வரலாற்றில் இன்று ( மே 14)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

மே 14 கிரிகோரியன் ஆண்டின் 134 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 135 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 231 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1264 – இங்கிலாந்தின் மூன்றாம் என்றி மன்னர் பிரான்சில் கைது செய்யப்பட்டார். சைமன் டி மொர்ஃபோர்ட் இங்கிலாந்தின் ஆட்சியாளரானார்.
1607 – ஜேம்சுடவுன், வர்ஜீனியா ஆங்கிலேயக் குடியேற்றப் பகுதியாக அறிவிக்கப்பட்டது.
1610 – பிரான்சின் நான்காம் என்றி மன்னர் கொல்லப்பட்டார். பதின்மூன்றாம் லூயி மன்னராக முடிசூடினார்.
1643 – பதின்மூன்றாம் லூயி இறக்க, அவரது 4-வயது மகன் பதினான்காம் லூயி பிரான்சின் மன்னனானான்.
1796 – பெரியம்மை நோய்க்கான முதலாவது தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் ஏற்றினார்.
1800 – ஐக்கிய அமெரிக்காவின் தலைநகரை பிலடெல்பியாவில் இருந்து வாசிங்டன், டி. சி.க்கு மாற்றும் நடவடிக்கை ஆரம்பமானது.
1811 – பரகுவை: எசுப்பானிய ஆளுநரை அகற்றும் நடவடிக்கையை ஒசே பிரான்சியா ஆரம்பித்தார்.
1861 – எசுப்பானியா, பார்சிலோனாவில் 859-கிராம் எடையுள்ள விண்கல் ஒன்று வீழ்ந்தது.
1879 – 463 இந்தியத் தொழிலாளர்களைக் கொண்ட முதலாவது தொகுதியினர் லியோனிடாசு கப்பலில் பிஜியை அடைந்தனர்.
1900 – கோடைக் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பாரிசில் ஆரம்பமாயின.
1931 – சுவீடனில் தொழிற்சங்க உறுப்பினர்களின் ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க காவற்துறையினர் சுட்டதில் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1939 – பெருவைச் சேர்ந்த 5 வயது நிரம்பிய லீனா மெதினா உலகின் முதலாவது வயதில் குறைந்த தாயாக அறிவிக்கப்பட்டார்.
1940 – இரண்டாம் உலகப் போர்: ராட்டர்டேம் மீது செருமனி குண்டுத் தாக்குதலை மேற்கொண்டது.
1943 – இரண்டாம் உலகப் போர்: ஆத்திரேலியாவின் செண்டோர் என்ற மருத்துவக் கப்பல் குயின்ஸ்லாந்துக்கருகில் செருமானிய நீர்மூழ்கிக்கப்பலால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 268 பேர் கொல்லப்பட்டனர்.
1948 – இசுரேல் தன்னைத் தனிநாடாகப் பிரகடனப்படுத்தி தற்காலிக அரசையும் அறிவித்தது. அரபு நாடுகள் இசுரேலைத் தாக்கத் தொடங்கின. அரபு – இசுரேல் போர் ஆரம்பமானது.
1955 – பனிப்போர்: சோவியத் ஒன்றியம் உட்பட எட்டு கம்யூனிச நாடுகள் இணைந்து வார்சா உடன்பாடு எனப்படும் தற்காப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
1965 – இலங்கையில் ரோகண வீஜயவீர மக்கள் விடுதலை முன்னணி என்னும் அரசியற் கட்சியை ஆரம்பித்தார்.
1973 – ஸ்கைலேப் என்ற ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது விண்வெளி நிலையம் விண்ணுக்கு ஏவப்பட்டது.
1976 – யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையில் நடந்த தமிழர் விடுதலை கூட்டணியின் கட்சி மாநாட்டில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் வெளியிடப்பட்டது.
1980 – எல் சல்வடோர் உள்நாட்டுப் போர்: சும்புல் ஆற்றுப் பகுதியில் 600 வரையான பொதுமக்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
1988 – ஐக்கிய அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர்.
2004 – பிரேசில், மனௌசில் வானூர்தி ஒன்று அமேசான் மழைக்காடுகளில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 33 பேரும் உயிரிழந்தனர்.
2004 – டென்மார்க்கின் முடிக்குரிய இளவரசர் பிரெட்ரிக், ஆத்திரேலியாவைச் சேர்ந்த மேரி டொனால்ட்சன் என்பவரைத் திருமணம் புரிந்தார்.
2012 – நேபாளத்தில் அக்னி ஏர் வானூர்தி வீழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

1657 – சம்பாஜி, இந்தியப் பேரரசர் (இ. 1689)
1771 – இராபர்ட்டு ஓவன், வேல்சு தொழிலதிபர், சமூக செயற்பாட்டாளர் (இ. 1858)
1883 – அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், இந்திய வழக்கறிஞர், அரசியல்வாதி (இ. 1953)
1907 – அயூப் கான், பாக்கித்தானின் 2வது அரசுத்தலைவர் (இ. 1974)
1909 – ஜான் வெய்ன்ரைட் எவான்சு, அமெரிக்க வானியலாளர் (இ. 1999)
1918 – ஜேம்ஸ் ஹார்டி, அமெரிக்க மருத்துவர், கண்டுபிடிப்பாளர் (இ. 2003)
1923 – மிருணாள் சென், வங்காள-இந்தியத் திரைப்பட இயக்குநர்
1944 – ஜோர்ச் லூகாஸ், அமெரிக்கத் திரைப்பட இயக்குநர்
1948 – பாப் வுல்மர், இந்திய-ஆங்கிலேயத் துடுப்பாளர், பயிற்சியாளர் (இ. 2007)
1953 – நொரடோம் சிகாமொனி, கம்போடிய அரசர்
1969 – கேட் பிளான்சேட், ஆத்திரேலிய நடிகை
1984 – மார்க் சக்கர்பெர்க், முகநூலை உருவாக்கிய அமெரிக்கத் தொழிலதிபர்
1987 – சாரீன் கான், இந்தித் திரைப்பட நடிகை
1988 – ராஜேஷ் முருகேசன், தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்
1989 – ஷீலா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

இறப்புகள்

1904 – பியோதோர் அலெக்சாந்திரோவிச் பிரெதிகின், உருசிய வானியலாளர் (பி. 1831)
1925 – எச். ரைடர் அக்கார்டு, ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1856)
1940 – எம்மா கோல்ட்மன், இலித்துவேனிய எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர் (பி. 1869)
1945 – இசிசு போகுசன், ஆங்கிலேய வானியலாளர் (பி. 1852)
1959 – ஆத்மானந்தர், வேதாந்தி, யோகி (பி. 1883)
1996 – சிறீதரன் ஜெகநாதன், இலங்கைத் துடுப்பாட்ட வீரர் (பி. 1951)
1998 – பிராங்க் சினாட்ரா, அமெரிக்கப் பாடகர், நடிகர் (பி. 1915)
2010 – க. சண்முகம்பிள்ளை, இலங்கை மிருதங்கக் கலைஞர் (பி. 1917)
2013 – அஸ்கர் அலி என்ஜினியர், இந்திய எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர் (பி. 1939)
2014 – சித்ரூபானந்தர், இலங்கை பருத்தித்துறை இராமகிருஷ்ண சாரதா சேவாச்சிரமத்தின் நிறுவனர்

சிறப்பு நாள்

விடுதலை நாள் (இசுரேல்)
தேசிய இணைப்பு நாள் (லைபீரியா)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!