வைகுண்ட ஏகாதசி விரதம்.
வைகுண்ட ஏகாதசி விரதம்.
மகாவிஷ்ணுவின் பிடித்தமான மாதமாக கருதப்படும் மார்கழி மாதத்தில் வரக்கூடிய ஏகாதசி மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.
மார்கழி மாதத்தில் வளர்பிறையில் வரும் ஏகாதசி இருக்கக்கூடிய அனைத்து ஏகாதசிகளிலும் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
அந்த ஏகாதசி திருநாள் தான் வைகுண்ட ஏகாதேசி விரதம் என்று பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஏகாதசி திருநாளுக்கு சமமான விரதம் ஒன்று இங்கு கிடையாது.
மார்கழி மாதத்தில் வளர்பிறை நாளில் வரக்கூடிய ஏகாதசி மகாவிஷ்ணுவின் நேரடி அருளை பெற்று தரும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.
ஏகாதசி விரதம் கடைபிடிப்பது அஸ்வமேத யாகம் செய்த பலனை கொடுக்கும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.
இந்த 2025 ஆம் ஆண்டு வைகுண்ட ஏகாதசியானது வரும் ஜனவரி மாதம் 10ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
விஷ்ணு வழிபாடு…
விஷ்ணு பகவானுக்கு உகந்த பண்டிகை தினமாக வைகுண்ட ஏகாதசி திகழ்ந்து வருகிறது. இந்த திருநாளில் பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் என புகழ்ந்து பாராட்டப்படும் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெறும்.
இந்த பரமபத வாசல் வழியாக பக்தர்கள் சென்று வந்தால் முக்தி கிடைக்கும், நமது வாழ்க்கையில் தேவையான செல்வங்கள் அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.
வைகுண்ட ஏகாதசி திருநாளில் விரதம் இருந்து வழிபட்டால் விரதம் இருக்கும் பக்தர்களுக்கு மூன்று கோடி தேவர்களும் அருள் புரிவார்கள் என்பது ஐதீகமாகும். இந்த மார்கழி மாத ஏகாதசி திதி திருநாளில் வழிபட்டால் வைகுண்ட பதவிக்கு நிகரான செல்வம், செழிப்பு, ஞானம், அறிவு, இன்பம் உள்ளிட்டவைகள் அனைத்தும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.
மாத ஏகாதசி
மாதாமாதம் வரக்கூடிய ஏகாதசி தினத்தன்று விரதம் இருந்து வழிபட்டால் நமது பிறவி துயர் அனைத்தும் நீங்கி வைகுண்ட பதவி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். ஒரு ஆண்டு முழுவதும் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க இயலாதவர்கள், இந்த மார்கழி மாதத்தில் வளர்பிறையில் வரக்கூடிய ஏகாதசி திருநாளான வைகுண்ட ஏகாதசிகள் மட்டும் விரதம் இருந்து வழிபட்டால் மொத்த பலன்களும் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.
வைகுண்ட ஏகாதசி திருநாளில் காலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டில் இருக்கக் கூடிய பெருமாளின் முன் அமர்ந்து விஷ்ணு பகவானின் சகஸ்ரநாமம் சொல்லி வழிபாடு செய்ய வேண்டும் அன்றைய தினம் விரதம் இருந்து துவாதசி நேரத்தில் விரதத்தை நிறைவேற்ற வேண்டும்.
அதேசமயம் விஷ்ணு பகவானின் பாடல்கள் ரங்கநாதர் ஸ்துதி உள்ளிட்டவைகளை ஓதுவது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசி 2025…
இந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வைகுண்ட ஏகாதசி திருநாள் வருகிறது.
ஜனவரி ஒன்பதாம் தேதி பகல் 12.04 மணிக்கு தொடங்கி ஜனவரி 10ஆம் தேதி அன்று காலை 10.02 மணி வரை வைகுண்ட ஏகாதசி திதி உள்ளது.
அதே நாளில் முருக பெருமானுக்கு கார்த்திகை நட்சத்திரம் இணைந்து வருகின்ற காரணத்தினால் பக்தர்கள் வேண்டுதல்கள் அனைத்தும் சிறப்பாக நிறைவேறும் மிகவும் சிறப்பான நாளாக அன்றைய தினம் கருதப்படுகிறது.
ஓம் நமோ நாராயணா