இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஜனவரி 15)
இந்திய ராணுவ தினமின்று
1948 ஜன., 15ல், ராணுவ தளபதி பொறுப்பை, ஆங்கிலேயர் ராய் பட்சரிடம் இருந்து, இந்தியாவின் ‘கரியப்பா’ ஏற்றார். இந்த வரலாற்று நிகழ்வை கவுரவிக்கும் விதமாகவும், நாட்டுக்காக உயர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், ஜன., 15ம் தேதி, இந்திய ராணுவ தினம் கடைபிடிக்கப்படுகிறது. எதிரிகளிடமிருந்து நாட்டையும், மக்களையும் காப்பாற்றுவதோடு, இயற்கை சீற்றம், தேசிய பேரிடர், உள்நாட்டு கலவரம் உள்ளிட்ட நிகழ்வுகளின் போது மீட்பு மற்றும் அமைதி பணிகளிலும் ராணுவ வீரர்கள் ஈடுபடுகின்றனர். ராணுவ வீரர்களின் சேவைகளுக்கு இன்றொரு நாள் மட்டும் எல்லா நாட்களும் மக்கள் மதிப்பு கொடுக்க வேண்டும்.
மாட்டுப்பொங்கல்
தைத் திருநாளின் 2ஆம் நாளான இன்று உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி கூறும் விதமாக மாட்டுப் பொங்கல் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மாடுகள் குளிப்பாட்டப்பட்டு சந்தனம், குங்குமம் இட்டு மாலைகள் மற்றும் சலங்கைகள் கொண்டு அலங்கரிக்கப்படுகின்றன. சர்க்கரை மற்றும் வெண் பொங்கல் செய்யப்பட்டு அவற்றுடன் செங்கரும்பு, பழவகைகள் ஆகியவை மாடுகளுக்கு படையலிடப்பட்டு வழிபாடு நடத்தி பின் வழிபாட்டுப் பொருட்கள் மாடுகளுக்கு உணவாக வழங்கப்படுகின்றன. அன்றைய தினம் ஜல்லிக்கட்டு, உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. மேலும் உழவர் நண்பர்களாக விளங்கும் மாடுகளை குளிப்பாட்டி, சந்தனம், குங்குமம் வைத்து, மலர் மாலை அணிவித்து, மாட்டின் கொம்புகளுக்கு வர்ணம் பூசி அலங்கரித்து விவசாயிகள் அதனை வழிபடுவர்.
தேவநேயப் பாவாணர் நினைவு நாளின்று
மொழிஞாயிறு என்று போற்றப்படும் தமிழறிஞர், சொல் ஆராய்ச்சி வல்லுநர், பன்மொழி வல்லுநர் தேவநேயப் பாவாணர் நினைவு நாளின்று “மொழிஞாயிறு” என்று போற்றப்படும் தேவநேயப் பாவாணர் 1902ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி நெல்லை மாவட்டம், சங்கரநயினார் கோயிலில், ஞானமுத்தன் – பரிபூரணம் ஆகிய இருவருக்கும் பத்தாவது மகனாகப் பிறந்தார். பெற்றோர் இட்டபெயர் “தேவநேசன்”. இளம் பருவத்திலேயே தமது தாய் – தந்தையரை இழந்தார். ஐந்தாம் அகவையிலேயே கொடிய வறுமைக்கு ஆளானார். அதனால் தாயைப் பெற்ற தந்தையார் குருபாதம் என்பவரின் அரவணைப்பில் வளர்ந்தார். அவரது உதவியால் வட ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள ஆம்பூர் மிசௌரி நல்லஞ்சல் உலுத்தரின் விடையூழிய நடுநிலைப்பள்ளியில் பயின்றார். பின்னர் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் திருச்சபை விடையூனியக் கூட்டுறவு உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். 