வரலாற்றில் இன்று ( ஏப்ரல் 14)

அனைவருக்கும் மின்கைதடியின் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

ஏப்ரல் 14 (April 14) கிரிகோரியன் ஆண்டின் 104 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 105 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 261 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

69 – ரைன் இராணுவத் தளபதி விட்டேலியசு பேரரசர் ஒத்தோவைத் தோற்கடித்து உரோமைப் பேரரசின் ஆட்சியைக் கைப்பற்றினார்.

70 – எருசலேம் முற்றுகை: பேரரசர் வெசுப்பாசியானின் மகன் டைட்டசு யூதத் தலைநகரை சுற்றி வளைத்தார்.

193 – செப்டிமியசு செவெரசு உரோமைப் பேரரசராக அறிவிக்கப்பட்டார்.

1028 – மூன்றாம் என்றி செருமனியின் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1294 – குப்லாய் கானின் பேரன் தெமூர் மங்கோலியரின் பேரரசராகவும், யுவான் பேரரசராகவும் நியமிக்கப்பட்டார்.

1471 – இங்கிலாந்தில், நான்காம் எட்வர்டு தலைமையில் யார்க் படைகள் வாரிக் குறுநில மன்னர் ரிச்சார்டு நெவிலைத் தோற்கடித்து அவரைக் கொன்றன. நான்காம் எட்வர்டு இங்கிலாந்தின் மன்னராக மீண்டும் முடிசூடினார்.

1699 – நானக்சாகி நாட்காட்டியின் படி, கால்சா என்ற சீக்கிய அறப்படை இயக்கத்துக்கு குரு கோவிந்த் சிங் அடிக்கல் நாட்டிய நிகழ்வு இடம்பெற்றது.

1816 – பிரித்தானிய-ஆட்சியின் கீழிருந்த பார்படோசுவின் அடிமையான பூசா அடிமைக் கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கிச் சென்று இறந்தார். பார்படோசுவின் முதலாவது தேசிய வீரர் என இவர் மதிக்கப்படுகிறார்.

1828 – நோவா வெப்ஸ்டர் தனது அகராதியின் முதலாவது பதிவுக்கான காப்புரிமையைப் பெற்றுக் கொண்டார்.

1849 – அங்கேரி ஆத்திரியாவில் இருந்து விடுதலையை அறிவித்தது.

1865 – அமெரிக்க அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் ஜோன் வில்க்ஸ் பூத் என்பவனால் சுடப்பட்டார். லிங்கன் அடுத்த நாள் இறந்தார்.

1890 – அமெரிக்க நாடுகள் அமைப்பு வாசிங்டனில் அமைக்கப்பட்டது.

1894 – தொமஸ் எடிசன் ஒளிப்படங்களைப் பாவித்து அசையும் படக்காட்சியை காட்டும் கினட்டஸ்கோப் என்ற அசையும் ஒளிப்படக்கருவியை காட்சிப்படுத்தினார்.

1909 – உதுமானியரினால் சிலிசியா என்ற ஆர்மீனிய நகரில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 30,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.

1912 – பிரித்தானியாவின் பயணிகள் கப்பல் டைட்டானிக் வட அட்லாண்டிக் கடலில் பனிப்பாறை ஒன்றுடன் மோதியது. அடுத்த நாள் ஏப்ரல் 15 அதிகாலையில் இது 1,503 பேருடன் கடலில் மூழ்கியது.

1915 – துருக்கி ஆர்மீனியாவை முற்றுகையிட்டது.

1928 – பிரெமென் என்ற செருமானிய வானூர்தி கனடாவின் கிரீனி தீவை அடைந்தது. கிழக்கில் இருந்து மேற்கே அத்திலாந்திக் பெருங்கடலை வெற்றிகரமாகத் தாண்டிய முதலாவது வானூர்தி இதுவாகும்.

1931 – எசுப்பானியப் படைத்தளபதிகள் மூன்றாம் அல்போன்சோ மன்னரைப் பதவியில் இருந்து அகற்றி இரண்டாவது எசுப்பானியக் குடியரசை அறிவித்தனர்.

