திருப்பாவை-பாடல் 4′
திருப்பாவை-பாடல் 4′
ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
பொருள்: மேகத்திற்கு அதிபதியே! நீ கடல் நீர்
முழுவதையும் முகர்ந்து கொண்டு மேலே சென்று,
உலகாளும் முதல்வனான
கண்ணனின் நிறம் போல்
கருப்பாகி விடு. வலிமையான
தோள்களையுடைய பத்மநாபனின் கையிலுள்ள பிரகாசமான சக்கரத்தைப் போல் மின்னலை வீசு. வலம்புரி சங்கின் ஓசை போல் இடி ஒலியெழுப்பு.
வெற்றியை மட்டுமே ஈட்டும் திருமாலின் சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் அம்பு போல் மழை பொழி. அம்மழையால் இந்த உலகில் செழிப்புடன் வாழ்வோம்.
அத்துடன் அந்த நீரில் எங்கள் மார்கழி நீராடலை மகிழ்வுடன் நிகழ்த்துவோம்.