வரலாற்றில் இன்று (15.01.2025)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

சனவரி 15 (January 15) கிரிகோரியன் ஆண்டின் 15 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 350 (நெட்டாண்டுகளில் 351) நாட்கள் உள்ளன. திருவள்ளுவர் ஆண்டு தொடக்கம்.

நிகழ்வுகள்

69 – உரோமைப் பேரரசின் ஆட்சியை ஓட்டோ கைப்பற்றித் தன்னைப் பேரரசராக அறிவித்தார். எனினும் மூன்று மாதங்களில் தற்கொலை செய்து கொண்டார்.
1559 – முதலாம் எலிசபெத் இங்கிலாந்தின் மகாராணியாக முடிசூடினார்.
1582 – லிவோனியா மற்றும் எஸ்தோனியாவை உருசியா போலந்து-லித்துவேனியா பொதுநலவாயத்திடம் கையளித்தது.
1759 – பிரித்தானிய அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.
1777 – அமெரிக்கப் புரட்சிப் போர்: புதிய கனெடிகட் விடுதலையை அறிவித்தது.
1799 – இலங்கைக்குள் அடிமைகள் கொண்டுவரப்படுவது முற்றாகத் தடை செய்யப்பட்டது.[1]
1815 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: அமெரிக்கக் கடற்படைக் கப்பல் பிரெசிடென்ட் பிரித்தானியக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
1822 – கொழும்பு, களனி ஆற்றிற்குக் குறுக்கே மிதவைப் பாலம் (“படகுகளின் பாலம்”, Bridge of Boats) திறந்து வைக்கப்பட்டது.[2]
1867 – இலண்டன், ரீஜன்சு பார்க் என்ற இடத்தில் படகு ஏரி ஒன்றில் மூடியிருந்த பனிக்கட்டி வெடித்ததில் 40 பேர் உயிரிழந்தனர்.
1889 – கொக்கக் கோலா கம்பனி அட்லான்டாவில் நிறுவனமயப்படுத்தப்பட்டது.
1892 – யேம்சு நெய்சிமித் கூடைப்பந்து விளையாட்டு விதிகளை உருவாக்கினார்.
1908 – யாழ்ப்பாணத்தில் காரைதீவு பயணிகள் படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டது.[1]
1910 – பஃபலோ பில் அணை, அக்காலத்தின் மிக உயர்ந்த அணை (325 அடி) அமெரிக்காவின் வயோமிங்கில் கட்டப்பட்டது.
1915 – மலாவியில் வெள்ளையினக் குடியேற்றத்தை எதிர்த்து யோன் சிலம்புவே தலைமையில் இடம்பெற்ற கிளர்ச்சியில் மூன்று வெள்ளையினத்தவர்கள் கொல்லப்பட்டனர்.
1919 – மசாசுசெட்ஸ் மாநிலத்தில் பொஸ்டன் நகரில் இடம்பெற்ற பெரும் வெள்ளப் பெருக்கினால் 21 பேர் உயிரிழந்தனர்.
1919 – செருமனியின் இரு சோசலிஸ்டுகளான ரோசா லக்சம்பேர்க், கார்ல் லீப்னெக்ட் ஆகியோர் துணை இராணுவக்குழுவினரால் சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
1934 – 8.0 அளவு நிலநடுக்கம் நேபாளம் மற்றும் பீகாரைத் தாக்கியதில் 6,000–10,700 பேர் வரையில் உயிரிழந்தனர்.
1936 – முற்றிலும் கண்ணாடியால் அமைக்கப்பட்ட கட்டடம் அமெரிக்காவில் ஒகைய்யோ மாநிலத்தில் கட்டப்பட்டது.
1937 – எசுப்பானிய உள்நாட்டுப் போர்: கொருன்னா சாலை சமரில் தேசியவாதிகளும், குடியரசுவாதிகளும் பலத்த இழப்புகளின் பின்னர் பின்வாங்கினர்.
1943 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியர்கள் பசிபிக் பெருங்கடல் குவாடல்கனால் தீவில் இருந்து விரட்டப்பட்டனர்.
1943 – பென்டகன் திறக்கப்பட்டது.
1944 – ஆர்ஜெண்டீனாவில் சான் யுவான் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 10,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
1949 – சீன உள்நாட்டுப் போர்: கம்யூனிஸ்டுப் படைகள் தியான்ஜின் நகரை தேசியவாத அரசிடம் இருந்து கைப்பற்றின.
1966 – நைஜீரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அபூபக்கர் டஃபாவா பாலேவாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
1969 – சோயூஸ் 5 விண்கலத்தை சோவியத் ஒன்றியம் விண்ணுக்கு ஏவியது.
1970 – நைஜீரியாவிடம் இருந்து 32-மாத விடுதலைப் போரின் பின்னர் பயாஃப்ரா கிளர்ச்சியாளர்கள் சரணடைந்தனர்.
1970 – முவாம்மர் அல்-கடாபி லிபியாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1973 – வியட்நாம் போர்: அமைதிப் பேச்சுக்களில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து, அரசுத்தலைவர் ரிச்சர்ட் நிக்சன் வட வியட்நாமில் தாக்குதல்களை இடைநிறுத்தினார்.
1975 – போர்த்துக்கல் அங்கோலாவுக்கு விடுதலை வழங்கியது.
1977 – சுவீடனில் இடம்பெற்ற விமான விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர்.
1981 – லேக் வலேசா தலைமையிலானபோலந்துத் தொழிற்சங்கத் தலைவர்கள் குழு திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரை வத்திக்கனில் சந்தித்தது.
2001 – விக்கிப்பீடியா தொடங்கப்பட்டது.
2005 – ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஈசாவின் ஸ்மார்ட்-1 என்ற லூனார் விண்கலம் சந்திரனில் கல்சியம், அலுமீனியம், சிலிக்கன் மற்றும் இரும்பு ஆகியவற்றைக் கண்டுபிடித்தது.
2005 – செல்பேசிகளில் தமிழில் குறுஞ்செய்திகளை அனுப்பும் செல்லினம் என்ற மென்பொருள் மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
2007 – சதாம் உசேனின் சகோதரர் பர்சான் இப்ராகிம், மற்றும் ஈராக்கின் முன்னாள் பிரதம நீதியரசர் அவாத் ஹமீட் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.
2013 – எகிப்தில் இராணுவ வீரர்களி ஏற்றிச் சென்ற தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 19 பேர் கொல்லப்பட்டனர்.
2016 – சோமாலியாவில் அல்-சபாப் இசுலாமியப் போராளிகளுடனான சமரில் கென்ய இராணுவத்தினர் 150 பேர் கொல்லப்பட்டனர்.
2019 – சோமாலிப் போராளிகள் கென்யா, நைரோபியில் உணவகம் ஒன்றைத் தாக்கி 21 பேரைக் கொன்றனர், 19 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்