1921ம் ஆண்டு ஆசிரியப் பணிக்குச் செல்ல அவர் விரும்பியபோது, அவருக்கு, அவரது ஆசிரியர், பண்டிதர் மாசிலாமணி என்பவர் ஒரு சான்றிதழ் வழங்கினார். அதில் பாவாணரின் பெயரை, “தேவநேசக் கவிவாணன்” என்று குறிப்பிட்டார். பின் அப்பெயரையே தம் பெயராகக் கொண்டார் பாவாணர். அவ்வாண்டிலேயே தாம் இளமையில் பயின்ற ஆம்பூர் நடுநிலைப்பள்ளியில் உதவித் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்தார். 1924ம் ஆண்டு மதுரைத் தமிழ்ச்சங்கப் பண்டிதத் தேர்வு எழுதி வென்றார். “நேசன்” என்பதும் “கவி” என்பதும் வடசொற்கள் என்பதை அறிந்துகொண்ட பின்னர், தம் பெயரைத் “தேவநேயப் பாவாணர்” என அமைத்துக்கொண்டார். சுருக்கமான சில தகவல்கள்
1925-ல் சிறுவர் பாடல் திரட்டு என்ற இவரது முதல் நூல் வெளிவந்தது. தொல்காப்பிய சூத்திரக் குறிப்புரை, உரிச்சொல் விளக்கம், செந்தமிழ் வரம்பீட்டின் சிறப்பு, தென்மொழி என ஏராளமான கட்டுரைகள், கட்டுரைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் இசைக் கலம்பகம், இயற்றமிழ் இலக்கணம் குறிப்பிடத்தக்கவை.
2 பல தமிழ் அறிஞர்களைப் பற்றி நூல்கள் எழுதியுள்ளார். ஆங்கிலத்திலும் பல புத்தகங்கள், கட்டுரைகளை எழுதியவர். 40-க்கும் மேற்பட்ட நூல்கள், 150-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். தமிழின் சிறப்பு குறித்து பல்வேறு இடங்களில் உரையாற்றியுள்ளார். ஆங்கிலத்திலும் சிறந்த நடையுடன் பேசக்கூடியவர். 3.அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் திராவிட மொழி ஆராய்ச்சித் துறையின் ரீடராக (1956 1961) பணி யாற்றினார். வேலையை இழந்து கஷ்டப்பட்ட நேரத்தில்கூட மொழி ஆராய்ச்சியை இவர் நிறுத்தியது இல்லை.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய இந்திய மொழிகள், ஆங்கிலம், பிரெஞ்சு, லத்தீன், கிரேக்கம் ஆகிய வெளிநாட்டு மொழிகள் உட்பட 17 மொழிகளின் இலக்கணங்களைக் கற்றவர்.
5 ‘தமிழ்ச் சொல் பிறப்பியல் அகரமுதலியின் தந்தை’ என்று போற்றப்படுகிறார். 1974-ல் தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலித் திட்டத்தின் முதல் இயக்குநராகப் பொறுப்பேற்று முத்திரை பதித்தவர்.
‘உலகத்தின் முதல் மொழி தமிழ். உலகின் முதல் மனிதன் தமிழன்’ என்று கூறியவர். ‘தமிழ் திராவிட மொழிகளுக்குத் தாய்; ஆரிய மொழிகளுக்கு மூலம்’ என ஆதாரங்களுடன் வாதிட்டவர்.
கிரேக்கம், லத்தீன், சமஸ்கிருதத்தில் பல தமிழ்ச் சொற்கள் இருப்பதை உறுதிசெய்து காட்டியவர். 40-க்கும் மேற்பட்ட மொழிகளின் சொல் இயல்புகளைக் கற்று சிறப்பாக சொல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர். தமிழ்ப் பெருங்காவலர், செந்தமிழ் நாவலர் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
தமிழுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டவர். தனித்தமிழ் இயக்கத்தின் வேர்களில் ஒருவராக கருதப்படுபவர். ‘மொழிஞாயிறு’ என்று போற்றப்படும் தேவநேயப் பாவாணர் 79ஆம் வயதில் மறைந்தார்.
இவரது இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் நடத்தப்பட்டது. அன்றைய முதல் எம்.ஜி.ஆர், அவருடைய இறுதிசடங்கில் கலந்துகொண்டார்.
