திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கு பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோ சார்பில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 2024 -ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வந்த பிரதமர் மோடி புதிய ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டி இருந்தார். இந்த புதிய ராக்கெட் எவ்வளவு அமைக்க 2,233 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் குலசேகரப்பட்டினத்தில் பூமி பூஜையுடன் கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளது. இஸ்ரோ இயக்குநர் மற்றும் அதிகாரிகள் என பலரும் வந்திருந்தனர். பூமி பூஜையுடன் இன்று தொடங்கிய பணிகள் பணிகள் அடுத்த ஆண்டு முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.