வரலாற்றில் இன்று ( பிப்ரவரி 10)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

பெப்ரவரி 10 (February 10) கிரிகோரியன் ஆண்டின் 41 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 324 (நெட்டாண்டுகளில் 325) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1258 – மங்கோலியப் படையெடுப்பு: பகுதாது மன்கோலியர்களிடம் வீழ்ந்தது. அப்பாசியக் கலீபகம் அழிக்கப்பட்டது. இசுலாமியப் பொற்காலம் முடிவுக்கு வந்தது.

1355 – இங்கிலாந்து, ஆக்சுபோர்டில் ஆக்சுபோர்ட் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலவரத்தில் இரண்டு நாட்களில் 63 மாணவர்களும், 30 பொது மக்களும் கொல்லப்பட்டனர்.

1567 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரியின் இரண்டாவது கணவர் டார்ன்லி பிரபு எடின்பரோவில் குண்டுவெடிப்பில் இறந்தார்.

1763 – பாரிஸ் உடன்படிக்கை (1763): பிரான்சு கியூபெக் மாநிலத்தை ஐக்கிய இராச்சியத்திற்கு கையளித்தது.

1798 – லூயி அலெக்சாண்டர் பேர்த்தியர் உரோமைக் கைப்பற்றி அதனை பெப்ரவரி 15 இல் ரோமன் குடியரசாக அறிவித்தார்.

1815 – கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றும் நோக்கில் பிரித்தானியர் கண்டியினுள் நுழைந்தனர்.

1840 – ஐக்கிய இராச்சியத்தின், விக்டோரியா மகாராணி இளவரசர் ஆல்பேர்ட்டைத் திருமணம் புரிந்தார்.

1846 – முதலாம் ஆங்கிலேய-சீக்கியர் போர்: பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கும் பஞ்சாபின் சீக்கியருக்கும் இடையில் சோப்ரானில் இடம்பெற்ற போரில் பிரித்தானியர் வெற்றி பெற்றனர்.

1897 – மடகஸ்காரில் மதச் சுதந்திரம் அறிவிக்கப்பட்டது.

1936 – இரண்டாவது இத்தாலிய-அபிசீனியப் போர்: இத்தாலியப் படையினர் எத்தியோப்பியத் தற்காப்புப் படைகளுக்கு எதிரான தாக்குதலை ஆரம்பித்தனர்.

1939 – எசுப்பானிய உள்நாட்டுப் போர்: தேசியவாதிகள் காத்தலோனியாவைக் கைப்பற்றும் நடவடிக்கையை நிறைவேற்றி பிரான்சுடனான எல்லையை மூடினர்.

1940 – சோவியத் ஒன்றியம் தாம் கைப்பற்றிய கிழக்குப் போலந்தில் இருந்து அப்பிரதேச மக்களை சைபீரியாவுக்கு நாடு கடத்தினர்.

1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானிய இராணுவத்தினர் போர்னியோவின் தலைநகர் பஞ்சார்மாசினைக் கைப்பற்றினர்.

1943 – இரண்டாம் உலகப் போர்: லெனின்கிராட் முற்றுகையை முற்றாக முறியடிக்கும் நோக்கில், சோவியத் செஞ்சேனை, செருமனியப் படைகளுடனும், எசுப்பானியத் தன்னார்வப் படைகளுடனும் கிராசுனி போர் என்ற இடத்தில் போரில் ஈடுபட்டன.

1947 – பாரிசு அமைதி உடன்பாடுகள் இத்தாலி, உருமேனியா, அங்கேரி, பல்காரியா, பின்லாந்து, மற்றும் இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகளுக்கு இடையே கையெழுத்திடப்பட்டன.

1948 – இலங்கையின் முதலாவது நாடாளுமன்றம் குளொஸ்டர் கோமகன் இளவரசர் என்றியினால் கொழும்பு, சுதந்திர சதுக்கத்தில் திறந்து வைக்கப்பட்டது.

1962 – பனிப்போர்: அமெரிக்க யூ2 உளவு விமான விமானி காரி பவர்சு, சோவியத் உளவாளி ருடோல்ஃப் ஏபெல் ஆகிய கைதிகளின் பரிமாற்ரம் இடம்பெற்றது.

1964 – ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் கரையில் “மெல்பேர்ன்” என்ற விமானந்தாங்கிக் கப்பலும் “வொயேஜர்” என்ற கடற்படைக் கப்பலும் மோதிக் கொண்டதில் 82 பேர் உயிரிழந்தனர்.

1969 – தமிழ் நாட்டின் முதலமைச்சராக மு. கருணாநிதி தெரிவு செய்யப்பட்டார்.

1972 – ரசு அல்-கைமா ஏழாவது அமீரகமாக ஐக்கிய அரபு அமீரகத்துடன் இணைந்தது.

1984 – கென்யப் படையினர் வடகிழக்குக் கென்யாவில் 5000 இற்கும் அதிகமான சோமாலி-கென்ய இனத்தவரைப் படுகொலை செய்தனர்.

1991 – வன்னி மீதான இலங்கை இராணுவத்தினரின் வன்னி விக்கிரம படையெடுப்பு விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதுடன் உலங்குவானூர்தி ஒன்றும் சுட்டு வீழ்த்தப்பட்டது.