ஆதிமூலம் நினைவு நாள்
தமிழ்ச் சமூக ஆளுமை உருவாக்கத்தில் இருபதாம் நூற்றாண்டில் தமிழ்க் கவிதைக்கு பாரதி ஒரு குறியீடு. தமிழ்ப் புனைகதைக்குப் புதுமைப்பித்தன் ஒரு குறியீடு. இவ்வகையில், ஓவியக் கலைக்கு ஆதிமூலம் ஒரு குறியீடு. அதீத கற்பனை, வித்தியாசமான கோணம், கோட்டோவியம் என்ற சொல்லாடலுக்கு முழு தகுதியுடைய ஓவியரிவர்.
காசாபா தாதாசாகேப் சாதவ் பர்த் டே டுடே!
காசாபா தாதாசாகேப் சாதவ் (Khashaba Dadasaheb Jadhav, ஜனவரி 15, 1926 – ஆகஸ்ட் 14, 1984) தனிநபர் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கான முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற இந்தியர் ஆவர்.
இவர் 1952 ஆண்டு ஹெல்சிங்கியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் மற்போர் விளையாட்டில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். 1996 ஆண்டு லியாண்டர் பயஸ் டென்னிசில் வெண்கலப் பதக்கத்தைப் பெறும் வரை இதுவே இந்தியர்களின் ஒரே தனிநபர் பதக்கம் ஆகும். இவர் ஒரு விளையாட்டு வீரர் ஆக இந்தியாவுக்கு பெருமை சேர்த்தாலும், இவரின் இறுதிக் காலம் வறுமையிலே முடிந்ததெல்லாம் தனி எபிசோட்.
ஞாநி சங்கரன் நினைவு நாள்!
தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க பத்திரிகையாளர்களில் ஒருவர், ஞாநி சங்கரன். செங்கல்பட்டில் பிறந்த அவர், எழுத்தாளர், நாடகக் கலைஞர், அரசியல் விமர்சகர் என்று பல்வேறு தளங்களில் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். அவர், சமகால அரசியல்குறித்த விமர்சனங்களையும், கருத்துகளையும் ஊடகங்களில் வெளிப்படுத்திவந்தார். 1971-ம் ஆண்டு, காமராஜர்-ராஜாஜி-சோ ஆகியோரின் கூட்டணியை எதிர்த்தும், இந்திரா காந்தி – கருணாநிதி கூட்டணியை ஆதரித்தும் பிரசாரம் செய்தார். 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து போட்டியிட்டார் ஞாநி. இதில் தோல்வியைச் சந்தித்த அவர் பின்னாளில் ஆம் ஆத்மிக்கு உடல் நலம் சரியில்லை என்று விமர்சித்து கட்சியிலிருந்தும் விலகினார். நாடகங்களுக்குகாக பரீக்ஷா என்ற நாடகக் குழுவை நடத்தி வந்தவர். ஜனரஞ்சக நாடகங்கள் மிகுந்திருந்த காலத்தில் நவீன நாடகங்களை மேடையேற்ற முக்கியமான நாடகக் குழுவாக பரீக்ஷா இருந்தது. ஞாநி இக்குழுவுக்காக பலூன், வட்டம், எண் மகள், விசாரணை, சண்டைக்காரிகள் போன்ற நாடகங்களை எழுதி இயக்கினார். இலக்கிய விவாதங்களுக்காக கேணி என்ற அமைப்பை ஏற்படுத்தி தனது வீட்டிலேயே பல கூட்டங்களை நடத்தியவர்.
இந்தியாவில் இரண்டு முறை இடைக்கால பிரதமராக இருந்த குல்சாரி லால் நந்தா அவர்களின் நினைவு நாள் இன்று.
