மாதம் நடத்​தப்பட உள்​ள​தாக என்​டிஏ அறி​வித்​தது.

இதற்​கான இணை​யதள விண்​ணப்ப பதிவு கடந்த டிச.14-ல் தொடங்கி ஜன.25-ம் தேதி​யுடன் முடிந்​தது. 4.11 லட்​சம் பேர் விண்​ணப்​பித்​துள்​ளனர். இந்​நிலை​யில், தேர்​வுக் கால அட்​ட​வணையை என்​டிஏ தற்​போது வெளி​யிட்​டுள்​ளது. அதன்​படி, க்யூட் தேர்வு மார்ச் 6 முதல் 27-ம் தேதி வரை நடை​பெறுகிறது.

இதற்​கான விரி​வான கால அட்​ட​வணை https://exams.nta.ac.in/CUET-PG என்ற தளத்​தில் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. கூடு​தல் விவரங்​களை www.nta.ac.in என்ற தளத்​தில் அறிய​லாம். ஏதேனும் சந்​தேகங்​கள் இருந்​தால் 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்​லது [email protected] என்ற மின்​னஞ்​சலில் தொடர்பு கொள்​ளலாம் என்று என்​டிஏ வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில்​ கூறப்​பட்​டுள்​ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!