திருப்பாவை பாசுரம் 21 – ஏற்ற கலங்கள்

“உலகிற்கு ஒளியாய் திகழும் கண்ணனே! எழுந்தருள்வாயாக!”

பாசுரம்

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப

மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்

ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்

ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்

தோற்றமாய் நின்ற சுடரே துயில்எழாய்

மாற்றார் உனக்கு வலிதொலைந்துஉன் வாசற்கண்

ஆற்றாது வந்துஉன் அடிபணியு மாபோலே

போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.

பாசுர விளக்கம்

கறக்கும் பாலை வாங்கும் பாத்திரங்கள் பொங்கி மேலே வழிய தங்கு தடையில்லாமல் பாலை கொடுக்கும் வள்ளல் போன்ற பசுக்களை அதிகம் பெற்றுள்ள நந்தகோபனின் குமாரனே! கண் விழித்துக் கொள்வாயாக!

சக்தி உள்ளவனே, பெரியவனே! உலகத்தில்

அவதாரம் செய்த, ஒளி படைத்தவனே! எழுந்திரு.

எதிரிகள் உன்னிடம் வலிமையிழந்து உன் வாசலில்

கதியற்று வந்து உன் திருவடிகளில் பணிவது போல

நாங்கள் உன்னைத் துதித்துப் பாட வந்துள்ளோம்!
ஆண்டாள் திருவடிகளே சரணம்

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...