திருவெம்பாவை பாடல் 4
திருவெம்பாவை பாடல் 4
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாமாட்டோம் நீயேவந்
தெண்ணிக் குறையில் துயிலேலோ ரெம்பாவாய். ]
ஒள் நித்தில நகையாய், இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளி மொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக் கொண்டு உள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக்கு ஒருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்து உள்ளம்
உள் நெக்கு நின்று உருக யாம் மாட்டோம் நீயேவந்து
எண்ணிக் குறையில் துயில் ஏல் ஓர் எம்பாவாய்.
ஒள் நித்தில நகையாய்,
“ஒளி நிறைந்த மதிமுத்தைப் போன்று
வெண்மையாக சிரிப்பவளே
பற்களை உடையவளே
இன்னம் புலர்ந்தின்றோ!
காலைமணி ஆறு ஆகிவிட்டது.
எல்லா கோவில்களிலும் பூஜைமுடிந்து
பிரசாதமே கொடுத்து நாங்கள் சாப்பிட்டாகிவிட்டது.
ஆனால்
இன்னும் உனக்கு மட்டும்பொழுது புலரவில்லையா
“எனத் தோழிகள் கேட்டனர்.
வண்ணக் கிளி மொழியார் எல்லாரும் வந்தாரோ
அதற்குத் தூங்கிக் கொண்டிருந்தவள்“வண்ணக்கிளி போன்ற இனிமையாகப் பேசக்கூடிய மற்ற எல்லாத் தோழிகளும் வந்து விட்டனரா
“என்று கேட்கிறாள்
அவ்வளவும், எண்ணிக் கொண்டு, உள்ளவா சொல்லுகோம்.
அதற்குத் தோழிகள், “எத்தனை பேர் வந்திருக்கிறார்கள் என்று ஏற்கனவே எண்ணிப் பார்த்து வந்து உள்ளதைத்தான் சொல்கிறோம்.
விண்ணுக்கு ஒருமருந்தை வேத விழுப்பொருளைக் கண்ணுக்கு இனியானைப் தேவர்களுக்கு அமுதம் போன்ற, வேதத்தின் உட்பொருளான, கண்ணுக்கு இனியவனான சிவனைப்
பாடிக் கசிந்து உள்ளம் உள் நெக்கு நின்று உருகயாமாட்டோம்
பாடிக் கசிந்து உள்ளம் உருகி நிற்கும் நாங்களா பொய் சொல்வோம் மாட்டோம்.
நீயேவந்து எண்ணிக் குறையில் துயில் உனக்கு நம்பிக்கை இல்லை எனில் நீயே எழுந்து வந்து எண்ணிப் பார்,
எண்ணிக்கை குறைந்தால் மறுபடியும் போய் தூங்கிக் கொள்.
கண்ணைத் துயின்று, அவமே காலத்தைப் போக்காதே,
ஏல் ஓர் எம்பாவாய். நீ தூங்கி, வீணாய்க் காலத்தைப் போக்காதே, எழு எம்பாவாய்!”
பொருள்:
“ஒளி நிறைந்த முத்தைப் போன்று வெண்மையாக சிரிப்பவளே பற்களை உடையவளே இன்னும் உனக்கு மட்டும் பொழுது புலரவில்லையா
“எனத் தோழிகள் கேட்க,
அதற்குத் தூங்கிக் கொண்டிருந்தவள்“
நான் மட்டும் தான் தூங்குகிறேனா
வண்ணக்கிளி போன்ற இனிமையாகப் பேசக்கூடிய மற்ற எல்லாத் தோழிகளும் வந்து விட்டனரா
“என்று கேட்கிறாள்
அதற்குத் தோழிகள் “எத்தனை பேர் வந்திருக்கிறார்கள் என்று ஏற்கனவேஎண்ணிப் பார்த்து வந்து உள்ளதைத்தான் சொல்கிறோம்.
தேவர்களுக்கு அமுதம் போன்ற, வேதத்தின் உட்பொருளான, கண்ணுக்கு இனியவனான சிவனைப்பாடிக் கசிந்து உள்ளம் உருகி நிற்கும் நாங்களா பொய் சொல்வோம்மாட்டோம்.
உனக்கு நம்பிக்கை இல்லை எனில் நீயே எழுந்து வந்து எண்ணிப் பார்,
எண்ணிக்கை குறைந்தால் தூங்கிக் கொள். நீ தூங்கி, வீணாய்க் காலத்தைப் போக்காதே,
நாளைக்காவது சீக்கிரம் காலை
பூஜை ஆரம்ப காலத்தில் நேரத்தில்
எழு எம்பாவாய்!”
மாயையில் சிக்கிக் கொண்ட மனம், சோம்பலில் தொடர வேண்டி எல்லா வகையான முயற்சிகளையும் மேற்கொள்ளும். அதனை அதன் போக்கில் விடாது, முயற்சி செய்து, இறைவனை நோக்கித் திருப்ப வேண்டும் என்கிறார் மாணிக்க வாசகர்.