திருப்பாவை பாடல் 30
திருப்பாவை பாடல் 30
வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.பாடல்
பொருள்: அலைகள் அதிகமாக காணப்படும் பாற்கடலைக் கடைந்த மாதவனும் கேசி என்ற அரக்கனை கொன்ற கேசவனுமான கண்ணனை அழகு முகம் கொண்ட பெண்கள் சிரமப்பட்டு தரிசிக்கிறார்கள்.
ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த குளிர்ந்த தாமரை போன்ற முகத்தையுடைய பெரியாழ்வாரின் பெண்ணான ஆண்டாள், இனிய தமிழில் 30 பாடல்களை பாடி பாமாலை தொடுத்திருக்கிறாள்.
இதை படித்தால் திருமாலின் ஆசி கிடைக்கும்.