1622 – மொலியர், பிரான்சிய நடிகர் (இ. 1673)
1842 – மேரி மக்கிலொப், ஆத்திரேலியக் கத்தோலிக்கப் புனிதர் (இ. 1909)
1850 – சோஃபியா கோவலெவ்சுகாயா, உருசிய-சுவீடன் கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. 1891)
1868 – டி. எம். நாயர், இந்திய அரசியல்வாதி (இ. 1919)
1887 – திரிபுரனேனி இராமசாமி, ஆந்திர வழக்கறிஞர், நாடக ஆசிரியர், சீர்திருத்தவாதி (இ. 1943)
1892 – மயிலை சிவ முத்துக்குமாரசுவாமி, தமிழறிஞர், தமிழாசிரியர் (இ. 1968)
1908 – எட்வர்ட் டெல்லர், அங்கேரிய-அமெரிக்க இயற்பியலாளர் (இ. 2003)
1916 – இராஜ அரியரத்தினம், ஈழத்துப் பத்திரிகையாளர், எழுத்தாளர் (இ. 1998)
1917 – கே. ஏ. தங்கவேலு, தமிழ்த் திரைப்பட நடிகர் (இ. 1994)
1918 – ஜமால் அப்துல் நாசிர், எகிப்தின் 2வது அரசுத்தலைவர் (இ. 1970)
1922 – ம. மு. உவைஸ், இலங்கையின் இசுலாமியத் தமிழறிஞர் (இ. 1922)
1923 – ருக்மணிதேவி, இலங்கை நடிகை, பாடகி (இ. 1978)
1926 – காசாபா தாதாசாகேப் சாதவ், இந்திய ஒலிம்பிக் வீரர் (இ. 1984)
1927 – கீர்த்தி நிதி பிஸ்தா, நேபாள அரசியல்வாதி (இ. 2017)
1929 – மார்ட்டின் லூதர் கிங், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கச் செயற்பாட்டாளர் (இ. 1968)
1934 – வி. எஸ். ரமாதேவி, கருநாடகத்தின் 13வது ஆளுநர் (இ. 2013)
1936 – மா. பா. குருசாமி, தமிழக எழுத்தாளர்
1956 – மாயாவதி குமாரி, உத்தரப் பிரதேசத்தின் 23வது முதல்வர்
1962 – மு. அப்துல் சமது, இந்திய முசுலிம் எழுத்தாளர்.
1965 – ஜேம்ஸ் நெஸ்பிட், வட அயர்லாந்து நடிகர்
1966 – பானுப்ரியா, தென்னிந்திய நடிகை
1973 – சுபர்னோ சத்பதி, இந்திய சமூக-அரசியல் தலைவர்
1976 – மோ. ராஜா, தமிழ்த் திரைப்பட இயக்குநர்
1982 – நீல் நிதின் முகேஷ், இந்திய நடிகர், பாடகர்
1984 – விக்டோர் ரசுக், அமெரிக்க நடிகர்

