சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்பு ‘டெட்’ தேர்வு ஜூலை மாதம் 4, 5-ம் தேதிகளில் நடைபெற உள்ளதாக டிஆர்பி அறிவித்துள்ளது.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றவும், பதவி உயர்வு பெறவும், ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும்.இதற்காக தமிழகத்தில் 4 மாதங்களுக்கு ஒரு முறை ஆண்டுக்கு 3 சிறப்பு ‘டெட்’ தேர்வு நடத்தப்படும். 2026-ம் ஆண்டுக்கான தேர்வுகள் ஜனவரி, ஜூலை, டிசம்பர் மாதங்களில் நடைபெறுகிறது. அதன்படி முதல் சிறப்பு ‘டெட்’ தேர்வுக்கான தேதியை டிஆர்பி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: பள்ளி ஆசிரியர்களுக்கான டெட்’ தேர்வுகள் ஜூலை 4, 5-ம் தேதிகளில் (முதல்தாள், இரண்டாம் தாள்) நடைபெறும். இந்த தேர்வுக்கு பிப்.18 முதல் ஏப்.10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்களில் ஏப்.11 முதல் 13-ம் தேதி வரை திருத்தங்களை மேற் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு டிஆர்பியின் https://www.trb.tn.gov.in/ எனும் இணையதளத்தில் தொடர்பு கொள்ளலாம்.
