வருகிற பிப்.23-ல் அமைச்சரவைக் கூட்டம்

சென்னை: தமிழக அமைச்​சர​வைக் கூட்​டம் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மை​யில் பிப்​.23-ம் தேதி நடை​பெறுகிறது.

சட்​டப்​பேர​வை பொதுத்​தேர்​தல் அடுத்த மாதம் அறிவிக்​கப்​படும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இந்நிலையில் பிப்​.17-ம் தேதி இடைக்​கால நிதி​நிலை அறிக்கை தாக்​கல் செய்​யப்​படு​கிறது. இதையொட்டி 4 நாட்​கள் சட்​டப்​பேர​வைக் கூட்​டம் நடை​பெறும் என்று கூறப்​படு​கிறது.

இந்​நிலை​யில், தமிழக அமைச்​சர​வைக் கூட்​டம் முதல்​வர் தலை​மை​யில் பிப்​.23-ம் தேதி மாலை 6 மணிக்கு கூடுகிறது. ஏற்​கெனவே, பிப்​.5-ம் தேதி அமைச்​சர​வைக் கூட்டம் நடை​பெற்​றது.

இதில், நிதி​நிலை அறிக்​கைக்​கான ஒப்​புதல் மற்றும் 15 புதிய தொழில் முதலீடு​களுக்​கான ஒப்புதல் வழங்​கப்​பட்​டது. 23-ம் தேதி நடை​பெறும்அமைச்​சர​வைக் கூட்டத்​தில்மேலும் பலதொழில் முதலீடு​களுக்​கான ஒப்​புதல் வழங்​கப்பட உள்​ள​தாகக் கூறப்​படு​கிறது. அத்​துடன், சட்டப்பேரவைத் தேர்​தலை​யொட்டி சில முக்கிய அறி​விப்​புகளுக்கான ஒப்​புதலும்கொடுக்​கப்பட வாய்ப்​புள்​ள​தாக, தலை​மைச்செயலக வட்​டாரங்​கள்​ தெரிவித்​தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!