புதிய பிரதமர் அலுவலகம் திறப்பு!

புதுடெல்லி: நா​டாளு​மன்ற வளாகத்​தில் ரூ.1,189 கோடி செல​வில் கட்​டப்​பட்ட புதிய பிரதமர் அலு​வல​கத்தை (சேவா தீர்த்) பிரதமர் நரேந்​திர மோடி நேற்று திறந்து வைத்​தார்.

கடந்த 2014-ம் ஆண்​டில் பிரதமர் மோடி தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​டணி அரசு பதவி​யேற்ற பிறகு ஆங்​கிலேய ஆட்சியின் அடை​யாளத்தை மாற்ற முடிவு செய்​யப்​பட்​டது. இதன்​படி டெல்​லி​யில் புதிய நாடாளு​மன்​றம் கட்​டப்​பட்டு 2023-ம் ஆண்டு மே மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்​தார்.

அதோடு நாடாளு​மன்ற வளாகத்​தில் பிரதமர் இல்​லம், பிரதமர் அலு​வல​கம், பல்​வேறு அமைச்​சகங்​களின் அலு​வல​கங்​கள் கட்​டப்​பட்டு வரு​கின்​றன. இதில் ரூ.1,189 கோடி செல​வில் பிரதமர் அலு​வல​கம் (சேவா தீர்த்) கட்டி முடிக்​கப்​பட்டு உள்​ளது. இதனை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று திறந்து வைத்​தார். சுமார் 5 ஏக்​கர் பரப்​பில் புதிய பிரதமர் அலு​வல​கம் கட்​டப்​பட்டு உள்​ளது. இதில் சேவா தீர்த் 1, சேவா தீர்த் 2, சேவா தீர்த் 3 என்ற பெயரில் 3 பிர​தான கட்​டிடங்​கள் உள்​ளன.

இதில் சேவா தீர்த் 1 கட்​டிடத்​தில் பிரதமர் அலு​வல​கம் செயல்​படும் சேவா தீர்த் 2 கட்​டிடத்​தில் கேபினட் செய​லா​ளர் அலு​வல​கம் செயல்​படும். சேவா தீர்த் 3 கட்​டிடத்​தில் தேசிய பாது​காப்பு கவுன்​சில் செயல​கம் மற்​றும் தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவலின் அலு​வல​கம் செயல்​படும்.

மேலும் மத்​திய அரசின் தலை​மைச் செயல​கத்​தின் ஒரு பகு​தி​யாக கர்த்​தவ்ய பவன் 1, கர்த்​தவ்ய பவன் 2 கட்​டிடங்​களை​யும் பிரதமர் நரேந்​திர மோடி திறந்​து​வைத்​தார். இவற்​றில் நிதி​யமைச்​சகம், பாது​காப்​புத் துறை, சுகா​தா​ரத் துறை, கார்ப்​பரேட் விவ​காரம், கல்​வி, கலாச்​சா​ரம், சட்​டத் துறை, தகவல்- ஒலிபரப்​புத் துறை, வேளாண் துறை, ரசாயனத் துறை, பழங்​குடி​யினர் நலத் துறை ஆகியவை செயல்படும்.

பிரதமர் அலு​வல​கத்​துக்கு அரு​கில் ரூ.467 கோடி செல​வில் 36,000 சதுர அடி பரப்​பள​வில் பிரதமரின் வீடு கட்​டப்​பட்டு வரு​கிறது. இந்த வீட்​டில் இருந்து பிரதமர் அலு​வல​கம் மற்​றும் நாடாளு​மன்​றத்​துக்கு செல்ல பிரத்​யேக சுரங்​கப் பாதை​யும் அமைக்​கப்​பட்டு வரு​கிறது. பிரதமரின் அதி​காரப்​பூர்வ வீடு விரை​வில்​ திறக்​கப்​படும்​ என்​று தகவல்​கள்​ வெளி​யாகி உள்​ளன.

பு​திய பிரதமர் அலு​வலக வளாகத்​தில் நேற்று மாலை​யில் நடந்த விழா​வில் பிரதமர் நரேந்​திர மோடி பேசி​ய​தாவது: நாடாளு​மன்​றத்​தின் பழைய கட்​டிடங்​கள் பிரிட்​டிஷ் ஆட்​சிக் கால சின்​னங்​கள் ஆகும். வளர்ச்சி அடைந்த இந்​தியா என்​பது கொள்​கை​களில் மட்​டுல்ல, நமது நாட்​டின் பணி​யிடங்​கள், கட்​டிடங்​களி​லும் எதிரொலிக்க வேண்​டும். வரும் 2047-ம் ஆண்​டுக்​குள் வளர்ச்சி அடைந்த இந்​தி​யாவை உரு​வாக்க வேண்​டும் என்ற லட்​சி​யத்​தோடு சேவா தீர்த், கர்த்​தவ்ய பவன் அலு​வல​கங்​களில் மத்​திய அமைச்​சர்​கள், மத்​திய அரசு ஊழியர்​கள் கால் பதிக்க வேண்​டும். இவ்வாறு பிரதமர் பேசினார்.

ஸ்டார்ட் அப் 2.0 திட்டத்துக்கு ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கீடு: புதிதாக திறக்கப்பட்ட பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது அன்றாட அலுவல்களை தொடங்கினார். குறிப்பாக லட்சாதிபதி சகோதரிகள், வேளாண்மை உள்கட்டமைப்பு நிதி, ஸ்டார்ட் அப் நிதியம் 2 .0 திட்டம் தொடர்பான கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார். இதில் ஸ்டார்ட் அப் நிதியம் 2.0 திட்டத்துக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

லட்சாதிபதி சகோதரிகள் திட்டத்தின் கீழ் மகளிர் சுயநிதி குழுக்களை சேர்ந்த 1.48 கோடி பெண்கள் லட்சாதிபதிகளாக உருவாக்கப்பட்டு உள்ளனர். வரும் 2027-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இந்த எண்ணிக்கையை 3 கோடியாகவும் வரும் 2029 மார்ச் மாதத்தில் 6 கோடியாகவும் உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதுதொடர்பான கோப்பில் பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திட்டார்.

வேளாண்மை உள்கட்டமைப்பு நிதியம் திட்டத்தின் கீழ் விவசாயிகள் மற்றும் வேளாண்மை சங்கங்களுக்கு 3 சதவீத வட்டியில் கடன் உதவி வழங்கப்படுகிறது. வேளாண்மை உள்கட்டமைப்பு நிதியம் தற்போது ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் செயல்படுகிறது. இந்த நிதியத்தின் முதலீட்டு தொகை ரூ.2 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதற்கான கோப்பில் பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திட்டார்.

சாலை விபத்தில் சிக்கும் நபர்களுக்கு 7 நாட்கள் ரூ.1.5 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இந்த திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான கோப்பில் பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!