1996 – ஐபிஎம் சதுரங்கக் கணினி “டீப் புளூ” உலக முதற்தரவீரர் காரி காஸ்பரோவை வென்றது.

2007 – இலினொய் மேலவை உறுப்பினர் பராக் ஒபாமா தான் 2008 அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். அவர் பின்னர் இத்தேர்தைல் வெற்றி பெற்றார்.

2009 – தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் இரிடியம் 33, காசுமசு-2251 ஆகியன விண்வெளியில் மோதி அழிந்தன.

2013 – இந்தியாவின் அலகாபாத் நகரில் கும்பமேளா திருவிழாவின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

1775 – சார்லஸ் லாம், ஆங்கிலேய எழுத்தாளர், கவிஞர் (இ. 1834)

1785 – கிளாட்-லூயி நேவியர், பிரான்சிய இயற்பியலாளர், பொறியியலாளர் (இ. 1836)

1805 – குரியாக்கோஸ் எலியாஸ் சாவறா, கேரள கத்தோலிக்கப் புனிதர் (இ. 1871)

1825 – சாமுவேல் பிளிம்சால், ஆங்கிலேய அரசியல்வாதி, சமூக சீர்திருத்தவாதி (இ. 1898)

1842 – அகனேசு மேரி கிளார்க், அயர்லாந்து வானியலாளர் (இ. 1907)

1848 – அன்னா பொச், பெல்சிய ஓவியர் (இ. 1936)

1890 – போரிஸ் பாஸ்ரர்நாக், நோபல் பரிசு பெற்ற உருசிய எழுத்தாளர் (இ. 1960)

1893 – பில் டில்டென், அமெரிக்க டென்னிசு ஆட்டவீரர், பயிற்சியாளர் (இ. 1953)

1897 – ஜான் பிராங்கிளின் எண்டர்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (இ. 1985)

1898 – பெர்தோல்ட் பிரெக்ட், செருமானிய இயக்குநர், கவிஞர் (இ. 1956)

1902 – வால்டர் பிராட்டன், நோபல் பரிசு பெற்ற சீன-அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1987)

1916 – தர்பாரா சிங், பஞ்சாபின் முதலமைச்சர் (இ. 1990)

1919 – சு. ராஜம், தமிழக ஓவியர், திரைப்பட நடிகர், கருநாடக இசைக்கலைஞர் (இ. 2010)

1929 – நாஞ்சில் கி. மனோகரன், தமிழக அரசியல்வாதி (இ. 2000)

1937 – தா. கிருட்டிணன், தமிழக அரசியல்வாதி (இ. 2003)

1952 – லீ சியன் லூங், சிங்கப்பூரின் 3வது பிரதமர்

1957 – காத்தரைன் பிரீசு, அமெரிக்க வானியற்பியலாளர்

1982 – ஜஸ்டின் காட்லின், அமெரிக்க விரைவு ஓட்ட வீரர்

1984 – அல்போன்சு புத்திரன், இந்தியத் திரைப்பட இயக்குநர், நடிகர், திரைப்படத் தொகுப்பாளர், திரைக்கதை ஆசிரியர்

1985 – மகதி, தமிழகக் கருநாடக இசைப் பாடகி

இறப்புகள்

1307 – தெமுர் கான், மங்கோலியப் பேரரசர் (பி. 1265)

1837 – அலெக்சாந்தர் பூஷ்கின், உருசியக் கவிஞர் (பி. 1799)

1865 – ஹைன்ரிக் லென்ஸ், எசுத்தோனிய-இத்தாலிய இயற்பியலாளர் (பி. 1804)

1868 – டேவிட் புரூஸ்டர், இசுக்கொட்லாந்து இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1781)

1878 – கிளவுட் பெர்னாட், பிரான்சிய உயிரியலாளர் (பி. 1813)

1891 – சோஃபியா கோவலெவ்சுகாயா, சுருசிய-சுவீடன் கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி. 1850)

1912 – ஜோசப் லிஸ்டர், ஆங்கிலேய மருத்துவர் (பி. 1827)

1923 – வில்லெம் ரோண்ட்கன், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (பி. 1845)

1944 – யூகி மைக்கேல் அந்தொனியாடி, கிரேக்க-பிரான்சிய வானியலாளர், சதுரங்க வீரர் (பி. 1870)

1953 – என். கோபாலசாமி அய்யங்கார், இந்திய அரசியல்வாதி, ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் பிரதம அமைச்சர் (பி. 1882)

1993 – பெங்கித் எட்லேன், சுவீடிய இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1906)

2001 – கே. தவமணி தேவி, இலங்கை-இந்தியத் திரைப்பட நடிகை

2005 – ஆர்தர் மில்லர், அமெரிக்க நடிகர், எழுத்தாளர் (பி. 1915)

2010 – கிரீஷ் புத்தன்சேரி, மலையாளத் திரைப்பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர் (பி. 1957)

2020 – சிசு நாகேந்திரன், இலங்கை-ஆத்திரேலியத் தமிழ் நாடகக் கலைஞர், ஆய்வாளர் (பி. 1921)

சிறப்பு நாள்

குருதிய எழுத்தாளர் ஒன்றிய நாள் (ஈராக்கிய குர்திஸ்தான்)

உலக பருப்பு வகைகள் தினம்

உலக குடை தினம்

குடற்புழு நீக்க தினம் (இந்தியா)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!