யோகா
யோகா என்பது உடல், மனம் மற்றும் ஆன்மாவை ஒருங்கிணைக்கும் ஒரு பழமையான பயிற்சி முறை.
இது இந்தியாவில் ஆதி காலத்தில் தோன்றியது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது
. யோகா என்ற வார்த்தை சமஸ்கிருத மொழியில் “ஒன்று சேருவது” அல்லது “இணைப்பது” என்று பொருள். யோகா என்பது தனிநபரின் உணர்வையும் இந்த பிரபஞ்சத்தின் உணர்வையும் ஒன்றிணைக்கும் ஒரு வழியாக கருதப்படுகிறது.
தமிழ்நாட்டில் யோகா நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. சித்தர்கள் பாரம்பரியமாக தமிழ்நாட்டில் யோகாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி உள்ளனர்.
சித்தர்கள் தங்கள் உடல் மற்றும் மனதை கட்டுப்படுத்தி நீண்ட காலம் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. அவர்கள் யோகப் பயிற்சிகளை பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்தையும் ஆன்மீக அறிவையும் வளர்த்துக் கொண்டனர். சித்தர்களின் யோகா முறைகள் தமிழ் மருத்துவத்திலும் தத்துவத்திலும் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது.
யோகா பல்வேறு வடிவங்களில் பயிற்றுவிக்கப்படுகிறது. பாரம்பரிய யோகா பள்ளிகள் என்றும் செயல்பட்டு வருகின்றன. யோகாவின் வகைகள் யமா, நியமா, ஆசனம், பிரணாயாமம், பிரத்யாகாரம், தாரனா, தியானம்,சமாதி, கர்ம யோகா, பக்தி யோகா, ஞான யோகா, ராஜ யோகா, மேலும் நவீன காலத்தில் ஹத யோகா, வினியாச யோகா போன்ற Extract பாணிகளும் பிரபலமடைந்து வருகின்றன.
யோகா உடலுக்கு மனதுக்கும் பல நன்மைகளை வழங்கும். உடல் நெகிழ்வுத் தன்மை அதிகரிக்கும், தசைகள் வலுவடையும், ரத்த ஓட்டமும் மேம்படும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் யோகா பயிற்சி மேற்கொள்வதன் மூலம். தொடர்ந்து யோக பயிற்சியை நாம் முறையை பயிற்சி செய்து வருவதன் மூலம் மன அழுத்தம் குறைகிறது பதட்டம் நீங்குகிறது மன அமைதி கிடைக்கிறது நினைவாற்றல் அதிகரிக்கிறது
. சுய விழிப்புணர்வு அதிகரிக்கிறது தன்னம்பிக்கை வளர்கிறது ஆன்மீக புரிதல் நம் மனதிற்கு ஏற்படுகின்றது. வயது மூத்தவர்களுக்கு எலும்பும் தசைகளும் தளர்வடையும் ஆனால் அவர்கள் தொடர்ந்து யோக பயிற்சியை மேற்கொள்வதால் அவர்களின் எலும்பும் தசைகளும் உறுதியானதாகவும் சக்தி மிகுந்ததாகவும் இருக்கும். மேலும் அவர்களுடைய மனமும் ஆரோக்கியமாக இளமையாக இருக்கும். யோகப் பயிற்சியை வயதில் மூத்தவர்கள் தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம் ரத்த அழுத்தத்தையும், நீரிழிவு பாதிப்பினால் ஏற்படும் சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்த முடியும் தொடர்ந்து தியானம் செய்வதன் மூலம் மன அமைதியையும், தெளிவான நேர்கொண்ட பார்வையும் நமக்கு மேலும் கிடைக்கும் பலன்கள் ஆகும்.
இன்று யோகா உலகம் முழுவதும் பரவலாக பயிற்சி செய்யப்படுகிறது.பல்வேறு வயதினரும் உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் பேணி பாதுகாத்திட விரும்பி யோக பயிற்சியை தங்களது அன்றாட வாழ்வில் ஒரு பகுதியாக மாற்றிக் கொண்டுள்ளனர்.
யோகா ஒரு பழமையான மற்றும் சக்தி வாய்ந்த பயிற்சி முறையாகும் யோகாவின் தத்துவத்தையும் அதன் நன்மைகளையும் புரிந்து கொள்வது ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ உதவும்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
—திவன்யா பிரபாகரன்