இறப்புகள்

1919 – ரோசா லக்சம்பேர்க், செருமானிய சோசலிச மெய்யியலாளர் (பி. 1871)
1936 – ஹென்ரி ஃபோர்ஸ்டர், ஆத்திரேலியாவின் 7வது ஆளுநர் (பி. 1866)
1939 – நடராசன், தமிழக இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராளி (பி. 1919)
1965 – சு. நடேசபிள்ளை, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, தமிழறிஞர் (பி. 1895)
1965 – தஞ்சை இராமையாதாஸ், தமிழகக் கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் (பி. 1914)
1981 – தேவநேயப் பாவாணர், தமிழறிஞர் (பி. 1902)
1994 – தெ. வ. இராசரத்தினம், இலங்கைத் தமிழ் நீதிபதி, அரசியல்வாதி (பி. 1920)
1998 – குல்சாரிலால் நந்தா, 2-வது இந்தியப் பிரதமர் (பி. 1898)
1999 – மீ. ப. சோமு, தமிழக எழுத்தாளர் (பி. 1921)
2008 – கே. எம். ஆதிமூலம், தமிழக ஓவியர் (பி. 1938)
2008 – ஜான் டி. லாசன், பிரித்தானியப் பொறியியயாளர், இயற்பியலாளர் (பி. 1923)
2012 – ஓமாயி வியாரவாலா, இந்தியாவின் முதல் பெண் புகைப்பட நிருபர் (பி. 1913)
2018 – ஞாநி சங்கரன், தமிழக எழுத்தாளர், நாடகக் கலைஞர், அரசியல் விமர்சகர் (பி. 1954)

சிறப்பு நாள்

மர நாள் (எகிப்து)
இந்திய இராணுவ நாள்
ஆசிரியர் நாள் (வெனிசுவேலா]])
தைப்பொங்கல், (சனவரி 14 அல்லது சனவரி 15)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!