முதல் பிரதமர் நேரு அவர்கள் காலமான 1964ஆம் ஆண்டும், இரண்டாம் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி காலமான 1966ஆம் ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் பதவி ஏற்கும் வரை குல்சாரி லால் நந்தா இடைக்கால பிரதமராக செயல்பட்டார். மகாத்மா காந்தியின் கொள்கைகள் மற்றும் போதனைகளால் ஈர்க்கப்பட்டு பொது வாழ்வில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட தலைவர்கள், எண்ணில் அடங்காதவர்கள். குறிப்பாக, காந்திய கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள், தங்கள் வாழ்வின் இறுதி வரை அதை பின்பற்றி வாழ்ந்து காட்டினர். அத்தகைய தலைவர்களில் ஒருவர்தான் பாரத ரத்னா குல்சாரி லால் நந்தா. நாடு மிக முக்கியமான நெருக்கடிகளை சந்தித்த இருவேறு சமயங்களில் இடைக்கால பிரதமராக இருந்தவர் குல்சாரி லால் நந்தா. இந்திய விடுதலைப் போராட்டத்தின் ஓர் அங்கமான ஒத்துழையாமை இயக்கம் வாயிலாக பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்தவர். விடுதலைக்கு முன்னரும், அதன் பின்னரும் பலமுறை மக்கள் பிரதிநிதியாக பதவி வகித்துள்ளார். தொழிலாளர் நலன் சார்ந்த சீர்திருத்தங்களை முன்னெடுத்த பிதாமகன் குல்சாரி லால் நந்தா.
2001 – விக்கிப்பீடியா தொடங்கப்பட்டது.
விக்கிபீடியா என்பது விக்கி அடிப்படையிலான எடிட்டிங் முறையைப் பயன்படுத்தி தன்னார்வத் தொண்டு ஆசிரியர்களின் சமூகத்தால் உருவாக்கப்பட்ட மற்றும் திறந்த ஒத்துழைப்புத் திட்டமாகப் பராமரிக்கப்படும் ஒரு பன்மொழி ஆன்லைன் கலைக்களஞ்சியம் ஆகும். இது உலகளாவிய வலையில் மிகப் பெரிய மற்றும் மிகவும் பிரபலமான பொதுக் குறிப்புப் பணியாகும், மேலும் இது ஜனவரி 2020 வரை அலெக்சாவால் தரவரிசைப்படுத்தப்பட்ட மிகவும் பிரபலமான வலைத்தளங்களில் ஒன்றாகும். இது பிரத்தியேகமான இலவச உள்ளடக்கம் மற்றும் வணிக விளம்பரங்கள் இல்லாதது மற்றும் விக்கிமீடியா அறக்கட்டளைக்கு சொந்தமானது மற்றும் ஆதரிக்கப்படுகிறது. , ஒரு இலாப நோக்கற்ற அமைப்பு முதன்மையாக நன்கொடைகள் மூலம் நிதியளிக்கப்படுகிறது.
விக்கிப்பீடியா நூலகர்கள் மற்றும் பட்டியல்களுக்கு மிக முக்கியமான தகவல் ஆதாரமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு நூலகப் பயனருக்குத் தேவைப்படும் தகவல் பல நேரங்களில் நூலகர் அல்லது அட்டவணையாளருக்குத் தேவைப்படும் அல்லது புத்தகத்தின் மெட்டாடேட்டாவை அதன் அட்டவணைப் பதிவில் வழங்குவதற்காக புத்தகத்தின் தலைப்பைப் புரிந்துகொள்வதற்கு உதவுவதற்கு அவர்/அவள் சில தலைப்பைப் பற்றி அறிய விரும்புகிறார். விக்கிப்பீடியாவில் நூலகர்கள் பங்களிப்பாளர்களாக மாற விக்கிபீடியா ஊக்கமளிக்கிறது.