1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய கடற்படையினர் நோர்வேயின் நம்சோஸ் என்ற இடத்தில் தரையிறங்கினர்.

1941 – இரண்டாம் உலகப் போர்: செருமானிய இராணுவத் தளபதி இர்வின் ரோமெல் துப்ருக்கை முற்றுகையிட்டான்.

1944 – மும்பை துறைமுகத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 300 பேர் கொல்லப்பட்டனர்.

1958 – லைக்கா என்ற நாயை விண்ணுக்குக் கொண்டு சென்ற சோவியத்தின் இசுப்புட்னிக் 2 என்ற செய்மதி 162 நாட்கள் பூமியைச் சுற்றிய பின்னர் சுற்றுப்பாதையில் இருந்து வீழ்ந்தது.

1967 – ஞாசிங்பே எயதேமா டோகோவின் அரசுத்தலைவர் நிக்கொலாசு குருநித்ஸ்கியை வீழ்த்தி தன்னை புதிய அரசுத்தலைவராக அறிவித்தார். இவர் அடுத்த 38 ஆண்டுகளுக்கு ஆட்சி செலுத்தினார்.

1978 – ஜோர்ஜியாவில் ஜோர்ஜிய மொழியின் அரசியல் அந்தஸ்தை மாற்றும் சோவியத் ஆட்சியாளரின் முயற்சிக்கெதிராக திபிலீசியில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.

1981 – கொலம்பியா விண்ணோடம் தனது முதலாவது சோதனைப் பறப்பை முடித்துக் கொண்டது.

1986 – வங்காள தேசத்தில் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் 1 கிகி எடையுள்ள ஆலங்கட்டி மழை பொழிந்ததில் 92 பேர் உயிரிழந்தனர்.

1988 – சுவிட்சர்லாந்தில் ஜெனீவாவில் ஐநா அவையில் இடம்பெற்ற நிகழ்வில் சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படைகளைத் திரும்பப் பெறும் உடன்பாட்டில் கையெழுத்திட்டது.

1994 – ஈராக்கின் வடக்கே இரண்டு ஐக்கிய அமெரிக்க வான்படை வானூர்திகள் தவறுதலாக இரண்டு அமெரிக்க இராணுவ உலங்குவானூர்திகளைச் சுட்டு வீழ்த்தியதில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

1999 – யூகொஸ்லாவியாவில் நேட்டோ படைகள் அல்பேனிய அகதிகளை ஏற்றிச் சென்ற ஊர்தி ஒன்றின் மேல் குண்டுவீச்சு நடத்தியதில் 75 பேர் கொல்லப்பட்டனர்.

1999 – ஆத்திரேலியா, சிட்னியில் பலமான ஆலங்கட்டி மழை பொழிந்ததில் A$ 1.7 பில்லியன் பெறுமதியான சேதம் ஏற்பட்டது.

2003 – மனித மரபணுத்தொகைத் திட்டம் நிறைவடைந்தது.

2006 – தில்லி, ஜாமா பள்ளிவாசலில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 13 பேர் காயமடைந்தனர்.

2010 – சிங்காய் நிலநடுக்கம், 2010: 6.9 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 2,700 பேர் உயிரிழந்தனர்.

2014 – நைஜீரியாவில் அபுஜா நகரில் இடம்பெற்ற இரட்டைக் குண்டுத் தாக்குதலில் 75 பேர் கொல்லப்பட்டனர், 141 பேர் காயமடைந்தனர்.

2014 – நைஜீரியாவில் 276 பாடசாலை மாணவிகள் போகோ அராம் போராளிகளால் கடத்திச் செல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1126 – இப்னு றுஷ்து, எசுப்பானிய மருத்துவர், மெய்யியலாளர் (இ. 1198)

1629 – கிறித்தியான் ஐகன்சு, டச்சு கணிதவியலாளர், வானியலாளர், இயற்பியலாளர் (இ. 1695)

1866 – ஆனி சலிவன், அமெரிக்கக் கல்வியாளர் (இ. 1936)

1889 – அர்னால்ட் ஜோசப் டாயின்பீ, ஆங்கிலேய வரலாற்றாளர் (இ. 1975)

