வரலாற்றில் இன்று ( மே 02)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

மே 2 (May 2) கிரிகோரியன் ஆண்டின் 122 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 123 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 243 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1536 – இங்கிலாந்தின் அரசி ஆன் பொலின், முறைபிறழ்புணர்ச்சி, தகாப் பாலுறவு, மாந்திரீகம், தேசத்துரோகம் போன்ற குற்றச்சாட்டுகளுக்காகக் கைது செய்யப்பட்டார்.
1568 – லொக் லெவென் அரண்மனையில் சிறை வைக்கப்பட்டிருந்த ஸ்கொட்லாந்து அரசி முதலாம் மேரி அங்கிருந்து தப்பி வெளியேறினார்.
1611 – இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு மன்னரின் ஆதரவில் விவிலியம் இங்கிலாந்து திருச்சபைக்காக மொழிபெயர்க்கப்பட்டு இலண்டனில் வெளியிடப்பட்டது.
1670 – இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு மன்னர் வட அமெரிக்காவில் மென்மயிர் வணிகத்துக்கான உரிமையை அட்சன் விரிகுடா கம்பனிக்குத் தந்தார்.
1808 – மத்ரித் மக்கள் பிரான்சிய ஆக்கிரமிப்பாளருக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
1814 – முதலாவது மெதடிஸ்த ஆயர் தோமசு கோக் மதப்பரப்புனராக கப்பலில் இங்கிலாந்தில் இருந்து இலங்கை வரும் வழியில் காலமானார்.[1]
1851 – கொழும்பு நகரைச் சுற்றிய பகுதிகளில் பலத்த காற்று வீசியதில் பெரும் சேதம் ஏற்பட்டது.[2]
1889 – எத்தியோப்பியாவின் அரசர் இரண்டாம் மெனெலிக் இத்தாலியுடன் செய்துகொண்ட அமைதி உடன்படிக்கையின் படி எரித்திரியாவின் முழுப் பகுதியும் இத்தாலிக்குத் தரப்பட்டது.
1906 – இடைச்செருகிய ஒலிம்பிக் விளையாட்டுகளின் இறுதி நிகழ்வுகள் ஏதென்சில் இடம்பெற்றது.
1933 – இட்லர் தொழிற்சங்கங்களை தடை செய்தார்.
1941 – இவ்வாண்டின் ஆரம்பந்தில் இடம்பெற்ற ஈராக்குக்கு எதிரான இராணுவப் புரட்சியை அடுத்து பதவியை இழந்த இளவரசர் அப்துல்லாவை மீண்டும் பதவியில் இருத்த ஐக்கிய இராச்சியம் ஆங்கிலேய-ஈராக்கியப் போரை ஆரம்பித்தது.
1945 – இரண்டாம் உலகப் போர்: பெர்லினைத் தாம் கைப்பற்றியதாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது. செருமனியப் படை இத்தாலியில் சரணடைந்தன.
1945 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்காவின் வான்படையினர் செருமனியில் வோபெலின் வதைமுகாமை விடுவித்தனர். இங்கு 1,000 கைதிகள் இறந்து காணப்பட்டனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: டேச்சு கைதிகள் முகாமில் இருந்து ஆஸ்திரியா நோக்கிச் சென்று கொண்டிருந்த கைதிகளை பவேரியாவில் வழிமறித்த அமெரிக்க இராணுவம் நூற்றுக்கணக்கான கைதிகளை விடுவித்தது.
1946 – இலங்கை, கேகாலையில் நேவ்சுமயர் தோட்டத்தில் இந்தியத் தமிழர் குடியிருந்த 400 ஏக்கர் காணிகள் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டன.[3][4]
1952 – உலகின் முதலாவது ஜெட் விமானம், டி ஹாவிலண்ட் கொமெட் 1, தனது முதல் பறப்பை லண்டனில் ஜொகான்னஸ்பேர்க் நகருக்கு மேற்கொண்டது.
1964 – வியட்நாம் போர்: சாய்கோன் நகரில் அமெரிக்கக் கப்பல் ஒன்று குண்டுவெடிப்பில் மூழ்கியது.
1964 – 8,027 மீட்டர் உயர சிசாபங்மா மலையின் உச்சியை சீனாவின் இரு மலையேறிகள் எட்டினர்.
1972 – அமெரிக்காவின் ஐடஹோ மாநிலத்தில் நிலத்தடி சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 91 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
1982 – போக்லாந்து போர்: பிரித்தானியாவின் கொன்கரர் என்ற அணுக்கரு ஆற்றல் மூலம் இயங்கும் நீர்முழ்கி கப்பல் அர்கெந்தீனாவின் போர்க்கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.
1986 – செர்னோபில் அணு உலை விபத்து நடந்த ஆறு நாட்களின் பின்னர் அங்கிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
1989 – பனிப்போர்: ஆஸ்திரியாவுடனான எல்லையை அங்கேரி திறந்து விட்டதில் பெருந்தொகையான கிழக்கு செருமனி மக்கள் அங்கிருந்து வெளியேறினர்.
1994 – போலந்து, கதான்ஸ்க் நகரில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 32 பேர் உயிரிழந்தனர்.
1998 – ஐரோப்பிய நடுவண் வங்கி பிரசெல்சு நகரில் ஆரம்பிக்கப்பட்டது.
2002 – கேரளாவில் பாலக்காடு நகரில் இடம்பெற்ற கலவரங்களில் 8 இந்துக்கள் கொல்லப்பட்டனர்.
2004 – நைஜீரியாவில் 630 முஸ்லிம்கள் கிறித்தவர்களால் கொல்லப்பட்டனர்.
2006 – குஜராத் மாவட்டத்தில் மசூதி ஒன்று இடிக்கப்பட்டதை அடுத்து இடம்பெற்ற கலகத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
2008 – சூறாவளி நர்கீஸ் மியன்மாரில் தரை தட்டியதில் 138,000 பேர் உயிரிழந்தனர்.
2011 – செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குக் காரணமானவரும், சிஐஏ இனால் தேடப்பட்டு வந்தவருமான உசாமா பின் லாதின் பாக்கித்தானில் ஆப்டாபாத் நகரில் அமெரிக்க சிறப்புப் படையினரால் கொல்லப்பட்டார்.
2011 – ஈ.கோலை தொற்றுநோய் ஐரோப்பாவை, முக்கியமாக செருமனியைத் தாக்கியதில் 30 பேர் வரை உயிரிழந்தனர்.
2012 – நோர்வே ஓவியர் எட்வர்ட் மண்ச் வரைந்த அலறல் என்ற ஓவியம் நியூயார்க்கில் இடம்பெற்ற ஏலத்தில் $120 மில்லியன்களுக்கு விற்கப்பட்டது.
2014 – ஆப்கானித்தான் பாதக்சான் நகரில் இடம்பெற்ற மண்சரிவுகளில் சிக்கி 2,500 பேர் காணாமல் போயினர்.
2018 – பாஸ்கு விடுதலைக்கான தீவிரவாத அமைப்பு எட்டா முழுமையாகக் கலைந்தது.