விக்கிபீடியா ஜனவரி 15, 2001 அன்று ஜிம்மி வேல்ஸ் மற்றும் லாரி சாங்கர் ஆகியோரால் தொடங்கப்பட்டது. சாங்கர் அதன் பெயரை “விக்கி” (“விரைவுக்கான ஹவாய் வார்த்தை) மற்றும் “என்சைக்ளோபீடியா” என்பதன் போர்ட்மேன்டோவாக உருவாக்கினார்.ஆரம்பத்தில் ஆங்கில மொழி கலைக்களஞ்சியம், பிற மொழிகளில் விக்கிபீடியாவின் பதிப்புகள் விரைவாக உருவாக்கப்பட்டன.குறைந்தது 6,007,958 கட்டுரைகளுடன், ஆங்கிலம் மொத்தத்தில் உள்ள 290க்கும் மேற்பட்ட விக்கிபீடியா கலைக்களஞ்சியங்களில் விக்கிபீடியா மிகப்பெரியது. விக்கிபீடியா 301 வெவ்வேறு மொழிகளில் 40 மில்லியனுக்கும் அதிகமான கட்டுரைகளைக் கொண்டுள்ளது மற்றும் பிப்ரவரி 2014 இல் இது 18 பில்லியன் பக்க பார்வைகளை எட்டியது மற்றும்
2005 ஆம் ஆண்டில், நேச்சர் என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா மற்றும் விக்கிபீடியாவிலிருந்து 42 கடினமான அறிவியல் கட்டுரைகளை ஒப்பிட்டு ஒரு சக மதிப்பாய்வை வெளியிட்டது. மற்றும் விக்கிப்பீடியாவின் துல்லியத்தன்மையின் அளவை நெருங்கியது பிரிட்டானிகா, அனைத்து கட்டுரைகளின் தற்செயலான மாதிரிகள் அல்லது சமூக அறிவியல் அல்லது சர்ச்சைக்குரிய சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்ட ஒரு ஆய்வில் அது அவ்வளவு சிறப்பாக செயல்பட்டிருக்காது என்று விமர்சகர்கள் பரிந்துரைத்தாலும், டைம் இதழ் அனுமதிக்கும் திறந்த-கதவுக் கொள்கையைக் கூறியது எவரும் திருத்த வேண்டும் என்றால் விக்கிப்பீடியாவை உலகின் மிகப்பெரிய மற்றும் சிறந்த கலைக்களஞ்சியமாக மாற்றியது மற்றும் ஜிம்மி வேல்ஸின் தொலைநோக்கு பார்வைக்கு சான்றாக இருந்தது.
1996 ஆம் ஆண்டில், வெற்றிகரமான பத்திர வர்த்தகரான ஜிம்மி வேல்ஸ், கலிபோர்னியாவில் உள்ள சான் டியாகோவிற்கு சென்று Bomis, Inc., என்ற வலை போர்டல் நிறுவனத்தை நிறுவினார். மார்ச் 2000 இல் வேல்ஸ், லாரி சாங்கரை தலைமை ஆசிரியராகக் கொண்டு, இலவச ஆன்லைன் கலைக்களஞ்சியமான நுபீடியாவை நிறுவியது. நுபீடியா, ஏற்கனவே உள்ள கலைக்களஞ்சியங்களைப் போலவே, நிபுணர்களின் ஆலோசனைக் குழு மற்றும் நீண்ட மறுஆய்வு செயல்முறையுடன் ஒழுங்கமைக்கப்பட்டது. ஜனவரி 2001 வாக்கில் இரண்டு டசனுக்கும் குறைவான கட்டுரைகள் முடிக்கப்பட்டன, மேலும் சாங்கர் விக்கி மென்பொருளை அடிப்படையாகக் கொண்ட ஒரு திறந்த-மூல கலைக்களஞ்சியத்துடன் நுபீடியாவை கூடுதலாக்க வாதிட்டார். ஜனவரி 15, 2001 இல், விக்கிப்பீடியா Nupedia.com இன் அம்சமாகத் தொடங்கப்பட்டது, ஆனால், ஆலோசனைக் குழுவின் ஆட்சேபனைகளைத் தொடர்ந்து, சில நாட்களுக்குப் பிறகு அது ஒரு சுயாதீன இணையதளமாக மீண்டும் தொடங்கப்பட்டது. விக்கிபீடியா அதன் முதல் ஆண்டில், பிரெஞ்சு, ஜெர்மன், போலிஷ், டச்சு, ஹீப்ரு, சீனம் மற்றும் எஸ்பெராண்டோ உட்பட 18 மொழிகளில் சுமார் 20,000 கட்டுரைகளாக விரிவடைந்தது. 2003 இல் நுபீடியா நிறுத்தப்பட்டது மற்றும் அதன் கட்டுரைகள் விக்கிபீடியாவிற்கு மாற்றப்பட்டன.