1891 – அம்பேத்கர், இந்திய சட்ட நிபுணர், அரசியல்வாதி (இ. 1956)

1907 – எம். ஆர். ராதா, தமிழக நகைச்சுவை நடிகர் (இ. 1979)

1913 – என். ஆர். தியாகராசன், தமிழக அரசியல்வாதி, விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1969)

1916 – இலாரன்சு ஆகுபென், நியூசிலாந்து வானிலையியலாளர் (இ. 2015)

1919 – சம்சாத் பேகம், பாக்கித்தானிய-இந்தியப் பாடகி (இ. 2013)

1919 – கே. சரஸ்வதி அம்மா, இந்திய எழுத்தாளர் (இ. 1975)

1922 – அலி அக்பர் கான், இந்துஸ்தானி இசைக் கலைஞர் (இ. 2009)

1923 – ஜான் ஹோல்ட், அமெரிக்க எழுத்தாளர், கல்வியாளர் (இ. 1985)

1927 – பி. ஏ. பெரியநாயகி, திரைப்படப் பின்னணிப் பாடகி, கருநாடக இசைப் பாடகி (இ. 1990)

1933 – யூரி ஒகனேசியான், ஆர்மேனிய-உருசிய அணுக்கரு இயற்பியலாளர்

1935 – எரிக் வான் டேனிகன், சுவிட்சர்லாந்து வரலாற்றாளர்

1942 – மார்கரட் அல்வா, இந்திய அரசியல்வாதி

1950 – எச். வசந்தகுமார், தமிழகத் தொழிலதிபர், அரசியல்வாதி (இ. 2020)

1956 – ஏ. கே. நாதன், மலேசியத் தொழிலதிபர், கட்டிடக் கலைஞர்

1979 – சி. வி. குமார், தமிழகத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர்

இறப்புகள்

1759 – ஜார்ஜ் ஃபிரிடெரிக் ஹாண்டெல், செருமானிய-ஆங்கிலேய இசையமைப்பாளர் (பி. 1685)

1924 – லூயிசு சலிவன், அமெரிக்கக் கட்டிடக்கலைஞர் (பி. 1856)

1904 – வைமன் கு. கதிரவேற்பிள்ளை, ஈழத்து நீதிபதி, அகராதி தொகுத்தவர் (பி. 1829)

1905 – ஆட்டோ வில்கெல்ம் வான் சுத்ரூவ, உருசிய வானியலாளர் (பி. 1819)

1930 – விளாடிமிர் மயாகோவ்ஸ்கி, ஜியார்சிய-உருசிய நடிகர், கவிஞர் (பி. 1893)

1935 – எம்மி நோய்தர், செருமனிய-அமெரிக்கக் கணிதவியலாளர் (பி. 1882)

1944 – மேரி அடேலா பிளேக், ஆங்கிலேய வானியலாளர் (பி. 1858)

1950 – இரமண மகரிசி, தமிழக ஆன்மிக குரு, மெய்யியலாளர் (பி. 1879)

1962 – மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா, இந்திய பொறியியலாளர் (பி. 1860)

1963 – ராகுல சாங்கிருத்யாயன், இந்திய மதகுரு, வரலாற்றாளர் (பி. 1893)

1964 – ரேச்சேல் கார்சன், அமெரிக்க உயிரியலாளர் (பி. 1907)

1986 – சிமோன் த பொவார், பிரான்சிய எழுத்தாளர், மெய்யியலாளர் (பி. 1908)

2011 – வே. பாக்கியநாதன், தமிழகப் பத்திரிகையாளர் (பி. 1946)

2013 – பி. பி. ஸ்ரீனிவாஸ், தென்னிந்தியத் திரைப்பட பின்னணிப் பாடகர் (பி. 1930)

2018 – இலெ. ப. கரு. இராமநாதன் செட்டியார், தமிழறிஞர், பேராசிரியர் (பி. 1915)

சிறப்பு நாள்

அம்பேத்கர் ஜெயந்தி (இந்தியா)

உலக சித்தர்கள் நாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!