டான்செட் தேர்வுக்கு 24-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்..!

 டான்செட் தேர்வுக்கு 24-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்..!

டான்செட் மற்றும் சீட்டா நுழைவு தேர்வுக்கு வரும் 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் எம்.பி.ஏ, எம்.சி.ஏ மற்றும் முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET) மற்றும் பொது பொறியியல் நுழைவுத் தேர்வு (CEETA PG) தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு வரும் 24-ம் தேதி முதல் தொடக்கப்படுகிறது.

மாநிலத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அரசு, அரசு உதவி பெறும் அறிவியல்/கலை கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழக வளாகம், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம், சுயநிதி நிறுவனங்கள் ஒப்படைத்த எம்.பி.ஏ., எம்.சி.ஏ ஆகிய முதுநிலை படிப்புகளுக்கான பொது மாணவர் சேர்க்கையை (TAMIL NADU COMMON ENTRANCE TEST -TANCET ) அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.

அதேபோன்று, மாநிலத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக வளாகம், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உள்ள எம்.இ.,எம்டெக் (M.E.,M.Tech., M.Arch., M.Plan) போன்ற முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான பிரத்தியோக நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.

அதன்படி 2025ம் ஆண்டுக்கான எம்.பி.ஏ., எம்.சி.ஏ ஆகிய முதுநிலை படிப்புகளுக்கான டான்செட் நுழைவுத் தேர்வு வரும் மார்ச் 22ம் தேதி நடைபெறும் என்றும், எம்.இ.,எம்.டெக். போன்ற முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான பிராத்தியோக நுழைவுத் தேர்வு (CEETA-PG) மார்ச்- 23ம் தேதி நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதன்படி இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் ஜனவரி 24ந்தேதி தொடங்கும் என்றும் http://tancet.annauniv.edu என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...