பிறப்புகள்

1729 – உருசியாவின் இரண்டாம் கத்தரீன் (இ. 1796)
1806 – கத்தரீன் லபோரே, பிரான்சிய அருட்சகோதரி, புனிதர் (இ. 1876)
1843 – எலைஜா மெக்காய், கனடிய-அமெரிக்கப் பொறியியலாளர் (இ. 1929)
1844 – எலைஜா மெக்காய், கனடிய-அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர், பொறியியலாளர் (இ. 1929)
1859 – செரோம் கே. செரோம், ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1927)
1860 – தியோடோர் எர்ட்செல், ஆத்திரிய-அங்கேரிய சீயோனிய மெய்யியலாளர் (இ. 1904)
1881 – அலெக்சாண்டர் கெரென்சுகி, உருசியாவின் 10வது பிரதமர் (இ. 1970)
1921 – சத்யஜித் ராய், இந்திய இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 1992)
1927 – ந. சஞ்சீவி, தமிழகத் தமிழறிஞர், எழுத்தாளர் (இ. 1988)
1935 – கு. சின்னப்ப பாரதி, தமிழக புதின எழுத்தாளர், அரசியல்வாதி
1943 – கே. என். கோவிந்தாச்சார்யா, இந்திய அரசியல்வாதி, சமூக செயற்பாட்டாளர்
1969 – பிறயன் லாறா, திரினிதாது துடுப்பாளர்
1972 – டுவெயின் ஜான்சன், அமெரிக்க-கனடிய மற்போர் வீரர், நடிகர்
1975 – டேவிட் பெக்காம், ஆங்கிலேயக் காற்பந்து வீரர்
1982 – இசைப்பிரியா, தமிழீழ ஊடகவியலாளர் (இ. 2009)
2015 – சார்லட், கேம்பிரிட்ச் இளவரசி, ஐக்கிய இராச்சியத்தின் 4வது முடிக்குரியவர்.

இறப்புகள்

373 – அலெக்சாந்திரியா நகர அத்தனாசியார், எகிப்திய ஆயர், புனிதர் (பி. 298)
1519 – லியொனார்டோ டா வின்சி, இத்தாலிய ஓவியர், சிற்பி, கட்டிடக்கலைஞர் (பி. 1452)
1814 – தோமசு கோக், முதலாவது மெதடிச ஆயர் (பி. 1747)
1915 – கிளாரா இம்மெர்வார், செருமானிய வேதியியலாளர் (பி. 1870)
1979 – கியூலியோ நட்டா, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய வேதியியலாளர் (பி. 1903)
1997 – பாவ்லோ பிரையர், பிரேசில் மெய்யியலாளர் (பி. 1921)
2002 – தேவிகா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1943)
2005 – வீ கிம் வீ, சிங்கப்பூரின் 4வது குடியரசுத் தலைவர் (பி. 1915)
2009 – கே. பாலாஜி, தமிழ்த் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர்
2011 – உசாமா பின் லாதின், அல் காயிதா அமைப்பைத் தோற்றுவித்த சவூதி அரேபியர் (பி. 1957)

சிறப்பு நாள்

ஆசிரியர் நாள் (ஈரான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!